Thalaivar 170: கொச்சி சென்ற ரஜினிகாந்த்.. போகிற வழியில் “தலைவர் 170” குறித்து சொன்ன சூப்பர் அப்டேட்..!
தனது 170வது படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கொச்சி புறப்பட்டு சென்றுள்ளார். விமான நிலையத்தில் அந்த படம் குறித்த தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
தனது 170வது படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கொச்சி புறப்பட்டு சென்றுள்ளார். விமான நிலையத்தில் அந்த படம் குறித்த தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்துக்கு கடைசியாக ஜெயிலர் படம் வெளியாகியிருந்தது. இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி வெளியான நிலையில் சமீபத்தில் 50வது நாள் விழா கொண்டாடப்பட்டது. வசூலிலும் ரூ.600 கோடியை கடந்த ஜெயிலர் படம் நீண்ட வருடங்களுக்குப் பிறகு ரஜினிக்கு மிகப்பெரிய வசூலைப் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த படத்தைத் தொடர்ந்து அவர் லால் சலாம், தலைவர் 170, தலைவர் 171 ஆகிய படங்களில் நடிக்கிறார்.
இதில் லால் சலாம் படத்தில் மொய்தீன் பாய் கேரக்டரில் சிறப்பு வேடத்தில் ரஜினி நடித்துள்ளார். மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள இந்த படத்தில் அவரின் கேரக்டருக்கான தோற்றம் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. லால் சலாம் படம் 2024 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில், ரஜினியின் 170வது படத்தையும் அந்நிறுவனமே தயாரிக்கிறது. இந்த படத்தை “ஜெய்பீம்” பட இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்தின் அப்டேட் கடந்த 3 தினங்களாக வெளியாகி வருகிறது. அதன்படி தலைவர் 170வது படத்தில் ரித்திகா சிங்,துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ராணா டகுபதி ஆகியோர் இதுவரை இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல முன்னணி பிரபலங்கள் ரஜினி படத்தில் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படியான நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ நாளை தலைவர் 170வது படத்தின் ஷூட்டிங் தொடங்குகிறது. அதற்காக நான் கொச்சி செல்கிறேன்.இன்னும் படத்துக்கு டைட்டில் முடிவு செய்யவில்லை” என கூறினார்.
மேலும், “ஜெயிலர் படத்துக்கு எதிர்பார்த்ததுக்கு மேலான வெற்றி கிடைத்துள்ளது. 170வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க ஞானவேல் பண்றாரு. இது நல்ல சமூக கருத்துள்ள பொழுதுபோக்கு படமாக இருக்கும்” என தெரிவித்தார். இதனால் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் படிக்க: BiggBoss 7 Tamil: ”இது பிக்பாஸா?.. இல்ல.. வேற ஏதாவது ஸ்டண்ட்டா?” .. மணிசந்திரா கையை கடித்த ரவீனா..!