Dhanush : மீண்டும் ஹாலிவுட் படத்தில் தனுஷ்...ஜோடியாக அந்த கிளாமர் நடிகையா ?
சோனி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ஹாலிவுட்டில் உருவாக இருக்கும் ஸ்ட்ரீட் ஃபைட்டர் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

தனுஷ்
தமிழ் , இந்தி , தெலுங்கு என அனைத்து சினிமாத் துறையிலும் தனித்த அடையாளத்தை உருவாக்கியவர் தனுஷ். 2018 ஆம் ஆண்டு The Extraordinary Journey of the Fakir என்கிற படத்தின் மூலம் ஹாலிவுட் திரையுலகிற்கு அறிமுகமானார். இப்படத்தில் தனுஷின் நடிப்பு ஹாலிவுட் திரை ரசிகர்களால் பாராட்டப்பட்டது. தொடர்ந்து ரூஸோ பிரதர்ஸ் உருவாக்கிய தி கிரே மேன் படத்திலும் தனுஷ் கேமியோ ரோலில் நடித்திருந்தார். தற்போது மூன்றாவது முறையாக தனுஷ் ஹாலிவுட் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தனுஷ்
சோனி பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ஹாலிவுட்டில் உருவாக இருக்கும் ஸ்ட்ரீட் ஃபைட்டர் படத்தில் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி தனுஷூடன் இணைந்து நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. ஹாலிவுட்டில் இம்மாகுலேட் , ஹேண்ட்மேட்ஸ் டேல் உள்ளிட்ட புகழ்பெற்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் சிட்னி ஸ்வீனி. பிரபல ஜப்பானிய வீடியோ கேம் ஸ்ட்ரீட் ஃபைட்டர். இந்த கேமை திரைப்படமாக்க சோனி பிக்ச்சர்ஸ் முடிவு செய்தது. 2026 ஆம் ஆண்டு இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கிறது. படத்திற்கான திரைக்கதை பணிகள் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். முழுக்க முழுக்க ஆக்ஷன் திரைப்படமாக இந்த படம் உருவாக இருக்கிறது.
Latest Buzz ...@dhanushkraja in new Hollywood Film #Streefighter under Sony Production ..Said to be paired with #SydneySweeney.
— smritigit Paul (@smritigit_pal) December 9, 2024
This will be #Dhanush 2nd Hollywood Film.3rd Foreign language Film... #kubera pic.twitter.com/0l5HznIR9v
தனுஷ் தற்போது இட்லி கடை மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய இரு படங்களை இயக்கியுள்ளார். இது தவிர்த்து சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்துள்ளார்,அடுத்தபடியாக ராஜ்குமார் பெரியசாமி இயகத்தில் தனுஷ் நடிக்க இருக்கிறார்.
மேலும் படிக்க : Jailer 2 : ஜெயிலர் 2 படத்திற்கு நெல்சன் சொன்ன கண்டிஷன்..பதறிய சன் பிக்ச்சர்ஸ்
Debut Directors 2024: இவங்க தான் இந்த ஆண்டின் டாப் அறிமுக இயக்குநர்கள்...ஒரு குட்டி ரீவைண்ட்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

