(Source: ECI/ABP News/ABP Majha)
Jayam Ravi : "என் அப்பா சந்தோஷ் சுப்பிரமணியம் பிரகாஷ்ராஜ் மாதிரிதான்.." : முதல்முறையாக மனம் திறந்த ஜெயம் ரவி..
என் அப்பா சந்தோஷ் சுப்பிரமனியம் படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் மாதிரிதான் என்று நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார்.
என் அப்பா சந்தோஷ் சுப்பிரமனியம் படத்தில் வரும் பிரகாஷ் ராஜ் மாதிரிதான் என்று நடிகர் ஜெயம் ரவி கூறியுள்ளார்.
சந்தோஷ் சுப்பிரமணியம் 2008ல் வெளியான தமிழ் மொழி காதல் நகைச்சுவை திரைப்படமாகும். கல்பாத்தி S. அகோரம் தயாரிபில் மோகன் ராஜா இப்படத்தை இயக்கியுள்ளார் இத்திரைப்படதில் ஜெயம் ரவி, ஜெனிலியா டிசோசா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்திலும் பிரகாஷ் ராஜ், கீதா மற்றும் சாயாஜி சிண்டே ஆகியோர் துணை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ''பொமரில்லு'' என்ற தலைப்பில் 2006 ல் வெளியான தெலுங்கு திரைப்படத்தின் மறுஆக்கமே இத்திரைப்படம். தந்தை மற்றும் மகனின் உறவை சுற்றியே இத்திரைப்படம் அமைந்திருக்கும்.
அந்தப் படத்தில் ஒரு காட்சியில் பாசம் என்ற பெயரில் தந்தைகள் செய்யும் அட்ராசிட்டியை உணர்வுப்பூர்வமாக எடுத்துச் சொல்லி அப்லாஸ் அள்ளியிருப்பார் ஜெயம் ரவி.
ஹரி படத்தில் ஜெயம் ரவி:
கடைசியாக ஜெயம் ரவிக்கு, பூமி திரைப்படம் ஓடிடி ஹாட்ஸ்ட்டாரில் வெளியானது. இயற்கை விவசாயத்தை பற்றி பேசும் அப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டது. அதன் பிறகு அவர் கலமிறங்கியுக்கும் வித்தியாச கதைகளம் கொண்ட பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம், பிரகாஷ் ராஜ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோருடன் இணைந்து அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கிறார். அருள்மொழி வர்மன்தான் பொன்னியின் செல்வன் என்று அழைக்கப்படும் பின்னாட்களில் ராஜா ராஜா சோழன். இரு பாகங்களாக வெளியாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், இயக்குநர் ஹரி தனது அடுத்தப் படத்திற்கான கதையை ஜெயம் ரவியிடம் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், 'பொன்னியின் செல்வன்' 'அகிலன்' அஹ்மத் இயக்கும் 'ஜன கன மன', படங்களைத் தொடர்ந்து ஹரியுடன் ஜெயம் ரவி கைகோக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்பா பெஸ்ட்தான் தருவார்:
இந்தச் சூழலில் ஜெயம் ரவியின் ஃப்ளாஷ் பேக் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. அதில் ஜெயம் ரவி கூறியிருப்பதாவது: சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வரும் அப்பா போல் தான் என் அப்பா. எங்களுக்கு எல்லாமே பெஸ்ட் தான் கிடைக்க வேண்டும் என்று பார்த்துப் பார்த்து செய்வார். அப்படித்தான் எனக்கு காலேஜில் படிக்கும்போது புதிதாக லான்ச்சான பைக் ஒன்றை வாங்கினார். அது இந்தியாவில் நான் தான் முதலில் வாங்கியிருந்தேன். நான் அப்பாவிடம் எதற்கு இவ்வளவு காஸ்ட்லியாக என்று கேட்பேன். அது என் பிரச்சனை. நீ பைக்கை மட்டும் ஓட்டு என்பார். எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமியில் இதை ஓட்டியிருப்பேன்.
இப்பவும் இந்த பைக் அப்படியே இருக்கு. நானும் அப்போ இருந்த மாதிரிதான் இருக்கேன் என்று நினைக்கிறேன். இப்பகூட அப்பா இந்த பைக்கை வீட்டுக்கு எடுத்துட்டு போகச் சொல்வார். நான் தான் உங்களிடம் இருந்தால் நன்றாக பராமரிப்பீர்கள் என்று கூறி அப்பாவிடமே கொடுத்துவிட்டேன். எனக்கு இந்த பைக் ரொம்பப் பிடிக்கும். இப்போகூட நன்றாக ஓடுகிறது என்று கூறியுள்ளார்.