மேலும் அறிய

போதைப் பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா முதல்முறை விளக்கம்!

போதைப் பொருள் பயண்பாட்டில் தனது பெயர் இடம்பெற்ற காரணம் குறித்து நடிகர் கிருஷ்ணா முதல் முறை மனம் திறந்து பேசியுள்ளார் .

தன்னை வைத்து படமியக்குவதாக சொன்னதால் ஒரு நபரை தான் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் அந்த நபர் போதைப் பொருள் வழக்கில் சிக்கியதால் தன்னையும் காவல்துறை சந்தேகப்பட்டது என கிருஷ்ணா தெரிவித்துள்ளார்

போதைப் பொருள் பயண்படுத்தியதற்காக கடந்த ஆண்டு நடிகர் ஶ்ரீகாந்த் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் கிருஷ்ணாவை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் நடிகர் கிருஷ்ணா முதல்முறையாக விளக்கமளித்துள்ளார்

போதைப்பொருள் சர்ச்சை குறித்து நடிகர் கிருஷ்ணா விளக்கம் 

என்னுடைய முதல் இரண்டு படங்களுமே தோல்விதான். ஆரம்பத்திலேயே தோல்வியை பார்த்துவிட்டதால் நான் வெற்றிகளை பெரிதாக கொண்டாட மாட்டேன். நான் பார்ட்டிக்கு போகமாட்டேன் , க்ளப் போக மாட்டேன். சினிமா நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டேன். என்னுடைய முதல் படம் வெளியானபோது நான் நடிகர் என்று தெரியாமல் என்னை ஒரு விருது  விழாவிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார்கள். இந்த மாதிரி இடத்திற்கு வந்து அசிங்கப்படக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதே நேரம் ஏதாவது பார்ட்டியில் யாரையாவது பார்த்தால்  ஹாய் எப்படி இருக்கீங்க என்று தான் கேட்கமுடியும். அதற்கு மேல் அவர்கள் அடிக்கும் மொக்கை ஜோக்களுக்கு என்னால் சிரிக்க முடியாது. இந்த மாதிரி சூழல்களை தவிர்ப்பதால் நான் நிறைய பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறேன் 

என் மீது ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டபோது என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை என்னால்  நம்பமுடியவில்லை. அப்போது நான் படப்பிடிப்பில் இருந்தேன். நான் மலையில் இருந்ததால் அங்கு சிக்னல் இல்லை. தொலைக்காட்சியை பார்த்துதான் என்னைப் பற்றி இப்படியான ஒரு செய்தி பரவி வருகிறது தெரிந்துகொண்டேன். இந்த நேரத்தில் நான் இங்கு இருந்தால் சரியாக இருக்காது என்று கிளம்பி சென்னை வர முடிவு செய்தேன். ஃப்ளைட் கிடைக்காததால் அடுத்த நாள் காலையில் என் காரில் கிளம்பிவந்தேன். ஆனால் இங்கு நான் தலைமறைவாகிவிட்டதாக செய்தி வெளியிடத் தொடங்கிவிட்டார்கள். 

என்னுடைய நண்பர்கள் பலர் என்னை போக வேண்டாம் , மும்பை பெங்களூர் என்று எங்காவது போய்விட சொன்னார்கள். சிலர் முன் ஜாமீன் வாங்கிக்கொள்ள சொன்னார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை நான் ஏன் ஒளிய வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தேன். 

இந்த போதைப் பொருள் விவகாரத்தில் எனக்கு தெரிந்த ஒரு நபர் இருந்ததால் என்னையும் இதற்குள் கொண்டு வந்துவிட்டார்கள். ஏனால் அவர் என்னை வைத்து பண்ணுவதாக சொல்லியிருந்தார். அதனால் நான் அடிக்கடி அந்த நபரை சந்தித்து வந்தேன். அந்த நபரால் தான் என்னையும் சந்தேகப்பட்டார். என்னைப் பற்றிய அவதூறு செய்திகளை வெளியிட்டவர்கள் அதற்கு பின் என்ன நடந்தது என்பதை ஏன் சொல்லவில்லை. எனக்கு எல்லா விதமான சோதனைகளும் நடத்தப்பட்டு நான் நிரபராதி என்பதை நிரூபித்துவிட்டேன். அதை ஏன் யாரும் தெரிந்துகொள்ள விரும்பவில்லை. " என நடிகர் கிருஷ்ணா பேசியுள்ளார் 

