
Nepoleon: என் தோழன் நீயல்லவா.. மகன் பிறந்தநாளில் அமெரிக்காவில் இருந்து வீடியோ பகிர்ந்த நெப்போலியன் .. வாழ்த்திய குஷ்பு!
தனது மகனின் 25 ஆவது பிறந்தநாள் கொண்டாடத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நெப்போலியன்.

1991ஆம் ஆண்டு பாரதிராஜாவின் ’புது நெல்லு புது நாத்து’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகர் நெப்போலியன். முதலில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த நெப்போலியன், 1993ஆம் ஆண்டு சூப்பர் ஹிட் படமான ’சீவலப்பேரி பாண்டி’யில் ஹீரோவாகி, தொடர்ந்து இன்று வரை பல படங்களில் பல வித கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். மேலும் கோலிவுட் தாண்டி 'டெவில்ஸ் நைட்’, ’க்ரிஸ்மஸ் கூப்பன்’ போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்து நெப்போலியன் அனைவரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறார்.
நெப்போலியன் தமிழில் இறுதியாக பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ’சுல்தான்’ படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் வெளியான இப்படத்தில் கார்த்திக்கு அப்பாவாக நெப்போலியன் நடித்துள்ளார்.
நெப்போலியன் குடும்பம்
நடிகர் நெப்போலியனுக்கு ஜெயசுதா என்கிற மனைவியும் தனுஷ், குணால் என்கிற இரண்டு மகன்களும் உள்ளனர். மூத்த மகன் தனுஷ் உடல்நிலை சரியில்லாமல் போன நிலையில் அவரை மருத்துவர்களிடம் காண்பிக்க அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார்.
அங்கே டென்னஸி மாகாணத்தில் தனது குடும்பத்துடன் தற்போது வசித்து வருகிறார் நெப்போலியன். மேலும் ஜீவன் டெக்னாலஜீஸ் என்கிற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தை சொந்தமாக தனது மனைவியுடன் இணைந்து நிர்வகித்து வருகிறார். அமெரிக்காவுக்கு சென்றாலும் தன்னுடைய சொந்த விருப்பத்தில் விவசாயமும் செய்து வருகிறார் நெப்போலியன்.
மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம்
View this post on Instagram
100 படங்களுக்கு மேலாக நடித்த நெப்போலியன் தனது மூத்த மகன் தனுஷின் உடல் நிலை காரணமாக தனது நடிப்பு வாழ்க்கைக்கு ப்ரேக் எடுத்தார். மஸ்குளர் டிஸ்ட்ரோஃபி என்கிற குறைபாடால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு ஏற்ற மாதிரியான சூழல் இந்தியாவில் இல்லாத காரணத்தினால் மட்டுமே தான் அமெரிக்காவிற்கு குடிபெயர வேண்டியதாயிற்று என்று தெரிவித்துள்ளார் நெப்போலியன்.
இந்நிலையில், நேற்று ஜூலை 29 ஆம் தேதி தனது மகன் தனுஷின் 25 ஆவது பிறந்தநாளை தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடியுள்ளார். இதன் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார் நெப்போலியன். இந்த வீடியோவில் நடிகை குஷ்பு உள்பட நெட்டிசன்கள் பலரும் நெப்போலியன் மகனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: கலைஞனை கொண்டாடுவது சரி...! முட்டாள் கதாப்பாத்திரத்தை எதற்கு? - பொறுப்பை மறந்த மீம் கிரியேட்டர்ஸ்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

