மேலும் அறிய

27 Years of Arunachalam: ஆன்மீகம் முதல் அரசியல் வரை பேசிய ரஜினி.. 27 ஆண்டுகளை கடந்த அருணாச்சலம் படம்!

27 Years of Arunachalam: Brewster's Millions என்ற நாவலின் அடிப்படையில் தான் அருணாச்சலம் படம் எடுக்கப்பட்டிருந்தது.

27 Years of Arunachalam: நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அருணாச்சலம் படம் இன்றோடு 27 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

கதையை சொன்ன ரஜினி  

Brewster's Millions என்ற நாவலின் அடிப்படையில் தான் அருணாச்சலம் படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்த நாவலை படித்து அதிலிருந்து ஒரு லைனை எடுத்து இயக்குநர் சுந்தர்.சியிடம் சொல்ல, அவர் திரைக்கதையில் கிரேஸி மோகன் வசனத்துடன் இப்படம் உருவானது. இந்த படத்தில் சௌந்தர்யா, ரம்பா, வடிவுக்கரசி, அஞ்சு, ஜெய் சங்கர், ரவிச்சந்திரன், வி.கே.ராமசாமி, ரகுவரன், நிழல்கள் ரவி, விசு, கிட்டி, செந்தில், ஜனகராஜ், வெண்ணிற ஆடை நிர்மலா, பொன்னம்பலம், அம்பிகா, மனோரமா என பலரும் நடித்திருந்தனர்.தேவா இப்படத்துக்கு இசையமைக்க ரஜினிகாந்த் சொந்தமாக தயாரித்திருந்தார். திரையுலகில் தன்னுடன் பயணித்த 8 பேரின் வாழ்வியல் உதவிக்காக ரஜினி இப்படத்தில் நடிக்கவும், தயாரிக்கவும் முன்வந்தார் என்பது பலரும் அறியாத தகவல். 

கதை ரீவைண்ட்

மிகப்பெரிய கூட்டுக்குடும்பத்தில் ரவிச்சந்திரன் மகனாக இருக்கும் ரஜினிகாந்துக்கு, அந்த வீட்டில் இருக்கும் வடிவுக்கரசியால், தான் அந்த வீட்டு பிள்ளை இல்லை என்ற உண்மை தெரிய வருகிறது. இதனால் வீட்டை விட்டு வெளியேறும் அவர் இறந்துப்போன தன் அப்பாவை பற்றி சந்தர்ப்ப சூழலால்தெரிந்து கொள்கிறார். மிகப்பெரிய பணக்காரரான அப்பா (ரஜினி) பணம் மீதான மோகம் தன் மகனுக்கு (ரஜினி) வரக்கூடாது என்பதற்காக ரூ.30 கோடியை 30 நாளில் செலவு செய்ய வேண்டும் என சில நிபந்தனையுடன் தெரிவித்திருப்பார். அப்படி செய்தால் பல கோடி மதிப்பிலான சொத்துகள் கிடைக்கும் எனவும் சொல்லியிருப்பார். அப்பாவின் எண்ணத்தை நிறைவேற்ற புறப்படும் ரஜினிக்கு, ரகுவரன், விகே ராமசாமி, நிழல்கள் ரவி, கிட்டி ஆகியோரால் தொல்லை ஏற்படும். இந்த சவாலில் ரஜினி எப்படி வென்றார் என்பதை சுவாரஸ்யமாக தெரிவித்திருந்தார்கள். 

கூடுதல் தகவல்கள் 

  • 1996 ஆம் ஆண்டு தேர்தலில் ஜெயலலிதாவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட நடிகை மனோரமா, திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த ரஜினியை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால்  சில ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் போனது. ஆனால் ரஜினி அவரை மீண்டும் இப்படத்தில் நடிக்க அழைத்து வந்தார். 
  • இயக்குநர் சுந்தர்.சிக்கு ரஜினி சொன்ன அருணாச்சலம் கதை பிடிக்கவே இல்லை. ஆனால் அவரை இயக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணக்கூடாது என்பதால் இப்படத்தை இயக்கினார்.
  • இந்த படத்தின் ஷூட்டிங் ரிஷிகேஷில் நடந்தபோது ரஜினி தனது கழுத்தில் அணிந்திருந்த ருத்ராட்ச மாலையை தொலைத்து விட, இரவில் லைட் உதவியுடன் கண்டெடுக்கப்பட்டது. 
  • படத்தில் வழக்கம்போல அரசியல் வருகை பற்றியும் பேசி ரசிகர்களை உசுப்பேற்றியிருப்பார். 
  • தேவாவின் இசையில் அறிமுக பாடலான “அதாண்டா இதாண்டா” பாடலை எஸ்பிபி பாட மறுத்து விட்டார். கடவுளை டா போட்டு அழைக்க முடியாத என சொன்ன நிலையில் வரியின் காரணத்தை விளக்கி பாட வைத்திருந்தார்கள்.

இப்படி எண்ணற்ற சிறப்புகளை கொண்ட அருணாச்சலம் படம் ரசிகர்களின் இதயம் கவர்ந்த படமாகவே இன்றளவும் இருக்கிறது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
ஏ.ஆர்.ரஹ்மான் பாரபட்சமும், வெறுப்பும் கொண்ட மனிதர்.. கங்கனா ரணாவத் பகீர் குற்றச்சாட்டு!
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
IND vs NZ: கோப்பை யாருக்கு? நாளை மல்லுகட்டும் இந்தியா - நியூசிலாந்து! ரோகித் - கோலி காம்போ கலக்குமா?
Embed widget