Pugazh on Etharkkum Thunindhavan: 'சூர்யா படத்தில் நான்... துணிந்து கொடுத்த வாய்ப்பு..' எமோஷனலாக பதிவிட்ட விஜய் டிவி புகழ்!
சூரரைப்போற்று, ஜெய் பீம் ஆகிய இரண்டு படங்களின் வெற்றிக்கு பிறகு, சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எதற்கும் துணிந்தவன்’ படத்தில் சூர்யாவுடன் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் கதாநாயகியாக, பிரியங்கா மோகனன் நடித்துள்ள நிலையில், வில்லனாக நடிகர் வினய் நடித்திருக்கிறார். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்தது குறித்து நெகிழ்ச்சியான ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார் நடிகர் புகழ்.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அலுவலத்தில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்த புகழ், “எதற்கும் துணிந்தவன் படத்திற்கு எனக்கு துணிந்து வாய்ப்பு கொடுத்த நடிகர் பாண்டிராஜ் அவர்களுக்கும் , நாயகன் சூர்யா அவர்களுக்கும் , வழிகாட்டியாக இருந்த அண்ணன் சூரி அவர்களுக்கும் , தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டிருக்கிறார். கடைசியாக ‘வலிமை’ படத்தில் ஒரு காட்சியில் நடித்திருந்த புகழ், அடுத்தடுத்து சில படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களுக்கு மத்தியில் சின்னத்திரையிலும் அவ்வப்போது பங்கேற்று வருகிறார். இந்நிலையில், பெரிய ஹீரோ படங்களில் நடித்து வரும் புகழுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
*எதற்கும் துணிந்தவன்* படத்திற்கு எனக்கு துணிந்து வாய்ப்பு கொடுத்த @pandiraj_dir அவர்களுக்கும் , நாயகன் திரு @Suriya_offl அவர்களுக்கும் , வழிகாட்டியாக இருந்த அண்ணன் @sooriofficial அவர்களுக்கும் , தயாரிப்பு நிறுவனம் @sunpictures மற்றும் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி#ET🔥 pic.twitter.com/8zcdOSLkn9
— Pugazh (@pugazh_iam) February 26, 2022
5 மொழிகளில் வெளியாக இருக்கும் இத்திரைப்படம், பெண்களுக்கு எதிராக நடக்கும் அநீதியை தட்டிக்கேட்கும் நாயகனாக சூர்யா நடித்திருப்பதாக படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் கூறியிருக்கிறார். டி. இமான் இசையமைத்திருக்கும் இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்ற நிலையில், சமீபத்தில் படத்தின் டீசர் வெளியானது.
சூரரைப்போற்று, ஜெய் பீம் ஆகிய இரண்டு படங்களின் வெற்றியால் சூர்யாவின் மார்க்கெட் மீண்டும் உச்சத்தில் இருக்கும் நிலையில், அடுத்ததாக வெளியாக இருக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிறவைத்திருக்கிறது. இப்படம் மார்ச் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்