மேலும் அறிய

Arun Vijay: “என் படமும் ஓடணும்.. சிவகார்த்திகேயன் படமும் ஓடணும்” - அருண் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..

Captain Miller and Ayalaan : ஓராண்டு இடைவெளிக்குப் பின் அருண் விஜய் நடிப்பில் மிஷன் சாப்டர் 1 என்ற படத்தில் நடித்துள்ளார். கிரீடம், தலைவா, தெய்வ திருமகள், தலைவி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய் இந்த படத்தை எடுத்துள்ளார்.

Captain Miller and Ayalaan : தன்னுடைய “அச்சம் என்பது இல்லையே மிஷன் சாப்டர் 1”  படம் ரசிகர்களுக்கு விஷூவல் ட்ரீட் ஆக அமையும் என நடிகர் அருண் விஜய் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் அருண் விஜய். இவர் கடைசியாக 2022 ஆம் ஆண்டு வெளியான சினம் படத்தில் நடித்திருந்தார். இந்த நிலையில் ஓராண்டு இடைவெளிக்குப் பின் அருண் விஜய் நடிப்பில் மிஷன் சாப்டர் 1 என்ற படத்தில் நடித்துள்ளார். கிரீடம், தலைவா, தெய்வ திருமகள், தலைவி உள்ளிட்ட படங்களை இயக்கிய ஏ.எல்.விஜய் இந்த படத்தை எடுத்துள்ளார். இப்படத்தில் எமி ஜாக்சன், நிமிஷா சஜயன், இயல், அபி ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

மிஷன் சாப்டர் 1 படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.லால் சலாம் படம் தள்ளிப்போனதால் இந்த படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய லைகா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதனிடையே நேற்று மிஷன் சாப்டர் 1 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடத்தில் வரவேற்பை பெற்றது. 

இதன் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய அருண் விஜய், “ரொம்ப சந்தோசமா இருக்கு. மிஷன் சாப்டர் 1 படம் பண்டிகை தினத்தில் ரிலீசாகும் முதல் படமாகும். இது ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குது. சரியான தேதியில் படத்தின் ரிலீஸை முடிவு செய்த லைகா நிறுவனத்துக்கு இந்த சமயத்தில் நன்றி. நான் நடித்த படங்களில் அதிக பொருட்செலவில் தயாரான படம் தான் மிஷன் படம். முதல்முறையாக ஏ.எல்.விஜய்யுடன் இப்படத்தின் நான் இணைந்துள்ளேன். நாங்கள் முதலில் வேறொரு கதையை பண்ணுவதாக இருந்தது. ஆனால் விஜய் தான், மிஷன் கதையை சொன்னார். எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. உங்களை வச்சிகிட்டு ஆக்‌ஷன் இல்லாமல் என்னால படம் பண்ண முடியாது. அதேசமயம் என்னோட எமோஷனல் சீன்களும் கதையில் வைத்திருக்கிறேன். இந்த படம் நிச்சயம் தியேட்டரில் ரசிகர்களுக்கு விஷூவல் ட்ரீட் ஆக அமையும். 

இந்த படத்தில் எமி ஜாக்சன், அபிஹாசன், நிமிஷா சஜயன், குழந்தை நட்சத்திரம் இயல் எல்லாரும் நடிச்சிருக்காங்க. ஜி.வி.பிரகாஷ் இசை சிறப்பா பண்ணிருக்காரு. இந்த படக்குக்காக நாலரை ஏக்கரில் மிகப்பெரிய செட் போட்டோம். இந்த படத்துக்கான விஜய்யின் திட்டமிடலை நான் பாராட்டுகிறேன். ஆரம்பம் முதல் இறுதி வரை மிஷன் சாப்டர் 1 உங்களை கவரும். ஜனவரி 12 ஆம் தேதி என்னோட படம் வரும் அதே நாளில்  கேப்டன் மில்லர், அயலான் படம் வெளியாகிறது. அந்த படங்களும் நன்றாக போக வேண்டும். சம்பந்தப்பட்ட படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார். 

முன்னதாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிவகார்த்திகேயன் - அருண் விஜய் இடையே மறைமுக கருத்து மோதல் இருந்து வந்தது. இருவரும் ஒருவரையொருவர் தாக்கி சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்தனர். ஆனால் தற்போது அதையெல்லாம் மறந்து இருவரும் நட்பு பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன் படமும் வெற்றி பெற வேண்டும் என அருண் விஜய் சொன்னது பாராட்டைப் பெற்று வருகிறது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget