Dulquer Salman : அப்பா பெயரை சொல்லி முத்திரை குத்துறாங்க.. துல்கர் சல்மான் சொன்னது என்ன?
ஒரு குறிப்பிட்ட தரப்பினரால் தனது தந்தை மம்மூட்டியின் பெயரை சொல்லி முத்திரை குத்தப்படுவதாக நடிகர் துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்
துல்கர் சல்மான்
மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் கடந்த 2012 ஆம் ஆண்டு செகண்ட் ஷோ படத்தில் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து உஸ்தாத் ஹோட்டல் , பெங்களூர் டேஸ் , களி , கம்மட்டிபாடம் , சார்லீ உள்ளிட்ட படங்கள் மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்றன. 2014 ஆம் ஆண்டு வெளியான வாயை மூடி பேசவும் படத்தின் மூலம் தமிழில் எண்ட்ரி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி , பிஜாய் நம்பியான் இயக்கிய சோலோ , தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் கவனமீர்த்தார். பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கல்கி படத்தில் சிறப்பு தோற்றத்தில் துல்கர் சல்மான் நடித்திருந்தார்.
தனது சொந்த மொழியான மலையாளத்தைக் காட்டிலும் பிற மொழிகளில் துல்கர் சல்மான் அதிகம் நடித்து வருவது ஏன் என்கிற கேள்வி நீண்ட நாட்களாக ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்த கேள்விக்கு தற்போது துல்கர் சல்மான் பதிலளித்துள்ளார்.
அப்பாவின் பெயரை சொல்லி முத்திரை
சமீபத்தில் தனியார் ஊடக நிகழ்ச்சியில் பேசிய துல்கர் சல்மான் தான் எவ்வளவு முயற்சி செய்தாலும் தனது தந்தையின் பெயரை சொல்லி தன்னை ஒரு குறிப்பிட்ட தரப்பினர் முத்திரை குத்தி வருவதாக தெரிவித்துள்ளார். “நான் என்ன முயற்சி செய்தாலும் என் அப்பாவின் அடையாளத்தில் இருந்து என்னால் அதை செய்ய முடியவில்லை. ஒரு சிலர் தொடர்ச்சியாக எனக்கு என் தந்தையின் பெயரை சொல்லி எனக்கு முத்திரை குத்துகிறார்கள். மலையாளத்தை தவிர்த்து நான் பிற மொழி படங்களில் நடித்தாலும் இந்த கும்பல் அங்கும் வந்து இதே கருத்தை விதைக்கிறார்கள்.
நான் நடித்த படங்கள் எவ்வளவு நன்றாக ஓடினாலும் அந்த வெற்றியை அனுபவிக்காமல் என்னை தடுத்துக் கொண்டிருந்தேன். அது என்னுடைய மனநலத்திற்கு ஆரோக்கியமானது கிடையாது. உண்மையைச் சொன்னால் மலையாளத்தைக் காட்டிலும் பிற மொழியில் நான் அதிகம் நடிப்பதற்கு காரணம் நான் யாருடைய மகன் என்றும் என்னுடைய அடையாளம் பற்றியும் அங்கு நிறைய பேருக்கு தெரிவதில்லை.
என்னுடைய அப்பாவை நினைத்து நான் ரொம்ப பெருமைப் படுகிறேன். ஆனால் நான் ஒரு நட்சத்திரத்தின் மகன் என்பதாலேயே நான் கஷ்டப் படவில்லை என்று அர்த்தம் இல்லை. நான் இதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்று மக்கள் நினைப்பதை நான் விரும்பவில்லை. அது கஷ்டமாக இருக்கிறது” என்று துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : Urvashi Rautela : ஆன்லைனில் லீக்கான லெஜண்ட் பட நடிகை ஊர்வசி ரவுதெலாவின் குளியலறை வீடியோ! அதிர்ச்சியில் திரையுலகம்!