என்னை பொறாமைப் பட வைத்தாய்.. மகனை புகழ்ந்த மாதவன்
நடிகர் மாதவன் தனது மகனின் 16ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, அவருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
'இஸ் ராத் கி சுபாக் நகின்’ என்ற இந்தி படம் மூலம் அறிமுகமானவர் மாதவன். இதனையடுத்து தமிழில் கடந்த 2000 ஆம் ஆண்டு, அலைபாயுதே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். சினிமாவில் எப்படியாவது சாதித்த விட வேண்டும் என்ற துடிப்புடன் இருந்த மாதவன், கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார்.
இதனையடுத்து ரன், கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து, அன்பே சிவன் உள்ளிட்ட படங்களில் நடித்து தனது கடின உழைப்பால் முன்னணி நடிகராக மாறினார். இன்றுவரை ரசிகர்களிடம் சாக்லேட் பாய் என்ற பெயரை பெற்றுள்ளார்.
அதிலும் குறிப்பாக அலைபாயுதே படத்தில் இவருக்கு உருவான பெண் ரசிகர்கள் கூட்டம், சற்றும் குறையாமல் இருக்கிறது. ரசிகர்களால் மேடி என்று அழைக்கப்படும், இவர் கடந்த 1999 ஆம் ஆண்டு சரிதா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.
மாதவன் - சரிதா தம்பதிக்கு வேதாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மாதவனின் மகன் வேதாந்த் இன்று தனது 16ஆவது பிறந்தநாள், கொண்டாடுகிறார். இதனையொட்டி மாதவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனுக்கு வாழ்த்து தெரிவித்துப் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த பதிவில், “நான் நன்றாக இருக்கும் அனைத்து விஷயங்களிலும், என்னை முந்தியடித்து சென்று பொறாமைப் படுத்தியதற்கு நன்றி. என் இதயம் மிகவும் பெருமிதம் கொள்கிறது.
நான் உங்களிடமிருந்து நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும் என் பையன். உங்களுக்கு 16வது பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
View this post on Instagram
நாங்கள் உங்களுக்கு வழங்குவதை விட இந்த உலகத்தில் நீங்கள் சிறந்த இடம் பெறுவாய் என நம்புகிறேன். நான் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட தந்தை” எனக் கூறியுள்ளார்.
நீச்சல் போட்டியில் ஆர்வமுடைய வேதாந்த், நீர் சாகச விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்துவார். கடைசியாக வேதாந்த் தேசிய அளவில் நடந்த நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு வென்றார். அவருக்கு மூன்று தங்கம் மற்றும் ஒரு வெள்ளி என்று நான்கு பதக்கங்கள் வென்று அசத்தி உள்ளார்.
இந்தியாவுக்கு வெள்ளி பதக்கம் வென்று கொடுத்த வேதாந்த் பிறந்தநாளுக்கு சமூக வலைதளங்களில் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.