HBD Nakkhul : ஏய் அட்ரா அட்ரா நாக்க முக்க! நம்ம ஜூஜூவா இது... தெறிக்கவிட்ட நகுல் பிறந்தநாள் இன்று
என்றுமே சிரித்த முகத்துடன் இருக்கும் நகுல் ஒரு நடிகராக மட்டுமின்றி பாடகர் டான்ஸராகவும் கலக்கி வரும் இவர் இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
![HBD Nakkhul : ஏய் அட்ரா அட்ரா நாக்க முக்க! நம்ம ஜூஜூவா இது... தெறிக்கவிட்ட நகுல் பிறந்தநாள் இன்று Actor Nakkhul celebrates his 39th birthday today HBD Nakkhul : ஏய் அட்ரா அட்ரா நாக்க முக்க! நம்ம ஜூஜூவா இது... தெறிக்கவிட்ட நகுல் பிறந்தநாள் இன்று](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/14/1f0bd87369527650692720585becd3ca1686764158296224_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராகவும், நடிகை தேவயானியின் தம்பியுமான நடிகர் நகுல் இன்று தனது 39-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். என்றுமே சிரித்த முகத்துடன் இருக்கும் நகுல் ஒரு நடிகராக மட்டுமின்றி, பாடகர் மற்றும் சிறந்த டான்ஸராகவும் இருந்து வருகிறார். பல நிகழ்ச்சிகள், ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராகவும் இருந்து வருகிறார் நடிகர் நகுல்.
சினிமா அறிமுகம் :
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான 'பாய்ஸ்' படத்தில் ஜூஜூ என்ற கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவரின் முகத்தை அவ்வளவு எளிதில் மறந்து விடமுடியாது. வித்தியாசமான ஹேர் ஸ்டைல், கொழுகொழு உருவம், குழந்தை போன்ற குணாதிசயம் கொண்ட ஒரு பையனாக நடித்திருந்தார். அதே நகுல் அடுத்ததாக 'காதலில் விழுந்தேன்' படத்தில் உடல் எடையை குறைத்து ஸ்மார்ட்டான ஒரு ஹீரோவாக சைக்கோ காதலனாக தூள் கிளப்பி இருந்தார். அப்படத்தில் இடம்பெற்ற 'ஏய் அட்ரா அட்ரா நாக்க முக்க...' பாடல் பட்டி தொட்டி எல்லாம் விசில் பறக்க வைத்தது. இன்றளவும் அந்த பாடலை கேட்டால் உடனே தன்னை அறியாமல் ஆட்டம் போட வைக்கும் பாடல்.
அடுத்தடுத்து நகுல் நடித்த மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், நான் ராஜாவாக போகிறேன் என பல படங்களில் நடித்து வந்தவர் திடீரென சினிமாவில் நடிப்பதில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். தற்போது மீண்டும் 'நிற்க அதற்கு தக' என கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகும் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
திருமண வாழ்க்கை:
கடந்த 2016-ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலியான ஸ்ருதியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ஒரு வித்தியாசமான ஜோடிகளாக திகழும் இந்த தம்பதி தனது இரண்டு குழந்தைகளையும் வாட்டர் பர்த் முறையில் பெற்று எடுத்தனர். சோசியல் மீடியாவில் அதன் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரின் கவனம் பெற்றனர்.
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நகுல் எத்தனை பிஸியாக இருந்தாலும் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க தவறுவதில்லை. அவர்களுடன் சேர்ந்து இருக்கும் அற்புதமான தருணங்களை புகைப்படமாக ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள தவறுவதில்லை. மிகவும் அழகான இந்த ஃபேமிலிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
நடிகர் நகுல் மேலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து அவரின் ரசிகர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதுதான் அவர்களின் ஆசையாக இருக்கிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)