மேலும் அறிய

Japan Teaser: “ஜப்பான்.. மேட் இன் இந்தியா” - அமர்க்களமாக வெளியானது கார்த்தியின் 25வது பட டீசர்...!

நடிகர் கார்த்தியின் 25வது படமாக உருவாகி வரும் ‘ஜப்பான்’ படத்தில் அவரது கேரக்டர் பற்றிய சுவாரஸ்யத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. 

நடிகர் கார்த்தியின் 25வது படமாக உருவாகி வரும் ‘ஜப்பான்’ படத்தில் அவரது கேரக்டர் பற்றிய சுவாரஸ்யத்தைப் படக்குழு வெளியிட்டுள்ளது. 

இயக்குநர் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக இருந்து, அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களில் நடித்த அவருக்கு இன்று 45வது பிறந்தநாளாகும். இதனை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் கார்த்திக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இதனிடையே கார்த்தியின் 25வது படமாக ‘ஜப்பான்’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க இயக்குநராக மாறிய ராஜூ முருகன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக அனு இம்மானுவேல் நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு   ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய,ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு வெளியானபோதே பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. கார்த்தியின் பிறந்தநாளான இன்று  ஜப்பான் படத்தின் அப்டேட் நள்ளிரவு வெளியானது. அதன்படி  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் 2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ஜப்பான் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 

இந்நிலையில் ஜப்பான் என்றால் யார் என்ற கேரக்டரை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை தமிழில் நடிகர் சிலம்பரசனும், கன்னடத்தில் நடிகர் ரிஷப் ஷெட்டியும், தெலுங்கில் நடிகர் விஜய் தேவரகொண்டாவும், மலையாளத்தில் நடிகர் துல்கர் சல்மானும் வெளியிட்டனர். 

அவன் பாவ மன்னிப்புகளுக்கு அப்பாற்பட்டவன். ஆண்டவருடைய அதிசய படைப்புகளில் அவன் ஒரு ஹீரோ என்ற வசனங்களுடன் கார்த்தி கேரக்டர் அறிமுகப்படுத்தப்படுகிறது.  இதேபோல் காமெடி, வில்லன் என கார்த்தியின் கேரக்டருக்கு பில்ட் அப் வசனங்கள் கொடுக்கப்படுகிறது. இறுதியாக கார்த்தியிடம் யார் நீ? என வில்லன் தரப்பு கேட்பது போலவும், அதற்கு “ஜப்பான்.. மேட் இன் இந்தியா” என சொல்லும் காட்சிகளும் இடம் பெறுகிறது. இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. 

முன்னதாக தீபாவளிக்கு  நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஜிகர்தண்டா 2 படமும் ரிலீஸாகும் என கூறப்பட்டிருந்தது. இப்படியான நிலையில் ஜப்பான் படமும் வெளியாவதால் ரசிகர்கள் பெரும் ஆவலோடு தீபாவளியை நோக்கி காத்திருக்கின்றனர். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Exclusive PM Modi: என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பிரத்யேக விளக்கம்
என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பதில்
Ayodhya Ram Temple:  தங்க இழைகளால் நெய்யப்பட்ட உடையில் ராமர் - அயோத்தியில் அட்சய திருதியை கொண்டாட்டம்!
தங்க இழைகளால் நெய்யப்பட்ட உடையில் ராமர் - அயோத்தியில் அட்சய திருதியை கொண்டாட்டம்!
Breaking News LIVE: மோடி தீபாவளி விடுமுறை எடுப்பதில்லை.. ராகுல் சுற்றுலாவுக்கு தாய்லாந்து செல்கிறார் - அமித்ஷா
Breaking News LIVE: மோடி தீபாவளி விடுமுறை எடுப்பதில்லை.. ராகுல் சுற்றுலாவுக்கு தாய்லாந்து செல்கிறார் - அமித்ஷா
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட சென்ற அய்யாக்கண்ணு - அடுத்து நடந்தது என்ன?
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட சென்ற அய்யாக்கண்ணு - அடுத்து நடந்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Shakeela Vs Bayilwan Ranganathan | ”அவ நாக்கு அழுகிடும்” சகீலா-பயில்வான் மோதல் சர்ச்சையில் விவாதம்Police Inspection at Savukku house | சவுக்கு வீட்டில் கஞ்சா சிகரெட்கள்.. தனிப்படை சோதனையில் பறிமுதல்Mallikarjun Kharge on Modi | ”அம்பானி அதானியுடன் டீல்? மோடி தூங்கிக் கொண்டிருந்தாரா?” கார்கே பதிலடிArvind Kejriwal Gets Interim Bail |வெளியே வந்த கெஜ்ரிவால்!ஆம் ஆத்மி ஆட்டம் ஆரம்பம்..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Exclusive PM Modi: என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பிரத்யேக விளக்கம்
என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பதில்
Ayodhya Ram Temple:  தங்க இழைகளால் நெய்யப்பட்ட உடையில் ராமர் - அயோத்தியில் அட்சய திருதியை கொண்டாட்டம்!
தங்க இழைகளால் நெய்யப்பட்ட உடையில் ராமர் - அயோத்தியில் அட்சய திருதியை கொண்டாட்டம்!
Breaking News LIVE: மோடி தீபாவளி விடுமுறை எடுப்பதில்லை.. ராகுல் சுற்றுலாவுக்கு தாய்லாந்து செல்கிறார் - அமித்ஷா
Breaking News LIVE: மோடி தீபாவளி விடுமுறை எடுப்பதில்லை.. ராகுல் சுற்றுலாவுக்கு தாய்லாந்து செல்கிறார் - அமித்ஷா
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட சென்ற அய்யாக்கண்ணு - அடுத்து நடந்தது என்ன?
பிரதமர் மோடியை எதிர்த்து வாரணாசியில் போட்டியிட சென்ற அய்யாக்கண்ணு - அடுத்து நடந்தது என்ன?
10th Supplementary Exam: 10ம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு; மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
10th Supplementary Exam: 10ம் வகுப்பு துணைத்தேர்வு தேதி அறிவிப்பு; மாணவர்கள், தனித்தேர்வர்கள் மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
The Boy and the Heron Review : தன் கற்பனை கடலில் மூழ்கடிக்கும் மியாசாகி.. The Boy and the Heron பட விமர்சனம்
The Boy and the Heron Review : தன் கற்பனை கடலில் மூழ்கடிக்கும் மியாசாகி.. The Boy and the Heron பட விமர்சனம்
Kingdom of the Planet of the Apes Review: சீசர் பெயரை காப்பாற்றியதா? கிங்டம் ஆஃப் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ்.. விமர்சனம் இதோ..!
Kingdom of the Planet of the Apes Review : சீசர் பெயரை காப்பாற்றியதா? கிங்டம் ஆஃப் தி பிளானெட் ஆஃப் தி ஏப்ஸ் விமர்சனம் இதோ..!
Akshaya Tritiya 2024: அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!
அட்சய திருதியை: ரூ.14,000 கோடிக்கு தங்கம் விற்பனை..!
Embed widget