மேலும் அறிய

Prakash Raj Pony Verma: மகன் முன்னிலையில் மூன்றாவது திருமணம் செய்து கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ்!

நடிகர் பிரகாஷ்ராஜ் மீண்டும் திருமணம் செய்துகொண்டார் என்ற தலைப்பில் இணையத்தில் வெளியான புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்த அதன் பின்னணி என்னவென்பதை அவரே விளக்கியிருக்கிறார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் மீண்டும் திருமணம் செய்துகொண்டார் என்ற தலைப்பில் இணையத்தில் வெளியான புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்த அதன் பின்னணி என்னவென்பதை அவரே விளக்கியிருக்கிறார்.

அந்தப் படம் அவரது இரண்டாவது மனைவியுடன் எடுக்கப்பட்ட புகைப்பட்டம். பிரகாஷ்ராஜ் தனது திருமண நாளை அண்மையில் கொண்டாடியுள்ளார். அப்போது எடுத்த புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், இன்றிரவு நாங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டோம். என் மகன் வேதந்த் எங்கள் திருமணத்தை பார்க்க விரும்பியதால் அவன் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது என்று பதிவிட்டிருந்தார்.

அட இவ்வளவுதானா என்று கேப்ஷனைப் பார்த்து பரபரப்பான நெட்டிசன்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து கடந்து சென்றனர்.

மொட்டைமாடி காதல் டூ மனமுறிவு:

தென்னகத்தின் முக்கிய வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக அறியப்படுபவர் பிரகாஷ்ராஜ். தமிழில் இயக்குநர் கே.பாலச்சந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர். அதன்பின், பல நல்ல படங்களை தயாரித்துள்ளார். கர்நாடகத்தைச் சேர்ந்தவரான இவர் சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தபோது அவர் தங்கியது தியாகராய நகரில் உள்ள நடிகை டிஸ்கோ சாந்தியின் வீட்டு மாடியில். அந்த வீட்டில் வாடகைக்கு குடியிருந்தபோது இவருக்கும் டிஸ்கோ சாந்தியின் தங்கையும் சில படங்களில் தலைகாட்டியவருமான லலிதகுமாரிக்கும் காதல் ஏற்பட்டது.

இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு பூஜா, மேக்னா என்ற குழந்தைகள் உள்ளனர். ஓர் ஆண் குழந்தை, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டது. இந்நிலையில், பிரகாஷ் ராஜும், லலிதா குமாரியும் பரஸ்பர ஒப்புதலுடன் விவாகரத்து செய்து கொண்டனர். பிரிவின்போது அவர், "பிரிவு என்பது சகஜமான விஷயம். வாழ்கிற வாழ்க்கை சரியாக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் கணவன், மனைவி ஒருத்தருக்கு ஒருத்தர் பொய் சொல்லிக்கொண்டு வாழாதீர்கள்" என்று கூறியிருந்தார்.

அதன்பின்னர் 2010ல் பிரகாஷ்ராஜ் போனி வர்மாவை திருமணம் செய்து கொண்டார். போனிவர்மா, இனிது இனிது என்ற படத்தில் ஒரே ஒரு பாடலில் நடனமாடியிருப்பார். அவர், பிரகாஷ்ராஜின் மேக்கப் அசிஸ்டென்ட்டாகவும் இருந்தார். போனி வர்மாவுக்கும் பிரகாஷ்ராஜுக்கும் நீண்ட கால நட்பு இருந்தது. இந்நிலையில் தான் அவர் 2010ம் ஆண்டில் போனிவர்மாவைக் கரம் பிடித்தார். மும்பையில், வேத மந்திரங்கள் ஓத இந்து முறைப்படி போனி வர்மாவுக்கு பிரகாஷ்ராஜ் தாலி கட்டினார். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் முக்கிய திரையுலக பிரமுகர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். நேற்று அவர் தனது 11வது திருமண நாளைக் கொண்டாடியுள்ளார்.

திருமண நாள் புகைப்படம் அன்பின் வெளிப்பாடான முத்தத்துடன் அழகாக இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்Anbumani PMK meeting ; அமாவாசை சென்டிமெண்ட்! ஆட்டத்தை ஆரம்பித்த அன்புமணி! பனையூரில் முக்கிய மீட்டிங்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
TNPSC GROUP-IV க்கு இப்படி ஒரு ஆஃபரா...! தவறவிடாதீர் மாணவர்களே; உடனே இதை செய்யுங்கள்
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Zomato Search Trends: ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato!
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 2 சிங்கப்பெண்கள்:  துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
Arjuna Awards 2024: தமிழ்நாட்டைப் பெருமைப்படுத்திய 2 சிங்கப்பெண்கள்: துளசிமதி , நித்யஸ்ரீக்கு அர்ஜூனா விருது
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
அலறிய போலீஸ் ஸ்டேஷன்.. வெட்டிய தலையுடன் சென்றதால் பரபரப்பு.. தந்தை மகன் வெறிச்செயல்! 
Nimisha Priya: கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
கேரள செவிலியருக்கு ஏமனில் மரண தண்டனை: நிமிசாவுக்கு நடந்தது என்ன? சிக்கலில் இந்திய அரசு
Madhavaram Tech City: மாதவரத்தில் டெக் சிட்டி.. மாஸ்டர் பிளான் என்ன?.. தேர்வான சிங்கப்பூர் நிறுவனம்
மாதவரத்தில் டெக் சிட்டி.. மாஸ்டர் பிளான் என்ன?.. தேர்வான சிங்கப்பூர் நிறுவனம்
Embed widget