Santhanam: இங்க நான் தான் கிங்கு... சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட கமல்ஹாசன்
ஆனந்த நாராயணன் இயக்கத்தில் சந்தானது நடிக்கும் படத்திற்கு ’இங்க நான் தான் கிங்கு’ என டைட்டில் வைக்கப் பட்டுள்ளது
சந்தானம் நடித்துள்ள ‘இங்க நான் தான் கிங்கு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார்.
சந்தானம்
சந்தானம் நடித்து சமீபத்தில் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இப்படம் வெளியாவதற்கு முன்பு பலவித சர்ச்சைகள் எழுந்தன. ஆனால் படம் வெளியானப் பின் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருந்தது. ஹாரர் மற்றும் காமெடி என் இரு ஜானர்களிலும் சந்தானம் நடித்து வரும் படங்கள் கலக்கி வருகின்றன. அதே நேரத்தில் மாஸான ஹீரோவாக கொஞ்சம் சீரியஸாக அவர் நடிக்கும் படங்கள் எதிர்பார்த்த வரவேற்பை பெறுவதில்லை. இப்படியான நிலையில் தனது வரிசையில் அடுத்ததாகவும் காமெடியான ஒரு சப்ஜெக்ட்டை கையில் எடுத்துள்ளார் நடிகர் சந்தானம்.
இங்க நான் தான் கிங்கு
G.N. அன்புசெழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம், 'வெள்ளைக்கார துரை', 'தங்கமகன்' 'மருது', 'ஆண்டவன் கட்டளை', உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது. 'இங்க நான் தான் கிங்கு' என்ற இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். இப்படத்தில் சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில் மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
எனது அன்புக்குரிய நண்பர், கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் வழங்கும், சுஸ்மிதா அன்புசெழியன் தயாரிக்கும், தம்பி சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பெயரையும், போஸ்டரையும் வெளியிடுவதில் மகிழ்கிறேன்.#IngaNaanThaanKingu#GNAnbuchezhian @Sushmitaanbu @gopuramfilms @Gopuram_Cinemas… pic.twitter.com/Jn2629UVP3
— Kamal Haasan (@ikamalhaasan) February 28, 2024
பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். D. இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவை ஓம் நாராயணும் படத்தொகுப்பை எம். தியாகராஜன் மற்றும் கலை எம். சக்தி வெங்கட்ராஜ் , ஸ்டண்ட் - மிராக்கிள் மைக்கேல் கையாண்டுள்ளார்கள்.
அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக இப்படத்தில் சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. 2024 கோடை விடுமுறை காலத்தில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
மேலும் படிக்க : Mamitha Baiju: இயக்குநர் பாலா கொடுத்த டார்ச்சர்! வணங்கான் படத்தில் இருந்து விலகிய காரணத்தை சொன்ன நடிகை!