மேலும் அறிய

DMK vs Congress : காங்கிரஸால தான் வெற்றியே பெற்றீங்க.! இனி கடும் விளைவுகளை சந்திப்பீங்க- திமுகவை எச்சரிக்கும் ராஜேஸ்குமார்

DMK vs Congress : தேர்தல் படுதோல்விக்குப் பிறகும்கூட திமுக.வினர் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியைத்தான் மக்கள் விரும்பி ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் என்பது வரலாறு என அமைச்சர் ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸை விளாசிய திமுக

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்துள்ள நிலையில், கூட்டணியில் இருந்த காங்கிரஸ் ஒரே நாளில் தவெகவிற்கு பல்டி அடித்தது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியை திமுக விமர்சித்து வருகிறது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற திமுக இளைஞர் அணி ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரசுக்குப் புதிதில்லைதான் என கடுமையாக விமர்சனம் செய்தது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமைச்சரும், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செ. ராஜேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக இளைஞர் அணிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைக் கடுமையாக விமரிசனம் செய்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இதில், காங்கிரஸ் கட்சி  பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு திமுகவின் முதுகில் குத்தி துரோகம் இழைத்துவிட்டதாகக் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 

தேர்தல் தோல்விக்கு பிறகும் திருந்தவில்லையே

திமுக – காங்கிரஸ் கூட்டணி என்பது பரஸ்பர நலன்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட்டு வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம். திமுக போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியின்  வாக்குகளும், காங்கிரஸ் போட்டியிட்ட 28 இடங்களில் திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வாக்குகளும்  வழங்கப்பட்டிருக்கின்றன.

‘இந்தக் கூட்டணி அமைப்பில் திமுக.வின் வாக்குகளால்தான் காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் வெற்றி பெற்றார்கள்’ என்று தேர்தல் தீர்ப்பு வெளிவந்த பிறகு பேசுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது திமுக.வின் மேலாதிக்க மனோபாவத்தைதான் வெளிப்படுத்துகிறது. தேர்தல் படுதோல்விக்குப் பிறகும்கூட திமுக.வினர் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் பங்கேற்கிற கூட்டணியைத்தான் மக்கள் விரும்பி ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள் என்பது வரலாறு.

திமுக.வின் படுதோல்விக்கு என்ன காரணம்? 

தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது, வெற்றி பெற்ற பிறகு தனித்து ஆட்சியை அமைப்பது, தேர்தல் வெற்றிக்கு உதவிய கூட்டணிக்  கட்சிகளுக்கு ஆட்சியில் பங்குதர மறுப்பது. இவ்விதம் 60 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட நியாயமற்ற அணுகுமுறையைத்தான் தவெக நிகழ்த்திய விசில் புரட்சி மூலம் முறியடித்துக் காட்டியிருக்கிறது.  தவெகவின் விக்கிரவாண்டி முதல் கூட்டத்திலேயே ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று அதன் தலைவர் விஜய் அவர்கள் பிரகடனம் செய்தார். அதை ஏற்ற தமிழக மக்கள், அமோக ஆதரவோடு தவெகவை ஆட்சியில் அமர்த்தியிருக்கிறார்கள்.

ஆட்சியில் பங்கு வழங்குகிற தவெக தலைவர் விஜய் அவர்களின் விரிந்த ஜனநாயக உணர்வை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுதான், திமுக கூட்டணியில் நீண்டகாலமாகப் புழுக்கதோடு இருந்த காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் தவெக வழங்கிய ஆட்சியில் பங்கேற்றுக்கொண்டு அமைச்சரவையில் இணைந்திருக்கிறார்கள். இது கடந்த 60 ஆண்டுகளில் தமிழக அரசியலில் நிகழாத அற்புதமாகும்.

 கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்- காங்கிரஸ் எச்சரிக்கை

காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்  கட்சிகளின் வாக்குகள் இல்லாமலேயே திமுக வெற்றி பெறும் என்று நினைத்திருந்தால் கூட்டணியைத் தவிர்த்திருக்கலாம். ஆனால், பல்வேறு இழுபறிகளுக்கு மத்தியிலும் கூட்டணியை ஒருங்கிணைப்பதில் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்துகொண்ட முயற்சியை யாரும் மறக்க முடியாது. 1967 முதல் எந்தத் தேர்தலிலும் திமுகவோ, அதிமுகவோ கூட்டணி இல்லாமல் போட்டியிட்டதும் கிடையாது, வெற்றி பெற்றதும் கிடையாது.

எனவே, கடந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பைப்  பெயரளவில் ஏற்றுக்கொள்ளாமல்,  மனப்பூர்வமாகத்  மதிப்பதோடு, நேற்று வரை  கூட்டணியில் இருந்த கட்சிகளை வரம்புமீறி இழிவாக விமரிசிப்பதைத் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். தொடர்ந்து இத்தகைய விமரிசனங்களை  திமுக மேற்கொள்ளுமேயானால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேருமென்று  எச்சரிக்க விரும்புகிறோம் என ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார். 

Advertisement

தலைப்பு செய்திகள்

IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
Pa Ranjith: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரம்; சிபிஐ விசாரணை கேட்ட விஜய் அரசுக்கு பா.ரஞ்சித் பாராட்டு
Pa Ranjith: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரம்; சிபிஐ விசாரணை கேட்ட விஜய் அரசுக்கு பா.ரஞ்சித் பாராட்டு
காமராஜர் பிறந்தநாள் விழா.. காஞ்சிபுரத்தில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை..
காமராஜர் பிறந்தநாள் விழா.. காஞ்சிபுரத்தில் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை..
உதயநிதிக்கு கைக்கு வரப்போகும் அதிகாரம்.. காலியாகும் சீனியர்கள்? அதிரடி காட்டப்போகும் மு.க.ஸ்டாலின்!
உதயநிதிக்கு கைக்கு வரப்போகும் அதிகாரம்.. காலியாகும் சீனியர்கள்? அதிரடி காட்டப்போகும் மு.க.ஸ்டாலின்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

G Pay மூலம் லஞ்சம் வாங்கிய தவெக ஊராட்சி தலைவர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம்!
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
IAS Transfer: ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக மாற்றிய தவெக அரசு.. ராதாகிருஷ்ணன், சுப்ரியா சாஹுவும் ட்ரான்ஸ்பர் - முழு லிஸ்ட் இதோ
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
ஆட்டம் போட முயற்சித்த அமைச்சர்கள்... தூக்கி வீச ரெடியான விஜய்! அமைச்சரவையில் விரைவில் மாற்றம்?
US Russia Sanctions Bill: 500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
500 இல்ல, வெறும் 100 தான்.! ரஷ்ய எண்ணெய் கொள்முதல் கட்டணங்களை மாற்றும் அமெரிக்கா; இந்தியாவுக்கு நிம்மதி
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
6ம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு கல்வி- இந்தியாவின் முதல் AI பல்கலைக்கழகம்- கலக்கும் கர்நாடகா
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 427 கிலோமீட்டர் மைலேஜ்.. வரப்போது Volkswagen ID Cross மின்சார கார் - விலை எவ்ளோ?
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
குடும்பத்தை காப்பாற்ற டாக்சி ஓட்டும் பிஎச்டி பட்டதாரி; பேராசிரியர் ஊதியம் போதாத அவலம்!
Maruti Suzuki Dzire on EMI: நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
நடுத்தர வர்க்கத்தின் நம்பகமான கார்.! மாருதி சுசூகி டிசையரின் ஆன்-ரோடு விலை, முன்பணம், EMI எவ்வளவு.?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Embed widget