Watch Video : "நான் இப்ப இப்படித்தான் இருக்கேன்.." ஜெர்சியும், நானி வீடியோவும்.. மாநாட்டைக் கொண்டாடும் மஹத்
மாநாடு படத்தின் வெற்றியை ஜெர்சி பட காட்சியை வெளியிட்டு நடிகர் மஹத் கொண்டாடியுள்ளார்.
சிலம்பரசன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நேற்று திரையரங்குகளில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. பெரும்பான்மையான ரசிகர்கள் சிம்புவுக்கு இதுதான் கம் பேக் என்று சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் சிம்புவின் நெருங்கிய நண்பரும், நடிகருமான மஹத் மாநாடு படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் தெலுங்கில் வெளியான ஜெர்சி படத்தில் நானி ரயில் நிலையத்தில் நின்று கத்தும் வீடியோ இடம்பெற்றுள்ளது. மேலும் மாநாடு படத்தின் வெற்றி தன்னை இப்படித்தான் உணரவைத்துள்ளதாக நடிகர் மஹத் குறிப்பிட்டுள்ளார்.
Truly my feeling right now for @SilambarasanTR_ S #Maanaadu very very happy for you!🤗
— Mahat Raghavendra (@MahatOfficial) November 25, 2021
Thank you GOD and @vp_offl n his team for giving #SilambarasanTR Sucha blockbuster🤩 ! Thanks to all the fans , friends & film industry for all the love and support #BlockbusterMaanaadu 👍🏻❤️ pic.twitter.com/IVFzJFBQco
முன்னதாக, சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் படம் மாநாடு. இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களாக எஸ்.ஜே. சூர்யா, மஹத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்திருக்கும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் 25ஆம் தேதி ரிலீஸ் ஆகுமென அறிவிக்கப்பட்டது.படத்தின் பாடல்களும், ட்ரெய்லரும், ஸ்னீக் பீக்கும் ரசிகர்களிடையே வைரலானது.
இதற்கிடையே மாநாடு பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சிம்பு எனக்கு நிறைய பிரச்சனைகள் கொடுக்கிறார்கள். பிரச்சனைகளை நான் பார்த்துக்கொள்கிறேன் என்னை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள் என உருக்கமாக வேண்டுகோள் வைத்திருந்தார். இப்படிப்பட்ட சூழலில், திரையரங்குகள், மார்க்கெட், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பொது இடங்களுக்குள் நுழைய கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி என்ற புதிய விதிமுறையைத் தமிழ்நாடு சுகாதாரத் துறை சமீபத்தில் அமல்படுத்தியது. தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்புக்கு மாநாடு திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில் நேற்று முன் ட்வீட் செய்த மாநாடு தயாரிப்பாளர் படம் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக தெரிவித்தார். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. மீண்டும் பிரச்னை சரிசெய்யப்பட்டு படம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் நேற்று காலை வரை படம் பிரச்னையிலேயே இருந்தது. தொடர்ந்து காலை 5 மணி காட்சி ரத்து செய்யப்பட்ட நிலையில், படம் வெளியாகுமா இல்லை வெளியாகாதா என்ற குழப்பம் நீடித்தது. அதன் பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில், படம் வெளியிடப்பட்டது.