Thalapathy 68: எதிர்பார்க்கவே இல்ல! விஜய்க்கு வில்லனாகும் வெள்ளிவிழா நாயகன்! யார் தெரியுமா?
வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தின் வில்லன் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா ஆகியோரும் நடிக்கின்றனர்.
![Thalapathy 68: எதிர்பார்க்கவே இல்ல! விஜய்க்கு வில்லனாகும் வெள்ளிவிழா நாயகன்! யார் தெரியுமா? actor mohan to play the lead antagonist role in vijay thalapathy 68 directed by venkat prabu Thalapathy 68: எதிர்பார்க்கவே இல்ல! விஜய்க்கு வில்லனாகும் வெள்ளிவிழா நாயகன்! யார் தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/20/54de719760a999897e30669f456e19591697795349046572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
லியோ
லோகேஷ் கனகராஜ் இயக்கி விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் நேற்று முன்தினம் வெளியாகி இருக்கிறது. விஜய்யுடன் இணைந்து த்ரிஷா, பிரியா ஆனந்த், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், சஞ்சய் தத், அர்ஜுன், மடோனா செபாஸ்டியன், ஜார்ஜ் குட்டி, தினேஷ் மாஸ்டர், அனுராக் காஷ்யப் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். விஜய் ரசிகர்களால் நூற்றூக்கு நூறு மதிப்பெண்கள் கொடுக்கப் பட்டாலும் லியோ திரைப்படம் லைட்டாக சறுக்கியுள்ளதை ஏற்றுக் கொள்ளதான் வேண்டும்.
பெரும்பாலான ரசிகர்கள் படம் இரண்டாம் பாதியில் திரைக்கதையில் சொதப்பி இருப்பதாக உணர்கிறார்கள். அட்டகாசமான முதல் பாதி இருந்தாலும் படத்தின் பிரதான வில்லன்கள் என்று நினைக்கப் பட்ட அர்ஜுன் மற்றும் சஞ்சய் தத் கதாபாத்திரங்கள் இரண்டாம் பாதியில் இருந்து தான் தொடங்குகின்றன. அதுவும் அவர்களுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் அமையவில்லை. இது தவிர்த்து முழுவதும் ஆக்ஷன் காட்சிகளால் நிறைந்திருக்கும் இரண்டாம் பாதி கதையாகவும் அவ்வளவு அழுத்தமாக இல்லை. இதனால் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களையே படம் பெற்று வருகிறது.
தளபதி 68
லியோ படத்தின் மீதான கவனம் குறைந்த பிறகு விஜய் ரசிகர்கள் அடுத்த ஒரு வருடத்திற்கு இணையதளத்தில் பேசப்போகும் வார்த்தை தளபதி 68. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் தொடங்கியது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க ஏ.ஜி எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. மீனாக்ஷி செளத்ரி, பிரசாந்த், பிரபுதேவா இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க இருக்கிறார்கள். லியோ படத்தின் ரிலீஸ் காரணத்தினால் தளபதி 68 படம் குறித்த அப்டேட்கள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ட்விட்டரில் வெங்கட் பிரபுவிடம் “ நான் வேலையைத் தொடங்க வேண்டும்” என்கிற பதிவு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
யார் வில்லன்?
லியோ படத்தின் வில்லன் கதாபாத்திரங்கள் ஒரு சில ரசிகர்களுக்கு திருப்திகரமாக இல்லை என்று இணையதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதனைத் தொடர்ந்து தளபதி 68 படத்தில் யார் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தளபதி 68 படத்தில் பிரபல நடிகர் மோகன் முக்கிய வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
வெள்ளி விழா நாயகன்:
மைக் மோகன் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் மோகன் மணிரத்னம் இயக்கிய மெளன ராகம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து பெண்களின் மனம் கவர்ந்த நடிகராக இருந்துள்ளார். ஹீரோவாக மட்டுமில்லாமல் நூறாவது நாள் படத்தில் வில்லனாகவும் நடித்திருந்தார். தனது 100 ஆவது படமான அன்புள்ள காதலுக்கு படத்தைத் தொடர்ந்து 9 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுட்ட பழம் என்கிற படத்தில் நடித்தார் மோகன். தற்போது தளபதி 68 படத்தில் எந்த மாதிரியான வில்லன் கதாபாத்திரத்தை படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு அவருக்கு கொடுக்க போகிறார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)