Rajinikanth: ஈஷா மையத்துக்கு அண்ணனுடன் வந்த நடிகர் ரஜினிகாந்த்... வைரலான புகைப்படங்கள்..
காரில் தன் அண்ணன் சத்தியநாராயணன் உடன் நடிகர் ரஜினிகாந்த் பயணிக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
![Rajinikanth: ஈஷா மையத்துக்கு அண்ணனுடன் வந்த நடிகர் ரஜினிகாந்த்... வைரலான புகைப்படங்கள்.. Actor Rajinikanth arrives to Isha yoga centre on mahashivratri day with his brother photos become viral Rajinikanth: ஈஷா மையத்துக்கு அண்ணனுடன் வந்த நடிகர் ரஜினிகாந்த்... வைரலான புகைப்படங்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/18/0c18945051d22a5bc1919b9281d238591676729477393574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகர் ரஜினிகாந்த் மகாசிவராத்திரி நாளான இன்று பெங்களூரு ஆதியோகி மையத்துக்கு வருகை தந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
மகா சிவராத்திரி நாளான இன்று சிவபெருமானுக்கு உகந்த நாளாக நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாடு, கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் சிவராத்திரி நாளில் வழக்கமாக விழாக்கோலம் பூண்டு வரும் நிலையில், இந்த ஆண்டு கர்நாடக மாநிலம், சிக்கபலபூரில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள ஆதியோகி மையமும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்நிலையில், இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் தனது அண்ணன் சத்தியநாராயணன் உடன் பெங்களூருவில் உள்ள இந்த ஆதியோகி மையத்துக்கு சென்று வழிபட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவின் சிக்கபலபுராவில் உள்ள 112 அடி ஆதியோகி சிலை சென்ற மாதம் அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மையால் திறந்து வைக்கப்பட்டது.
கோவையில் உள்ள ஆதியோகி சிலையை பிரதிபலிக்கும் வண்ணம் அச்சு அசலாக இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இன்று சிவராத்திரியை முன்னிட்டு விடிய விடிய இங்கு பண்டிகை, கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் காரில் தன் அண்ணன் சத்தியநாராயணன் உடன் சிவப்பு நிற சட்டையில் நடிகர் ரஜினிகாந்த் பயணிக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இன்று காலை நடிகர் ரஜினி ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தமிழ்நாடு திரும்பிய புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகின.
Move over superheroes, Thalaiva is here to save the day! @rajinikanth sir, thank you for gracing us with your presence.#flyspicejet #spicejet #Rajinikanth #thalaiva #celebrity #celebrityonboard #travel #travelgram #addspicetoyourtravel pic.twitter.com/GxnSP70qmp
— SpiceJet (@flyspicejet) February 18, 2023
மேலும் முன்னதாக ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்று வந்தது. கன்னட முன்னணி நடிகர் சிவராஜ் குமார் இந்தப் படத்தில் நடித்து வரும் நிலையில், சிவராஜ் குமார் - ரஜினி தொடர்பான காட்சிகள் காந்தாரா படம் எடுக்கப்பட்ட அரண்மனையில் நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், கர்நாடகா படப்பிடிப்பில் இருந்து ரஜினிகாந்த் ஈஷா யோகா மையத்துக்கு சென்றிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு வேலூர், ஜெய்சால்மர், கர்நாடகா என விறுவிறுப்பாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
ஓய்வுபெற்ற ஜெயிலராக நடிகர் ரஜினிகாந்த் இந்தப் படத்தில் நடிப்பதாகவும், சிறைக்குள் நடைபெறும் அதிரடி ஆக்ஷன் கதையாகவும் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்துக்கு முத்துவேல் பாண்டியன் எனப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க: Pradeep Ranganathan : "இன்னைக்கு பாராட்டுறாங்க... ஆனா..” லவ் டுடே இயக்குநரை விமர்சித்து வாரிய கார்த்திக் குமார்..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)