மேலும் அறிய

Harish Kalyan : என்கிட்ட ஒருவார்த்தை சொல்லியிருக்கலாம்..ஸ்டார் படம் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண்

ஸ்டார் படத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் ஏன் நடிக்கவில்லை என்கிற கேள்வி நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில் தற்போது இதுகுறித்து ஹரிஷ் கல்யாண் வெளிப்படையாக பேசியுள்ளார்

ஹரிஷ் கல்யாண்

வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் ஹரிஷ் கல்யாண்.பியார் பிரேமா காதல் , தாராள பிரபு , இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்  உள்ளிட்ட வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு இவர் நடித்து வெளியான பார்க்கிங் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தற்போது லப்பர் பந்து படத்தில் நடித்துள்ளார். தமிழரசன் பச்சமுத்து இயக்கியுள்ள இப்படத்தை பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரித்துள்ளது. அட்டகத்தி தினேஷ் , வதந்தி சஞ்சனா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்கள் தவிர்த்து காலி வெங்கட் , தேவதர்ஷினி உள்ளிட்ட நடிகர்களும் இப்படத்தில் உள்ளார்கள் . லப்பர் பந்து திரைப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்படத்திற்கு ப்ரோமோஷன் செய்து வருகிறார் ஹரிஷ் கல்யாண். ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ஹரிஷ் கல்யாண் ஸ்டார் படத்தில் முதலில் தான் நடிக்க இருந்து பின் ஏன் நடிக்கவில்லை என்பதற்கு விளக்கமளித்துள்ளார். 

Harish Kalyan : என்கிட்ட ஒருவார்த்தை சொல்லியிருக்கலாம்..ஸ்டார் படம் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் ஹரிஷ் கல்யாண்

ஸ்டார் படம் பற்றி ஹரிஷ் கல்யாண்

கவின் நடிப்பில் இளன் இயக்கத்தில் வெளியான படம் ஸ்டார். முதலில் இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. பின் கவின் நடித்து படம் திரையரங்குகளில் வெளியானது. ஹரிஷ் கல்யாண் இப்படத்தில் நடிக்காதது குறித்து பல்வேறு தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவின. தற்போது முதல் முறையாக இது குறித்து ஹரிஷ் கல்யான் பேசியுள்ளார். " ஸ்டார் படத்தைச் சுற்றி நிறைய விஷயங்கள் நடந்தன. அதில் சில விஷயங்கள் என் கவனத்திற்கு வந்தன, என் கவனத்திற்கு வராத விஷயங்களை சம்பந்தபட்ட  நபர் என்னிடம் தெரியப் படுத்தி இருக்கலாம். அது ஒன்றுதான் என்னுடைய வருத்தம். ஸ்டார் படத்திற்கான வேலைகளை நாங்கள் 2020 ஆம் ஆண்டு தொடங்கினோம். ஆனால் கொரோனா காரணத்தினால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டது. அடுத்த ஒன்றரை ஆண்டுகள் படத்தைப் பற்றி எந்த தகவலும் இல்லை. பின் ஸ்டார் படத்தின் அறிவிப்பு வந்தது. அதன் பிறகு நான் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. தொழிலைக் காட்டிலும் நான் மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பவன். எனக்கு பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒருவருடன் பொய்யாக பழக முடியாது. ஸ்டார் படத்தின் டிரைலர் வெளியானபோது ஒன்று சொன்னார்கள். பின் படம் வெளியானபோது ஒன்று சொன்னார்கள். நான் எதையுமே கண்டுகொள்ளவில்லை. " என்று ஹரிஷ் கல்யாண் கூறியுள்ளார்

தலைப்பு செய்திகள்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படத்தின் கதை இதுவா!
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
திரையரங்கிலும் ஓடிடியிலும் நாளை வெளியாகும் முக்கிய படங்கள், வெப் சீரிஸ்கள்
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!
"கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு" – உதயநிதி கைது விவகாரத்தில் நடிகர் விஷால் கருத்து

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
சிஎம் விஜயின் அவசர கூட்டம் ஏன்? திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் முடிவு என்ன? அரசியல் சம்பவமா?
Sekar Babu: ”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
”வந்து இருப்பது சேகர் பாபு-யா” ஆனாலும் வண்டியை அனுப்ப முடியாது - திருத்தணியில் நடந்தது என்ன?
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
Indias Best SUV: இங்க எஸ்யுவி-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
இங்க SUV-னாலே நாங்க தான்..! உள்ளூரில் கோலோச்சும் டாப் 5 கார் மாடல்கள் - விலையும், வசதிகளும்..
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Embed widget