மேலும் அறிய

Lollu Sabha Manohar: "4 வருஷம்.. நடையா நடக்குறேன்.. பணம் தராம இழுக்குறாரு அவரு" லொள்ளுசபா மனோகர் வேதனை

தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு ரூபாய் 10 லட்சம் தராமல் 4 வருடமாக ஏமாற்றி வருவதாக நடிகர் லொள்ளு சபா மனோகர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர்களில் குறிப்பிடத்தக்கவர் லொள்ளு சபா மனோகர். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சி மூலமாக இவர் தமிழக மக்கள் மத்தியில் பிரபலமானார். திரைப்படங்கள், தொடர்களில் நடித்தாலும் பெரியளவு வருவாய் இல்லாமல் சிரமப்பட்டு வருவதாக பல முறை பேட்டிகளில் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்திற்கு வந்திருந்த லொள்ளுசபா மனோகர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,

10 லட்சம் ரூபாய்:

“ நலிந்த கலைஞர்கள் பட்டியலில் என்னையும் சேர்க்க வேண்டும். நடிகர் சங்கத்திற்கு என் வீட்டில் இருந்து நடந்தே வருகிறேன். அவர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து ஏதோ டிபன் சாப்பிடுவேன். தயாரிப்பாளர் ரிஷிராஜ் எனக்கு ரூபாய் 10 லட்சம் தர வேண்டும். இதற்காக நடிகர் சங்கத்திடம் புகார் அளித்தபோதும் எந்த பயனும் கிடைக்கவில்லை. நீதிமன்றத்திலும் 4 வருடம் வழக்கு நடைபெற்று வருகிறது.

அங்கும் எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. வடபழனிக்கும், வீட்டிற்கும் நடந்து கொண்டே இருக்கிறேன். அந்த தயாரிப்பாளர் பைக்கில் வந்து கொண்டுதான் இருக்கிறார். நடிகர்சங்கம்தான் இதைத் தீர்த்து வைக்க வேண்டும். நடிகர் சங்கத்திற்குள் வந்துவிட்டால் எந்த கவலையும் இருக்காது. எனது கண்ணீர், ஆதங்கம் குறித்து நடிகர் சங்கத்திடம் நான் முறையிடவில்லை. ஏற்கனவே முறையிட்ட விஷயங்களே இதுவரை நடக்கவில்லை.”

இவ்வாறு அவர் பேசினார்.

பிரபல காமெடியன்:

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் மற்றும் ஹீரோவாக உலா வரும் சந்தானத்துடன் இணைந்து லொள்ளுசபாவில் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். விஜய், சிம்பு, அருண் விஜய், பரத், அதர்வா, கார்த்தி, விதார்த், ஜிவி பிரகாஷ், ஜெய் என பல முன்னணி பிரபலங்களின் படங்களில் நடித்துள்ளார்.

சுமார் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தாலும் பெரியளவு வருவாய் இல்லாமல் சிரமப்படுவதாக யூ டியூப் தொலைக்காட்சிகளில் பல முறை பேட்டி அளித்துள்ளார். இந்த சூழலில், தயாரிப்பாளர் 10 லட்சம் ரூபாய் தராமல் ஏமாற்றி வருவதாக அவர் பேட்டி அளித்திருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் லொள்ளு சபா மனோகருக்கு நியாயம் பெற்றுத்தர வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
Indigo விமான சேவை: பயணிகளை டார்ச்சர் செய்ததால் 22 கோடி அபராதம்! DGCA அதிரடி நடவடிக்கை!
Indigo விமான சேவை: பயணிகளை டார்ச்சர் செய்ததால் 22 கோடி அபராதம்! DGCA அதிரடி நடவடிக்கை!
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
ADMK: இன்றே கடைசி..! யாருக்கு எத்தனை தொகுதிகள்? ராமதாஸ் எங்கே? பாஜகவின் வேகம், எடப்பாடியின் முடிவு?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
IND Vs NZ 3rd ODI: தொடரை வெல்லப்போவது யார்? இந்தியா Vs நியூசி., கடைசி ஒருநாள் போட்டி - இன்று ரோகித் சாதிப்பாரா?
Indigo விமான சேவை: பயணிகளை டார்ச்சர் செய்ததால் 22 கோடி அபராதம்! DGCA அதிரடி நடவடிக்கை!
Indigo விமான சேவை: பயணிகளை டார்ச்சர் செய்ததால் 22 கோடி அபராதம்! DGCA அதிரடி நடவடிக்கை!
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
Embed widget