Inaindha Kaigal remake : கார்த்தி - விஷால் நடிச்சா சூப்பரா இருக்கும்... ராம்கி கொடுத்த ஹிண்ட்... ரீ மேக் ஆகுமா 'இணைந்த கைகள்'
Inaindha kaigal remake: ராம்கி - அருண்பாண்டியன் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் படமான 'இணைந்த கைகள்' படத்தை கார்த்தி விஷாலை வைத்து ரீ மேக் செய்தால் நன்றாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார் ராம்கி.
80ஸ் காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் ராம்கி. பக்கத்து வீட்டு பையன் முகத்தோற்றத்தை கொண்டு இருந்தாலே இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருந்தது. செந்தூர பூவே, பூவிழி ராஜா, பறவைகள் பலவிதம், மருது பாண்டி, இணைந்த கைகள் உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அனைத்து விதமான ஜானர் படங்களிலும் நடித்துள்ளார்.
உச்சத்தில் இருந்த ராம்கி 2013ம் ஆண்டு வெளியான பிரியாணி, மாசானி படங்களின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ராம்கி ஸ்வாரஸ்யமான விஷயம் பற்றி பேசி இருந்தார்.
நடிகர் ராம்கி நடித்த 'செந்தூர பூவே ' திரைப்படம் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது. தெலுங்கில் மட்டும் ஒரு ஆண்டுக்கும் மேலாக திரையரங்கில் ஓடியது. 350 நாட்களும் மேல் ஓடியது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 250 நாட்களுக்கு ஓடியது. அதே போல நானும் அருண்பாண்டியனும் இணைந்து நடித்த 'இணைந்த கைகள்' படமும் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டில் மிக பெரிய ட்ரெண்ட் செட்டராக அமைந்தது. டிரைலரே மிரட்டலாக இருந்தது. மிக பெரிய அளவில் வெற்றி பெற்று கலெக்ஷன் அள்ளிய படம். இன்று பார்த்தாலும் ரசிக்க கூடிய கிளாசிக் கல்ட் திரைப்படம்.
'இணைந்த கைகள்' இப்போது ரீ மேக் செய்தால் நல்ல வரவேற்பை பெரும் கலெக்ஷனும் அள்ளும். இன்று உள்ள நடிகர்களில் விஷாலும் கார்த்தியும் இணைந்து நடித்தால் படம் சூப்பராக இருக்கும். கார்த்தி என்னுடைய ரோலும், விஷால் அருண்பாண்டியன் ரோலிலும் நடித்தால் சூப்பராக இருக்கும் என கூறி இருந்தார்.
தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டர் இயக்குநர் ஆபாவாணனின் தயாரிப்பில், என்.கே. விஸ்வநாதன் இயக்கத்தில் 1990ம் ஆண்டு வெளியாக பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படம் 'இணைந்த கைகள்'. அதிரடி ஆக்ஷன் படமாக வெளியான இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்ளையும் கவர்ந்தது.
அந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமாக கொண்டாடப்பட்டது. நிரோஷா, சிந்து, நாசர், ஸ்ரீவித்யா, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தின் விறுவிறுப்பான கதைக்களத்தில் காமெடி, காதல் கோவையில் ஜனரஞ்சகமான படமாக அமைந்தது. இப்படம் இன்றும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்படும் மிக சிறந்த படைப்புகளில் ஒன்றாகவும் இருக்கிறது