Raghava Lawrence : பெண்களுக்கு தையல் மிஷின் வழங்கி பிறந்தநாள் கொண்டாடிய ராகவா லாரண்ஸ்
நடிகர் ராகவா லாரன்ஸ் இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு தனது மாற்றம் அறக்கட்டளை சார்பாக பெண்களுக்கு இலவசமாக தையல் மிஷின்களை வழங்கினார்
ராகவா லாரன்ஸ்
குரூப் டான்ஸராக இருந்து, பின் நடன இயக்குநராக தனக்கென ஒரு அடையாளத்தைப் பிடித்தவர் நடிகர் ராகவா லாரன்ஸ் (Raghava Lawrence). இதற்கு பின் படிப்படியாக நடிப்பு, இயக்கம் என பல திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். சினிமா தவிர்த்து மாற்றுத் திறனாளிகளுக்கு என தனியாக நடனம் கற்பிப்பது, அவர்களின் நலனுக்கு பல நலத் திட்டங்களை தன்னார்வல நிறுவனங்களின் உதவியுடம் முன்னெடுப்பது என களச் செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
சேவையே கடவுள் அறக்கட்டளை
ராகவா லாரன்ஸ் கடந்த ஆண்டு தனது அண்ணையின் பிறந்தநாளை முன்னிட்டு அறக்கட்டளை ஒன்றை தொடங்கினார். இந்த அறக்கட்டளையில் லாரன்ஸூடன் நடிகர் எஸ்.ஜே சூர்யா, நடிகர் பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா உள்ளிட்டவர்களும் செயல்பட இருக்கிறார்கள். சேவையே கடவுள் அறக்கட்டளை சார்பாக மாற்றம் என்கிற செயல்திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளார் லாரன்ஸ். இந்தத் திட்டத்தின் வழியாக பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு சேவைகளை தன்னார்வலர்களின் உதவியோடு செய்ய இருக்கிறார். இதம் முதல் கட்டமாக விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில் 10 டிராக்டர்கள் 10 கிராமத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளன. இன்று தனது பிறந்தநாளை முன்னிட்டு ராகவா லாரன்ஸ் கணவனை இழந்த பெண்களுக்கு இலவசமாக தையல் மிஷின்களை வழங்கியுள்ளார். நிறைய கணவனை இழந்த பெண்கள் தங்களுக்கு ஒரு தையல் மிஷின் இருந்தால் அது அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள வசதியாக இருக்கும் என்று தெரிவித்திருந்ததால் இந்த தையல் மிஷின்களை தான் வழங்கியுள்ளதாக லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
Hi friends and fans, During my Mataram journey many widowed women requested for a stitching machine as it would give them an opportunity to work and fulfill their daily needs. As a new venture for my birthday tomorrow. I provided Tailoring machines to widowed women. I need all… pic.twitter.com/1vHBCcE1GQ
— Raghava Lawrence (@offl_Lawrence) October 28, 2024
மேலும் படிக்க : Suriya : 27 வருஷம் எனக்காக எல்லாத்தையும் விட்டு வந்தாங்க...ஜோதிகா பற்றி சூர்யா
Surya Sethupathi : நடிகன் பையன் நடிகன் ஆகக்கூடாதா..நெப்போட்டிஸம் பற்றி போல்டாக பேசிய சூர்யா சேதுபதி