மேலும் அறிய

Kavin Monica Wedding Pic: பாக்கு வெத்தல மாத்தி முடிச்சு பையன் வந்தாச்சு... காதலியை கரம்பிடித்த நடிகர் கவின்.. குவியும் வாழ்த்துகள்!

நடிகர் கவின் தனியார் பள்ளி ஆசிரியை மோனிகாவை இன்று கரம்பிடித்துள்ளார். இந்த ஜோடிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

நடிகர் கவினின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகின்றன.

சமீபத்தில் டாடா எனும் சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்து தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கிய இடம் பிடித்துள்ளவர் நடிகர் கவின்.

காதல் டூ கல்யாணம்

சின்னத்திரையில் தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் வெற்றிகரமாக பயணித்து வரும் கவினின் திரைப்பயணம் அவரது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தன் அடுத்தடுத்த படங்களை கவின் கவனமாக தேர்ந்தெடுத்து வரும் நிலையில்  அடுத்ததாக, டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில், அனிருத் இசை அமைக்கும் காதல் கதையில் கவின் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கவினுக்கு விரைவில் மோனிகா எனும் பெண்ணுடன் திருமணம் நடைபெற உள்ளதாக இணையத்தில் செய்திகள் வெளிவரத் தொடங்கின.

கவின் தரப்பினரும் இந்த செய்தியை உறுதி செய்த நிலையில், மோனிகா தனியார் பள்ளி ஆசிரியை என்றும், இது காதல் திருமணம் என்றும் இரு வீட்டார் சம்மதத்துடன் ஆகஸ்ட்.20 இன்று திருமணம் நடைபெறும் என்றும் செய்திகள் வெளியானது.

 

இந்நிலையில், இன்று காதலி மோனிகாவை கவின் கரம்பிடித்துள்ளார். சென்னையில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் சூழ இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. தற்போது கவினின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி லைக்ஸ் அள்ளி வருகின்றன. ஏராளமான திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என கவின் - மோனிகா தம்பதிக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

சின்னத்திரை டூ வெள்ளித்திரை

விஜய் டிவியின் பிரபல சீரியல்களில் ஒன்றான சரவணன் மீனாட்சியின் முதல் சீசனில் முருகன் என்னும் கேரக்டரிலும், 2வது சீசனில் வேட்டையன் என்னும் கேரக்டரிலும் நடித்து சின்னத்திரை வழியாக முதலில் முத்திரை பதித்த கவின், தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கவின் கலந்து கொண்ட நிலையில், அதில் கலவையான விமர்சனங்களை அவர் பெற்றாலும் அடுத்தடுத்து வெள்ளித்திரையில் கால் பதித்து முன்னேறினார்.

ஏற்கெனவே 2012 ஆம் ஆண்டு பீட்சா, 2015 ஆம் ஆண்டு இன்று நேற்று நாளை, 2017 ஆம் ஆண்டு சத்ரியன் ஆகிய படங்கள் சிறு வேடங்களில் நடித்திருந்த கவின், பிக் பாஸ் புகழுக்குப் பிறகு, லிஃப்ட்’ படத்தின் மூலம் ஹீரோவானார்.

அதனைத் தொடர்ந்து வெளியான டாடா படம் கோலிவுட் வட்டாரத்தில் சர்ப்ரைஸ் பேக்கேஜாக அமைந்து ரசிகர்களின் இதயங்களை வென்று வெற்றிப் படமாக மாறியது. இந்நிலையில், கவின் தற்போது  தேர்ந்தெடுத்த கதைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget