Actor Chandra Lakshman: இன்ப செய்தி! கயல் சீரியல் மூலம் கம்பேக் தரும் காதலிக்க நேரமில்லை ஹீரோயின்!
Actor Chandra Lakshman: காதலிக்க நேரமில்லை சீரியல் மூலம் பிரபலமான நடிகை சந்திரா லட்சுமணன் கயல் சீரியல் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ‘காதலிக்க நேரமில்லை’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் சந்திரா லஷ்மண். இவர் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க உள்ளார். இது சந்திரா ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.
காதலிக்க நேரமில்லை
விஜய் டிவியில் ஒளிபரப்பான தொடர் காதலிக்க நேரமில்லை. இந்த தொடர் 90ஸ் கிட்ஸ்களின் மத்தியில் மிகவும் பிரபலம். தொலைக்காட்சி தொடரில் நடித்திருந்தார் சந்திரா லஷ்மண். இவரது நடிப்பிற்கு மயங்கி சீரியலை தொடர்ந்து பார்த்தவர்களும் உண்டு. அதில் அவரின் ரியாக்சன்ஸ் பலரின் ஃபேவரைட். ‘என்னைத் தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு’ என பாடல் மிகவும் பிரபலம். பலரின் ரிங்-டோனாகவும் இது இருந்திருக்கிறது. இதில் பிரஜன் உடன் நடித்திருந்தார். அதன்பிறகு, பாசமலர் என்ற சீரியலில் நடித்திருந்தார். அப்பறம், தமிழ் சீரியல் இன்டஸ்ட்ரியிலிருந்து ஒரு பிரேக்.
கல்யாணம்.. குழந்தை.. சின்னத்திரை.!
தமிழில் சீரியலில் ரீ-என்ட்ரீ கொடுக்கும் சந்திரா தன் வாழ்க்கை, குழந்தை பற்றி சொல்லிய அப்டேட் குறித்து காணலாம்.
மலையாள சீரியல் ஒன்றில் நடித்தபோது அந்தத் தொடரில் நடித்த டோஷ் கிறிஸ்டியை கரம்பிடித்தார். ரீல் ஜோடி ரியல் கோடியாகி இவர்களுக்கு செல்ல மகனும் இருக்கிறார். இவர்களின் மகனின் பெயர்’அயான்’. சென்னைப் பொண்ணான இவர் பாசமலர் சீரியலுக்கு பிறகு கெரியரில் ப்ரேக் எடுத்தார். கல்யாணமாகி பையன் பிறந்தும் 4 மாதம் வரை மலையாள சீரியலில் நடித்திருந்தார். பின்னர், மகனுடன் நேரம் செலவழிக்கலாம்னு முடிவு செய்து மறுபடியும் ஒரு பிரேக்..
”அதுக்கு பிறகு தமிழில் எந்த சுவாரஸ்யமான ப்ராஜெட்டும் இல்லை. தெலுங்கு புராஜக்ட் ஒன்னு கமிட் ஆனேன். குழந்தையை எப்படி விட்டுட்டு ஹூட்டிங்னு கவலையாக இருந்தது. 8 நாட்கள் அதிகபட்ச ஷூட்டிங்கிறதால ஓகே சொன்னேன். அப்போது, அவர் சினிமா தான் பண்ணிட்டு இருந்தார். அதனால அவருக்கு பிரேக் இருந்தது; குழந்தையை அவர் பார்த்துட்டு இருந்தார்.” என்று நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். '
‘அயான்’ பிறந்தது குறித்து அவர் சொல்லும்போது,” எனக்கு 38 வயதில் தான் திருமணமாச்சு. இத்தனை வயசுக்கு மேல எப்படி குழந்தைங்கிற அழுத்தம் எனக்கு யாரும் கொடுக்கலை. கடவுள் அருளால திருமணமான உடனே ப்ரக்னண்ட் ஆகிட்டேன். அயான் பிறக்குறதுக்கு மூன்று நாட்கள் முன்னாடி வரைக்குமே நடிச்சிட்டு இருந்தேன். நான் பிசிக்கலி ரொம்பவே ஆக்டிவ் இருப்பேன். அதனால் ப்ரகனன்சி டைம்ல எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. மென்டல் ஹெல்த்தும் ரொம்பவே முக்கியம். நான் என் பையனை ஹீலர்னு தான் கூப்பிட்டுட்டு இருந்தேன். ஆரம்பத்தில் இருந்தே அவன்கிட்ட பேசிட்டே இருப்பேன். அம்மாவுக்கு சோர்வா இருக்கு.. எனர்ஜி கொடு பாப்பான்னுலாம் சொல்லுவேன். அவன் நிஜமாகவே என்னுடைய ஹீலர் தான்!" என்ற மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்.
மீண்டும் என்ட்ரீ
நீண்ட இடைவேளைக்குப் பிறகு, தற்போது சின்னத்திரையில் மீண்டும் சந்திரா கம்பேக் தருகிறார். தற்போது சன் டிவியில் மிகவும் பிரபலமான 'கயல்’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். விஷன் டைம் புரொடக்ஷன் `கயல்' சீரியலை தயாரிக்கிறது. இந்தத் தொடரில் சந்திரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.