’தல தோனி ஹாப்பி அண்ணாச்சி’ - ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி சொன்ன நடிகர் ஹரிஸ் கல்யாண்
"பொதுமக்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல கருத்துக்கள் வருகிறது. தோனி படம் என்பதால் தோனி மகிழ்ச்சியாக உள்ளார் என அவர்களது டீம் கூறினார்கள்."
கோவை அவிநாசி சாலையில் உள்ள பிராட்வே திரையரங்கில் எல்ஜிஎம் திரைப்படக் குழுவினரான நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் நடிகை இவானா ஆகியோர் திரையரங்கில் ரசிகர்களை சந்தித்தனர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் ஹரிஷ் கல்யாண், ”கோவைக்கு வருவது மிகப்பெரிய சந்தோஷம். எங்களுடைய படம் இங்கே வெளியாகி உள்ளது. தமிழ்நாடு மற்றும் அனைத்து இடங்களிலும் குடும்பத்தினராக அனைவரும் இந்த படத்தை மகிழ்ச்சியாக கண்டு களித்து வருகின்றனர். படம் குறித்து நல்ல நல்ல கருத்துக்கள் வருகிறது. கோவையை பொறுத்த வரை மக்கள் அன்பானவர்கள்.
படம் பார்க்காதவர்கள் படத்தை தியேட்டரில் போய் பாருங்கள். பொதுமக்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்த்ததை விட நல்ல கருத்துக்கள் வருகிறது. தோனி படம் என்பதால் தோனி மகிழ்ச்சியாக உள்ளார் என அவர்களது டீம் கூறினார்கள். நாங்கள் இந்த படத்தில் நடித்தது வெற்றியாக பார்க்கிறோம். இவனா நதியா கெமிஸ்ட்ரி முழுமையாக உள்ளது என பொது மக்களிடம் இருந்து கருத்துகள் வருகிறது” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நடிகை இவானா, “நாங்களும் ரசிகர்களுடன் படம் பார்த்தோம். படம் பார்த்தவர்கள் அனைவரும் நன்றாக உள்ளது எனக்கூறினார்கள்” எனத் தெரிவித்தார்.
அநீதி திரைப்பட குழு பேட்டி
இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் கைதி, மாஸ்டர் படத்தில் நடித்த அர்ஜுன் தாஸ், துஷாரா விஜயன் நாயகன், நாயகியாக நடித்துள்ள அநீதி திரைப்படம், திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இந்நிலையில் கோவை அவினாசி சாலையில் உள்ள பிராட் வே சினிமாஸ் தியேட்டருக்கு வந்த அநீதி பட நாயகன் அர்ஜூன் தாஸ், நாயகி துஷாரா விஜயன் ரசிகர்களை நேரில் சந்தித்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜூன் தாஸ், “அநீதி படம் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதற்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். வசந்தபாலன் இயக்கம், இயக்குனர் சங்கர் தயாரிப்பு, ஜி.வி.பிரகாஷ்குமார் இசை என பெரிய கூட்டணிக்கு கட்டாயம் நல்ல வரவேற்பு இருக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்த்தோம்.
குறிப்பாக உணவு விநியோகம் செய்யும் ஊழியர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறோம். புதிய பரிணாமத்தில் மாறுதலான கதாபாத்திரத்தில் தோன்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. மீண்டும் வசந்தபாலன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்தார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்