மேலும் அறிய

R. Sundararajan: காருக்குள் தான் குடும்பம் நடத்தினோம் - பழைய நினைவுகளை பகிர்ந்த ஆர்.சுந்தர்ராஜன் மனைவி!

விஜயகாந்த், ரஜினி, சத்யராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்த நடிகர் சுந்தரராஜன், 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து அசத்தி உள்ளார். 

R. Sundararajan:  நடிகரும், இயக்குநருமான ஆர். சுந்தரராஜனிடம் காருக்குள் குடும்பம் நடத்தியதாக அவரது மனைவி துர்கா தெரிவித்துள்ள தகவல் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. 
 
நடிகர், இயக்குநர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஆர். சுந்தரராஜன். ராஜாதி ராஜா, பயணங்கள் முடிவதில்லை, வைதேகி காத்திருந்தாள், திருமதி பழனிசாமி உள்ளிட்ட வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் ஆர்.சுந்தர்ராஜன். விஜயகாந்த், ரஜினி, சத்யராஜ் உள்ளிட்ட மிகப்பெரிய ஹீரோக்களை வைத்து படம் எடுத்த நடிகர் சுந்தரராஜன், 100க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி நடிகராக நடித்து அசத்தி உள்ளார். 
 
சூரியவம்சம், ஜானகிராமன், நட்புக்காக, பெரியண்ணா போன்ற திரைப்படங்களில் ஆர். சுந்தரராஜனின் கேரக்டர் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருந்தது. கடைசியாக, சித்திரையில் நிலாச்சோறு என்ற படத்தை இயக்கி அதில் ஒரு கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் அண்ணாமலை என்ற கேரக்டரில் ஆர்.சுந்தர்ராஜன் நடித்து வருகிறார். இந்த நிலையில் சுந்தரராஜன் உடனான வாழ்க்கை குறித்து அவரது மனைவி துர்காபேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
தமிழில் பல ஆண்டுகளாக டப்பிங் கலைஞராக இருந்த துர்கா, “5000 படங்களுக்கு மேல் நான் டப்பிங் பேசி இருக்கிறேன். அந்த டயலாக் எல்லாம் எனக்கு நினைவில் உள்ளது. அப்போது எல்லாம், சின்ன பிள்ளைகளுக்கு பெரியவர்கள் தான் டப்பிங் கொடுப்போம். பூவே பூச்சூடவா படத்தில் நதியாவுக்கு டப்பிங் பேசியுள்ளேன். அம்மன் படத்தில் ரம்யா கிருஷ்ணனுக்கும், முதல்வன் படத்தில் மனிஷா கொய்ராலாவுக்கு டப்பிங் பேசியுள்ளேன். நான் டப்பிங் பேசுவதற்கு என் அம்மாவோ, என் கணவரோ எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. எங்கள் குழந்தைகளை என் அம்மா தான் பார்த்துக் கொள்வார்கள்.
 
ஆரம்பத்தில் என் கணவர் ரொம்ப பிசியாக நடித்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அவருக்கு பொள்ளாச்சியில் ஷீட்டிங்கில் இருப்பார். அடுத்த நாள் பெங்களூருவில் இருப்பார். நானும் பிசியாக டப்பிங் பேசிக் கொண்டிருப்பேன். அதிகமாக நாங்கள் இருவருமே சந்தித்து கொண்டு பேசியதில்லை. ஆரம்பத்தில் சுந்தரராஜன் வீட்டிற்கு வரும்போது குழந்தைகளை பார்த்து விட்டு, என்னை பார்க்க டப்பிங் ஸ்டுடியோவுக்கு வருவார். நான் வரும் வரை வெளியில் காரில் காத்திருப்பார். அதுவரை 15 நாட்களில் நடந்தது எல்லாவற்றையும் காரில் இருந்தபடி தான் நாங்கள் இருவரும் பேசுவோம். எங்களுக்குள் நடைபெறும் குடும்ப பிரச்சனைகள் குறித்தும் காரிலேயே விவாதம் நடக்கும்” என துர்கா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். 
 
 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Embed widget