மேலும் அறிய

அடுத்த சில வருங்களுக்கு இதை செய்யமாட்டேன்...ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த தனுஷ்

அடுத்த சில வருடங்களுக்கு தான் புதிய படங்களை இயக்கப்போவதில்லை என நடிகர் தனுஷ் கோயம்புத்தூரில் நடந்த கர படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்

நடிகர் தனுஷ் மிருணாள் தாகூரை வைத்து புது படத்தை இயக்கவிருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தனுஷ் இந்த வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார். அடுத்த சில வருடங்களுக்கு தொடர்ச்சியாக நடிக்க இருப்பதால் புதிய படங்கள் எதுவும் தான் இயக்கப்போவதில்லை என தனுஷ் கோயம்புத்தூரில் நடந்த கர படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தெரிவித்தார்

தனுஷ் நடித்துள்ள கர திரைப்படம் வரும் ஏப்ரல் 30 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா இந்த படத்தை இயக்கியுள்ளார். மமிதா பைஜூ , சூரஜ் வெஞ்சரமூடு , கருணாஸ் , ஜெயராம் , கே.எஸ் ரவிகுமார் ஆகிய பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். சென்னையில் கர படத்தின் இசை வெளியீடு நடந்ததைத் தொடர்ந்து நேற்று கோயம்புத்தூரில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பேசிய தனுஷ் பேசியபோது தான் அடுத்த சில வருடங்களுக்கு படங்களை இயக்கப்போவதில்லை என தெரிவித்தார். 

" மூன்று இயக்குநர்கள் கதைகளுடன் எனக்காகப் பொறுமையாகக் காத்திருக்கிறார்கள். நான் முதலில்  ராஜ்குமார் பெரியசாமி படத்தின் படப்பிடிப்பை முடிக்க வேண்டும்.. பிறகு மாரிசெல்வராஜின் படத்தில் நடிக்க வேண்டும்.. இடையில், லப்பர் பந்து இயக்குனர் தமிழரசன் படம் இருக்கிறது.. பிறகு நான் வடசென்னை2-ஐ முடிக்க வேண்டும். வடசென்னை 2-ன் காலக்கெடு எப்போது வரும் என்று இப்போது உங்களுக்குத் தெரியும்.. எனவே, இவை அனைத்தையும் முடிக்க எனக்குச் சில வருடங்கள் தேவைப்படும். அதன் பிறகுதான் நான் இயக்கம் பற்றி யோசிக்க முடியும்.

ரசிகர்கள் மகிழ்ச்சி 

பவர் பாண்டி படத்தின் மூலம் தனுஷ் இயக்குநராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ராயன் , நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் , இட்லி கடை ஆகிய படங்கள் வெளியாகின. தனுஷ் நடிப்பை ரசிகர்கள் கொண்டாடினாலும் அவர் இயக்கிய படங்களுக்கு தனுஷ் ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பு இல்லை . இப்படியான சூழலில் தான் தனுஷ் மிருணாள் தாகூரை வைத்து புது படம் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சி கொடுத்தது. அடுத்த சில வருடங்களுக்கு தான் படமியக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது. அடுத்த சில வருடங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் தனுஷின் நடிப்பை பார்க்கலாம் மக்களே

 

தலைப்பு செய்திகள்

அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
அந்நியன் கூட மாதிரி இருக்க மாதிரி இருக்கும்...காதலன் குறித்து கொட்டி தீர்த்த அனுபமா பரமேஸ்வரன்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
“மூன்று மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் பற்றி பேசினார்கள்” – அனுபமா பரமேஸ்வரன் பகிர்ந்த அதிர்ச்சி அனுபவம்
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
இரண்டு ஆண்டு வலி..உடம்பெல்லாம் நடுக்கம்..காதலில் சந்தித்த டார்ச்சர் குறித்து அனுபமா
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!
Kamal Hassan : 67 ஆண்டுகள் சினிமா பயணம்… இந்திய சினிமாவில் கமல்ஹாசன் அறிமுகப்படுத்திய தொழில்நுட்பங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
AIADMK Apsara Reddy: அதிமுகவில் அடுத்த விக்கெட்.. துணை கொள்கை பரப்பு செயலாளர் அப்சரா ரெட்டி விலகல்
Skoda Superb: அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அட்ரா சக்க..! 40KM மைலேஜ், இந்தியாவிற்கு கன்ஃபார்ம் செய்த ஸ்கோடா - விலை, அம்சங்கள், ரேட்டிங்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget