தலையில் காயங்களுடன் குளியலறையில் கிடந்த நடிகர் பிரதீப் விஜயன்.. 2 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு!
தெகிடி , மேயாத மான் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் பிரதீப் விஜயன் உயிரிழந்துள்ள செய்தி தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
பிரதீப் விஜயன்
கடந்த 2013 ஆம் ஆண்டு மிர்ச்சி சிவா நடித்த சொன்னா புரியாது படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் பிரதீப் கே விஜயன். தெகிடி, மேயாத மான், லிஃப்ட் , இரும்புத் திரை , தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் , என்னோடு விளையாடு , ஒரு நாள் கூத்து , மீசையை முறுக்கு , நெஞில் துணிவிருந்தால் , திருட்டுப் பயலே 2 , ஆடை , சங்கு சக்கரம் , ஹீரோ , மனம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார் பிரதீப் விஜயன். கடைசியாக ராகவா லாரன்ஸ் நடித்த ருத்ரன் படத்தில் நடித்தார்.
நடிப்பு தவிர்த்து திரைப்படங்களுக்கு சப்டைட்டில் போடும் பணிகளையும் செய்து வந்தார் பிரதீப் விஜயன். பி டெக் பட்டம் பெற்ற பிரதீப் சினிமா மீது இருந்த ஆர்வத்தால் நடிப்பை தேர்வு செய்தார். சென்னை பாலவாக்கத்தில் தனியாக அறை எடுத்து வசித்து வந்துள்ளார். கடந்த இரு நாட்களாக பிரதிபுக்கு அவரது நண்பர்கள் தொலைபேசியில் அழைக்க முயற்சித்துள்ளார்கள். ஆனால் பிரதீப் பதிலளிக்காததால் அவர் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்கள். ஆனால் கதவு உள்பக்கம் பூட்டியிருந்ததாலும் வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வந்ததால் உடனே காவல் துறைக்கு தெரிவித்துள்ளார்கள். காவல் துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது இறந்த நிலையில் பிரதீப் விஜயன் கிடந்துள்ளார். அவர்ருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Rest In Peace Pradeep K Vijayan#RIP pic.twitter.com/ZuIgNAdbMP
— 𝐀𝐬𝐢𝐟_𝐕𝐉 T V K (@ThalapathyAsif2) June 13, 2024
அதே நேரம் பிரதீப் விஜயனுக்கு மனநல பிரச்சனைகள் ஏதும் இருந்து அதற்கு அவர் மாத்திரைகள் எடுத்துக் கொண்டாரா என்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரதீப்பின் உடல் தற்போது சென்னை ராயபேட்டை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப் பட்டுள்ளது. இறந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து பிரதீப் விஜயன் கண்டறியப் பட்டுள்ளது திரையுலகில் பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்தார். 2 நாட்களாக செல்போன் அழைப்புகளுக்கு பதில் அளிக்காததால் காவல்துறையிடம் நண்பர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது குளியறையில் பிரதீப் விஜயன் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். குளியலறையில் தலையில் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு காமெடி கதாபாத்திரங்கள் நடித்த பிரதீப் ரசிகர்களிடமும் நல்ல அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். அவரது எதிர்பாராத மரணத்தைத் தொடர்ந்து ரசிகர்கள் தங்கள் அனுதாபங்களை வெளிப்படுத்தி வருகிறார்கள்.