தலைப்பு செய்திகள்

படப்பிடிப்பில் தனியாக உட்கார்ந்து அழுவேன்...ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹைன் பகிர்வு
படப்பிடிப்பில் தனியாக உட்கார்ந்து அழுவேன்...ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹைன் பகிர்வு
Karthigai Deepam Serial: அம்மா வீட்டுக்குப் போகப்போகும் மனைவி.. சோகத்தில் உறைந்த கணவன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam Serial: அம்மா வீட்டுக்குப் போகப்போகும் மனைவி.. சோகத்தில் உறைந்த கணவன் - கார்த்திகை தீபத்தில் இன்று
Ambika: பணத்தால் வந்த வினை.. ஏமாந்தது நான் தான்.. ராதா மீது அம்பிகா கடும் குற்றச்சாட்டு!
Ambika: பணத்தால் வந்த வினை.. ஏமாந்தது நான் தான்.. ராதா மீது அம்பிகா கடும் குற்றச்சாட்டு!
முடிவுக்கு வந்த வீரா.. ஒரு மணி நேரமாகும் கார்த்திகை தீபம்.. ஜீ தமிழ் சீரியலின் நேர மாற்றம்!
முடிவுக்கு வந்த வீரா.. ஒரு மணி நேரமாகும் கார்த்திகை தீபம்.. ஜீ தமிழ் சீரியலின் நேர மாற்றம்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gem Veeramani : ‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
‘சிக்கிய வீரமணி - சிக்கப்போகும் பெருந்தலைகள்’ அடுத்த கைது யாருடையது..?
Nirmalkumar: ”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”கேடுகெட்ட கட்சி திமுக” யார் அந்த பவர் செண்டர்? - ஜெம் வீரமணி வழக்கில் அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்
”பெண்களை பீரியட்ஸ்க்குள் அடைக்காதீர்கள்” அமைச்சர் கீர்த்தனாவிற்கு என்ன ஆச்சு? TVK கனிமொழி விளக்கம்
”பெண்களை பீரியட்ஸ்க்குள் அடைக்காதீர்கள்” அமைச்சர் கீர்த்தனாவிற்கு என்ன ஆச்சு? TVK கனிமொழி விளக்கம்
CM Joseph Vijay: காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்.. உணவு பரிமாறிய விஜய்.. விளையாட்டு காட்டிய குழந்தைகள்!
CM Joseph Vijay: காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்.. உணவு பரிமாறிய விஜய்.. விளையாட்டு காட்டிய குழந்தைகள்!
TN Chief Secretary: புதிய தலைமை செயலாளர்..! சொந்த பெயரை கொண்ட IAS அதிகாரியை டிக் அடிக்கும் CM விஜய்? சாய்குமார்?
புதிய தலைமை செயலாளர்..! சொந்த பெயரை கொண்ட IAS அதிகாரியை டிக் அடிக்கும் CM விஜய்? சாய்குமார்?
Chennai Power Cut: சென்னைல புதன்கிழமை (23.09.2026) எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட்ட பாருங்க
சென்னைல புதன்கிழமை (23.09.2026) எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட்ட பாருங்க
Agriculture Crop Loan : விவசாயிகள் பயிர் கடன்.! எதிர்பார்த்த சூப்பர் செய்தி வந்தாச்சு- தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
விவசாயிகள் பயிர் கடன்.! எதிர்பார்த்த சூப்பர் செய்தி வந்தாச்சு- தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு
TN Govt: அக்.1 முதல் GPS கட்டாயம்..! கடத்தலை தடுக்க அதிரடி திட்டம் - குவாரிகள் தொடர்பாக அரசு புதிய முடிவு
அக்.1 முதல் GPS கட்டாயம்..! கடத்தலை தடுக்க அதிரடி திட்டம் - குவாரிகள் தொடர்பாக அரசு புதிய முடிவு
Embed widget