Subash Palekar Biopic : வாவ்.. இயற்கை விவசாயி சுபாஷ் பலேகர் பயோபிக்... பிரகாஷ்ராஜ் திரைக்கதை எழுதுகிறாரா?
ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயி சுபாஷ் பலேகர் பயோபிக் எழுத உள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ் என்றும், அதை இயக்க உள்ளார் சுற்றுச்சூழல் ஆர்வலர் விஜய் ராம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயி சுபாஷ் பலேகர் பயோபிக் எழுத உள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ் என்றும், அதை இயக்க உள்ளார் சுற்றுச்சூழல் ஆர்வலர் விஜய் ராம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் என்ற ஒன்றை கண்டுபிடித்தவர் பெருமைக்குரிய சுபாஷ் பலேகர். விவசாயத்திற்கு தேவையான எந்த ஒரு இடுபொருட்களுக்காக பணம் செலவழிக்காமல் தாவரங்களுக்கு தேவையான சத்துக்களை இயற்கையாகவே கிடைக்க செய்து மீதமுள்ள சத்துக்களை மண்ணில் இருந்து பெற்றுக் கொள்வது சத்தியம் என்பது தான் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம்.
சுபாஷ் பலேகர் பயோபிக் :
சுபாஷ் பலேகர் இது குறித்து நன்கு அறிந்தவர். சூர்யா நடித்த "என்ஜிகே" மற்றும் "மகரிஷி" போன்ற படங்களின் மூலம் இயற்கை விவசாயம் குறித்து சினிமா ரசிகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமாகியுள்ளனர். அந்த வகையில் சுபாஷ் பாலேகரின் வாழ்க்கை வரலாறு குறித்த பயோபிக்கை எழுதவுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தினை சுற்றுச்சூழல் ஆர்வலரான விஜய் ராம் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மக்களுக்கு இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram
ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் :
ஆந்திர பிரதேசம், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களில் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள அரசாங்க ஆதரவு பெற்றுள்ளார் சுபாஷ் பலேகர். மேலும் கர்நாடக, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களும் ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் மீது தங்களுடைய ஆர்வத்தை தெவித்துள்ளனர். ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயம் செய்வதால் விவசாயிகள் இரண்டு மடங்கு லாபம் பெறலாம். மேலும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளின் பயன்பாட்டை தவிர்க்கலாம் எனவும் கூறப்படுகிறது.
பிரகாஷ்ராஜ் நடிக்கும் மற்ற படங்கள் :
தென்னிந்திய சினிமாவின் திறமையான நடிகர்களில் ஒருவரான பிரகாஷ்ராஜ் சமீபத்தில் வெளியான மணிரத்னத்தின் "பொன்னியின் செல்வன் " திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது சகுந்தலம் மற்றும் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.