கன்னட மொழி குறித்து சர்ச்சை கருத்து..மன்னிப்பு கேட்க முடியாது என முடிவாக சொன்ன கமல்
கன்னட மொழி தொடர்பான கமலின் கருத்திற்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு வந்த நிலையில் தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்க மறுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்

கன்னட மொழி குறித்து கமல் கருத்து
தக் லைஃப் இசை வெளியீட்டி நிக்ழ்ச்சியில் கன்னட மொழி பற்றிய கமலின் கருத்து கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. சென்னையில் நடந்த தக் லைஃப் இசை நிகழ்ச்சியில் கன்னட நடிகர் ஷிவராஜ்குமார் கலந்துகொண்டார். அவரை வரவேற்கும் விதமாக கமல் தனது பேச்சைத் தொடங்கினார். 'உயிரே , உறவே , தமிழே என்று என் பேச்சை தொடங்கினேன். இங்கு வந்திருக்கும் ஷிவராஜ்குமார் என் குடும்பம்தான் . உங்களுடைய கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்ததுதான்." என கமல் தெரிவித்தார்.
அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது - கமல்
கமலின் கருத்தைத் தொடர்ந்து கர்நாடகாவில் கமலுக்கு தக் லைஃப் படத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. கமல் மன்னிப்பு கேட்காவிட்டால் தக் லைஃப் திரைப்படம் கர்நாடகா மாநிலத்தில் வெளியாகாது என கன்னட ரக்ஷன் வேதிகே அமைப்பு தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று கேரளாவில் தக் லைஃப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய கமல் தனது கருத்து குறித்து பேசியுள்ளார் ' நான் பேசியதை என் பக்கம் இருந்து பார்த்தால் நான் பேசியது புரியும். மொழி குறித்து பேசுவதற்கு அரசியல்வாதிகளுக்கு தகுதி கிடையாது. அன்பு எப்போதும் மன்னிப்பு கேட்காது " என கமல் திட்டவட்டமாக கூறியுள்ளார்.






















