Robbie Coltrane Death: ஹாரி பாட்டர் ’ஹாக்ரிட்’.... உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்ற நடிகர் ராபி கோல்ட்ரேன் மறைவு!
இப்படங்களில் முதல் பாகத்தில் இருந்து பயணிக்கும் முக்கியப் பாத்திரங்களுள் ஒன்றான ஹாக்ரிட் கதாபாத்திரத்தில் நடித்து, கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த நடிகர் ராபி கோல்ட்ரேன்
ஹாரி பாட்டர் படங்களில் ஹாக்ரிட் கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்த நடிகர் ராபி கோல்ட்ரேன் மறைந்தார்.
View this post on Instagram
மாயாஜால உலகை மையப்படுத்தி வெளிவந்து, உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்ட திரைப்பட சீரிஸ் ஹாரி பார்ட்டர்.
குறிப்பாக 90ஸ் கிட்ஸ் எனப்படும் 90களில் பிறந்த நபர்கள் இந்தத் திரைப்பட சீரிஸ் உடன் சேர்ந்தே தான் வளர்ந்தனர். ஜே.கே.ரவுலிங் எழுதிய ஹாரி பாட்டர் நாவலை மையப்படுத்தி வெளிவந்த இந்த சீரிஸில் நடித்த பல கதாபாத்திரங்களுக்கும் உலகம் முழுவதும் தனித்தனி ரசிகர்கள் உள்ளனர்.
ஹாரி பாட்டர், ஹெர்மாயினி, ரான் வீஸ்லி, டம்பிள் டோர் என பல முக்கியக் கதாபாத்திரங்களும் கிளைக்கதைகளும் கதைக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த சீரிஸில் அமைந்திருக்கும்.
அந்த வகையில் இப்படங்களில் முதல் பாகத்தில் இருந்து பயணிக்கும் முக்கியப் பாத்திரங்களுள் ஒன்றான ஹாக்ரிட் கதாபாத்திரத்தில் நடித்து, கோடிக்கணக்கான ரசிகர்களை ஈர்த்த நடிகர் ராபி கோல்ட்ரேன் இன்று (அக்.14) உயிரிழந்தார்.
This clip of Robbie Coltrane in the Harry Potter reunion was really impactful. Even more, now. ❤️pic.twitter.com/JwhCNq1Gec
— BD (@BrandonDavisBD) October 14, 2022
72 வயது நிரம்பிய ராபி கோல்ட்ரேன் முன்னதாக பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார்.
Robbie Coltrane, known for his performance as Hagrid in ‘Harry Potter,’ has passed away at the age of 72. pic.twitter.com/GhoST9tVAM
— Film Updates (@FilmUpdates) October 14, 2022
வெளிநாட்டுத் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பாஃப்டா விருது வென்றுள்ள இவர், புகழ்பெற்ற ஜேம்ஸ் பாண்ட் படங்களிலும் நடித்துள்ளார். இவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள இவரது எண்ணற்ற ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.