Watch Video: 7 முன்னணி நடிகைகளுடன் மேடையில் க்யூட் நடனம்: பிரசாந்தின் பழைய வீடியோ! நினைவுகூறும் ரசிகர்கள்!
நடனமாகட்டும், ஃபைட் ஆகட்டும் அனைத்தையும் சிறப்பாக திரையில் செய்து, ஜிம்னாஸ்டிக்ஸ், குழந்தை முகம் என க்யூட்டாக வலம் வந்த பிரசாந்தை அன்றைய காலக்கட்டத்தில் ரசிக்காதவர்களே இருக்க முடியாது.

ஒரு வெற்றிகரமான ஹீரோவுக்கான அத்தனை விஷயங்களையும் கற்றுத் தேர்ந்து அனைத்து பொருத்தங்களுடனும் 90கள் மத்தியில் தொடங்கி கோலிவுட்டின் டாப் ஸ்டாராக வலம் வந்தவர் நடிகர் பிரசாந்த்.
சாக்லேட் பாய்
80களின் பிரபல இயக்குநர், நடிகர் தியாகராஜனின் மகனான பிரசாந்த் ‘வைகாசி பொறந்தாச்சு’ திரைப்படம் மூலம் இண்ட்ரோவாகி பின் நாட்களில் காதல் நாயகனாக அன்றைய இளம்பெண்களின் மனங்களைக் கொள்ளைக் கொண்டார்.
மேலும் தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குநர்களான பாலுமகேந்திரா, மணிரத்னம், ஷங்கர் படங்களில் தொடங்கி, தவிர்க்க இயலாத நடிகராக உருவெடுத்தார்.
மேலும் தன் தொடக்க கால படங்களான வைகாசி பொறந்தாச்சு, செம்பருத்தி முதல், ஜோடி, ஜீன்ஸ், பார்த்தேன் ரசித்தேன், கண்ணெதிரே தோன்றினாள் என சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ள வசூலிலும் மாஸ் நாயகனாக உருவெடுத்தார் பிரசாந்த்.
ஜிம்னாஸ்டிக் நடனம் முதல் சண்டை வரை
நடனமாகட்டும், ஃபைட் ஆகட்டும் அனைத்தையும் சிறப்பாக திரையில் செய்து, ஜிம்னாஸ்டிக்ஸ், குழந்தை முகம் என க்யூட்டாக வலம் வந்த பிரசாந்தை அன்றைய காலக்கட்டத்தில் ரசிக்காதவர்களே இருக்க முடியாது.
ஆனால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் எதிர்பார்ப்புக்கும் மாறாக, கடந்த பத்து ஆண்டுகளில் தன் திரைப்பயணத்தில் பெரும் வீழ்ச்சியை பிரசாந்த சந்தித்துள்ளார். திருமணம், விவாகரத்து தொடங்கி பல தனிப்பட்ட பிரச்னைகளில் சிக்கி இன்றைக்கு மீண்டும் ஒரு ப்ரேக்குக்காக காத்திருக்கும் நடிகர் பிரசாந்தின் நிலை அவரது 90ஸ் ரசிகர்களை இன்றளவும் வருத்தபடவைத்து வருகிறது.
மேலும் நடிகர் பிரசாந்த் தொடர்பான சிறு சிறு செய்திகளையும் அவர்களது ரசிகர்கள் ட்ரெண்டாக்கி, பழைய பிரசாந்தாக மீண்டும் சினிமாவுக்கு வரவேண்டும் என அவருக்கு உத்வேகமூட்டி வருகின்றனர்.
பிரசாந்தின் வைரல் வீடியோ
அந்த வகையில், தற்போது நடிகர் பிரசாந்தின் பழைய நடன வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
மலேசியாவில் நடந்த நடன நிகழ்ச்சி ஒன்றுக்கு கலா மாஸ்டர் கொரியோகிராஃபி செய்துள்ள நிலையில் சுவலட்சுமி, சிம்ரன், தேவயானி, ரம்பா, ரம்யா கிருஷ்ணன், ஈஷா கோபிகர் உள்ளிட்ட நடிகைகளுடன் பிரசாந்த் துள்ளலாக நடனமாடும் இந்த வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம், யூட்யூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளி வருகிறது.
View this post on Instagram
மேலும் பிரசாந்த் மீண்டும் நடிக்க வரவேண்டும், அவருடைய தற்போதைய நிலை வேதனை தருகிறது எனவும் பலரும் கமெண்ட் செக்ஷனில் பதிவிட்டு வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

