Watch Video: அம்மா சயீஷாவுடன் அசத்தல் டான்ஸ்.. ஆர்யா பொண்ணுக்கு குவியும் லைக்ஸ்!
நடிகர் ஆர்யாவின் மனைவி சயீஷா தன் மகளுடன் க்யூட்டாக நடனம் ஆடிய வீடியோவை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் ஆர்யா, 2005ஆம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் நெகட்டீவ் ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் .பாலாவின் நான் கடவுள் திரைப்படம், இவருக்கு சினிமாவில் பெரிய அங்கீகாரத்தை தேடி தந்தது. மேலும் அவன் இவன் படத்திலும் ஆர்யா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். நககர் ஆர்யா நடித்த படங்களுக்கு அதிகம் வரவேற்பு கிடைத்ததற்கு அவர் தேர்வு செய்யும் கதைகளும், அவரின் நடிப்பு திறமையும் தான் காரணம்.
அண்மையில் மகாமுனி, சார்பட்டா பரம்பரை என மிரட்டலான படங்களையும் கொடுத்து அசத்தியிருந்தார். ஆர்யா நடிகை சயீஷாவை காதலித்து கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2021ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு அரியானா என பெயரிட்டுள்ளனர். நடிகை சயீஷா, கடைக்குட்டி சிங்கம், காப்பான் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.
ஆர்யா-சயீஷா தனது மகள் அரியானா பெயரில் ஒரு இன்ஸ்டா பக்கம் திறந்து அதில் அவரது புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது சயீஷா மற்றும் அவரது மகள் இருவரும் ஒரு பாடலுக்கு கியூட்டான நடனம் ஆடிய வீடியோ ரசிகர்கள் லைக்ஸை வாரிக் குவித்து வருகிறது.
View this post on Instagram
ஏ.எல்.விஜய் இயக்கிய வனமகன் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் சாயிஷா. இதையடுத்து கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்த அவர், அடுத்ததடுத்து விஜய் சேதுபதி உடன் ஜுங்கா, சூர்யா ஜோடியாக காப்பான் போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென ஆர்யாவை திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
மேலும் படிக்க