Ponniyin Selvan 2: “பிரபுவை காட்டுக்குள் இழுத்து சென்ற குதிரை..” பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில் நடந்த அதிர்ச்சி..!
பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில் நடிகர் பிரபுவை குதிரை காட்டுக்குள் இழுத்து சென்ற சம்பவத்தை நடிகர் ஜெயராம் அப்படத்தின் ஆந்தம் வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் ஷூட்டிங்கில் நடிகர் பிரபுவை குதிரை காட்டுக்குள் இழுத்து சென்ற சம்பவத்தை நடிகர் ஜெயராம் அப்படத்தின் ஆந்தம் (Anthem) வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் 2:
விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயம் ரவி, சரத்குமார், ஜெயராம், பார்த்திபன், ஷோபிதா, விக்ரம் பிரபு, பிரபு, லால், ஜெயசித்ரா,நாசர், ரகுமான், கிஷோர் என தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளனர். மணி ரத்னம் இயக்கிய இப்படத்தின் முதல் பாகம் கடந்தாண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி வெளியானது. இதனிடையே இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் பாகங்களுக்கான பிஎஸ் ஆந்தம் (Anthem) பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தின் விளையாட்டு திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய ஜெயராம் பட ஷூட்டிங்கில் நடிகர் பிரபுவுக்கு நடந்த சம்பவம் ஒன்றை தெரிவித்தார்.
பிரபுவை காட்டுக்குள் இழுத்து சென்ற குதிரை
இந்த படம் ஆரம்பிக்கிறது முன்னாடி என்னை ஓகே செய்து குதிரையேற்றம் கத்துக்கன்னு சொன்னாரு. ஆனால் என்னால் முடியாது. சின்ன வயதில் ஊட்டிக்கு டூர் சென்ற போது குதிரை என்னை மிதித்து விட்டது என சொன்னேன். அதேசமயம் நான் கார்த்தி, ஜெயம் ரவி எல்லாரும் குதிரையில பயிற்சி எடுக்குறதை பார்த்துருக்கேன். அப்புறம் திடீரென லோகேஷன்லா மாறிடுச்சி. தாய்லாந்து போனோம். அங்க பார்த்தா இங்க பயிற்சி எடுத்த குதிரையே இல்லை. அங்க வேற குதிரை. பயிற்சி எடுத்து முடிச்சி கார்த்தி, ஜெயம் ரவி எல்லாரும் “என்னால முடியல” அப்படின்னு சொல்ற மாதிரி வருவாங்க. அந்த குதிரைகளை நாம கையாள்வதே கடினமா இருந்துச்சு.
பிரபுவை இழுத்துச் சென்ற குதிரை:
அதன்பிறகு பிரபு ஷூட்டிங் வந்தாரு. அவரு பிறந்ததுல இருந்து குதிரையோட வளந்தவரு. அதனாலே இவங்ககிட்ட பிரபு கிட்ட ஆலோசனை கேட்க சொன்னேன். இதனையடுத்து பிரபு கார்த்தியிடம் குதிரை ஏறும் போது அதன் காது, கால், வால் ஆகியவை பார்த்து தான் ஏற வேண்டுமென சொல்லி விட்டு என்னுடைய குதிரை எது என மணிரத்னத்திடம் கேட்டார். ஆனால் அவருடைய குதிரையை முதலில் காட்டவேயில்லை.
பின்னர் அவருக்கான தாய்லாந்து குதிரையை பார்த்தவுடன் “இது குதிரை இல்ல, ஒட்டகம் மாதிரி இருக்கு. என்னால ஏறவே முடியாது மணி” என இயக்குனரிடம் தெரிவித்து விட்டார். தாய்லாந்தில் ஷூட்டிங்கிற்கு வந்த 31 குதிரைகளில் ஒரு குதிரை மட்டுமே ஆண் குதிரை. அந்த ஆண் குதிரை தான் பிரபுவுக்கு கொடுத்தார்கள். அவர் குதிரையில் ஏறியவுடன் அது ஒரு காட்டிற்குள் சென்று விட்டார்.
என்னதான் நடந்தது?
பிரபு ‘மணி புடி..புடி’ என கத்துகிறார். அதன்பிறகு பத்து நிமிஷத்திற்கு பிறகு காட்டுக்குள் இருந்து வெளியே வந்த பிரபு ஷூட்டிங் போலாம் என சொன்னார். இப்போது வரை உள்ளே என்ன நடந்தது என கேட்டுப்பார்த்து விட்டேன். இதுவரை பிரபு சொல்லவில்லை என்றார். பத்து நிமிடம் குதிரைக்கும் நடிகர் பிரபுவுக்கு இடையில் நடந்தது அவருக்கு மட்டுமே தெரியும் என்றார்.
அப்போது த்ரிஷாவை பார்த்து எப்படி இவ்ளோ அழகா இருக்கீங்க? என கேள்வியெழுப்ப, அங்கு கூடிய ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.