Robo Shankar Death Reason: உயிரைப்பறித்த குடிப்பழக்கம்... ரோபோ சங்கர் மறைவுக்கு காரணம் இது தான்
Actor Robo Shankar Death Reason: அதீத குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சில ஆண்டுகளுக்கு முன்னர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார்.

சின்னத்திரை நட்சத்திரமும், நகைச்சுவை நடிகருமான ரோபோ சங்கர்(வயது 46) சென்னையில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவு தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
ரோபோ சங்கர்:
விஜய் டிவியில் கலக்கப்போவது என்கிற நகைச்சுவை நிகழ்ச்சி மூலமாக மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ரோபோ சங்கர், மிமிக்ரி கலைஞரான இவர் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வர், தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்த தனுஷின் மாரி படத்தில நடித்தார். அதன்பின்னர் பல நகைச்சுவை வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இதையும் படிங்க: Robo Shankar Passed Away: பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் - 46 வயதில் மறைந்த சோகம்
குடிப்பழக்கத்திற்கு அடிமை:
அதீத குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி சில மாதங்களுக்கு முன்னர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்தார். இதன்காரணமாக அவர் உடல் மெலிந்த நிலையில் காணப்பட்டார். அதன் பின் மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறினார்.
மீண்டும் படங்களில்
இதன் பின்னர் சில காலம் படங்கள் மற்றும் சின்னத்திரை நடிப்பதை தவிர்த்த ரோபோ சங்கர் உடல்நிலை பழைய நிலைக்கு திரும்பிய பின் படங்கள் மற்றும் டிவி ஷோக்களில் கலந்துக்கொள்ள ஆரம்பித்தார். இதற்கிடையில் மகள் இந்துஜாவின் திருமணத்தையும் சிறப்பாக நடத்தி முடித்தார் ரோபோ சங்கர். இதன் பின்னர் அவர் மீண்டும் குடிக்க தொடங்கியதாக கூறப்படுகிறது.
தீடீர் உடல்நலக்குறைவு:
இந்த நிலையில் சென்னையில் நடந்த படப்பிடிப்பு ஒன்றில் கலந்துக்கொண்ட அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்ப்பட்டு படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்துள்ளார். அவரை உடனடியாக மீட்டு பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டு தீவிர அளிக்கப்பட்டது.
உயிரிழப்பு:
மருத்துவமனையில் நீர்ச்சத்து குறைபாடு குறைந்த இரத்த அழுத்தம் ஆகியவற்றுக்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று இரவு 8.30 மணியளவில்(18.09.25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கடந்த வாரம் விஜய் டிவியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தனது மனைவியுடன் கலந்துக்கொண்ட நிலையில் அவரது மறைவு சின்னத்திரை மற்றும் தமிழ்திரையுலகில் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது.
கமல்ஹாசன் இரங்கல்:
நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான இவர், கடந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 படத்திற்கு குடும்பத்துடன் ஆரவாரமாய் சென்றதை சமூக வலைதளங்களில் வைரலானது. அவரது மறைவுக்கு எம்.பியும் நடிகரும் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில்..
ரோபோ சங்கர் ரோபோ புனைப்பெயர் தான் என் அகராதியில் நீ மனிதன் ஆதலால் என் தம்பி போதலால் மட்டும் எனை விட்டு நீங்கி விடுவாயா நீ? உன் வேலை நீ போனாய் என் வேலை தங்கிவிட்டேன். நாளையை எமக்கென நீ விட்டுச் சென்றதால் நாளை நமதே என்று பதிவிட்டுள்ளார்.






















