மேலும் அறிய

Bigg Boss Archana: "கூடவே வந்த பேய், அலறி அடிச்சு ஓடினேன்" - பீதியான அனுபவம் பகிர்ந்த பிக்பாஸ் அர்ச்சனா! 

Bigg Boss Archana: பேயைப் பார்த்து தான் அலறி அடித்து ஓடியதாக பிக்பாஸ் அர்ச்சனா தன் பீதியான அனுபவம் குறித்து சமீபத்தில் அளித்த நேர்க்காணலில் பகிர்ந்துள்ளார்.

தொலைக்காட்சித் தொகுப்பாளராக தனது பயணத்தைத் தொடங்கி பின்னர் படிப்படியாக பிரபலமடைந்தவர் அர்ச்சனா. அவருக்கு ஒரு ஜாக்பாட் வாய்ப்பாக அமைந்தது விஜய் டிவியில் வெளியான 'ராஜா ராணி 2' சீரியல். கிடைத்த வாய்ப்பை படு சூப்பராக பயன்படுத்தி கேரக்டருக்கு ஏத்த மாதிரி வில்லத்தனமான நடிப்பை வெளிப்படுத்தி சின்னத்திரை ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தார்.

தொடர்ந்து ஹைஸ்பீடில் பிரபலமான அர்ச்சனா, திடீரென சீரியலில் இருந்து விலகினார். பின்னர் ஒரு சில விஜய் டிவி நிகழ்ச்சிகளில் மட்டுமே வந்து போன அர்ச்சனா, தடாலடியாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக 28ம் நாள் என்ட்ரி கொடுத்து கெத்து  காட்டினார்.

Bigg Boss Archana:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்த சமயத்தில் அங்கு நடந்த பாலிடிக்ஸை எதிர்க்க முடியாமல் எடுத்ததற்கு தொட்டதற்கு எல்லாம் அழும் தொட்டாசிணுங்கியாக இருந்தார் அர்ச்சனா. போகப் போக கேம் பிளானை புரிந்து கொண்டு பக்காவாக விளையாடி, அனைவருக்கும் டஃப் கொடுத்து அதிரடியாக ஆடி, பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னராக வெற்றி வாகை சூடினார்.

வைல்ட் கார்டு போட்டியாளராக வந்து டைட்டில் வின்னராகத் தேர்வான முதல் நபர் அர்ச்சனா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

Bigg Boss Archana:

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு ஜாலியான பேட்டியில் ஒரு ஷாக்கிங் தகவலை சொல்லி அனைவரையும் திகில் அடையச் செய்துள்ளார் அர்ச்சனா. அவருக்கு நடந்த ஒரு மர்மான சம்பவம் பற்றி கூறி பீதி அடையச் செய்துள்ளார்.

"ஒரு நாள் ஷூட்டிங் முடிச்சுட்டு நைட் 2 மணி போல வீட்டுக்குப் போய்ட்டு இருந்தேன். எங்க வீட்டுக்கு இன்னும் பத்து நிமிஷத்துல போயிடலாம். அப்போ ஹலுசினேஷனா, இல்ல பேயா என எனக்குத் தெரியல. பேய் விஷயத்துல நான் பொய் சொல்ல மாட்டேன்.

போய்க்கிட்டே இருக்கும்போது 100 அடி மீட்டரில், ப்ளூ அண்ட் ஆஷ் ஷர்ட் போட்ட ஆள் ஒருத்தர் நிக்குறாரு. நான் பயங்கர ஸ்பீடா கார் டிரைவ் பண்ணிட்டு வந்தேன். நான் வந்த ஸ்பீடுக்கு அவரை எப்பவோ கிராஸ் பண்ணியிருக்கணும். ஆனா ஒரு 100 மீட்டருக்கு அவர் என்னோட இந்த கார் சைடுல வந்துகிட்டே இருந்தாரு. அது எனக்கு சைட் மிர்ரர்ல தெரிஞ்சுது. அந்த இடத்துல நிக்கவே இல்ல. அதைப் பார்த்து பயந்து போய் அலறி அடிச்சுக்கிட்டு வீட்டுக்கு ஓடிப் போயிட்டேன்" எனக் கூறியுள்ளார். அர்ச்சனா பகிர்ந்துள்ள இந்த அமானுஷ்ய கதை  அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Bose Venkat : நீங்க எல்லாம் விஜயை விமர்சிக்கலாமா..சாதிப் பெயரை பெருமயாக சொன்ன போஸ் வெங்கட்
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
Breaking News LIVE: மருத்துவ கழிவுகள் விவகாரம்; தமிழகம் வந்தது கேரள குழு
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: எதிர்பார்த்தவர்களுக்கு ஆப்படித்த நிதியமைச்சர் - இன்சூரன்ஸ் மீதான ஜிஎஸ்டி ரத்துக்கு ”நோ” - காரணம் என்ன?
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்:  நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
GST Rate: இதற்கு ஜி.எஸ்.டி வரி 12 % லிருந்து 5% ஆக குறைப்பு; ஆனால் இதற்கு அதிகம்: நிர்மலா சீதாராமன் தெரிவிப்பு
Nellai Murder: ”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
”செல்போனில் மூழ்கி கிடக்கிறாங்க”: நெல்லை கொலை வழக்கில் போலீசை லெஃப்ட் - ரைட் வாங்கிய நீதிபதி
Embed widget