மேலும் அறிய

Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்

Cheapest CNG Automatic SUV: சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷனில் கிடைக்கும் நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் எஸ்யுவி கார் மாடல் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Cheapest CNG Automatic SUV: சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷனில் கிடைக்கும் நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் எஸ்யுவியின் சுவாரஸ்யமான விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

நாட்டின் மலிவான சிஎன்ஜி ஆட்டோமேடிக் எஸ்யுவி

நல்ல மைலேஜ் மற்றும் கையாளவதற்கு எளிதான ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் ஒரு தரமான காரை எதிர்பார்க்கிறீர்களா? எனில் உங்களுக்கு சிஎன்ஜி ஆட்டோமேடிக் கார் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். உள்நாட்டு சந்தையில் சிஎன்ஜி ஆட்டோமேடிக் ஆப்ஷனில் பல தரப்பட்ட கார் மாடல்கள் கிடைக்கின்றன. அதில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் சிஎன்ஜி ஆட்டோமேடிக் எஸ்யுவி பற்றி தெரியுமா? அந்த கார் குறித்த முழு விவரங்களும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

நிசான் சிஎன்ஜி மேக்னைட் எஸ்யுவி - விலை விவரங்கள்

மேற்குறிப்பிடப்பட்ட பிரிவில் முதன்மையானதாக இருப்பது நிசான் மேக்னைட் கார் மாடலாகும். தற்போதைய சூழலில் உள்ளூர் சந்தையில் மிகவும் மலிவு விலையில் கிடைக்கும் சிஎன்ஜி ஆட்டோமேடிக் எஸ்யுவி ஆக உள்ளது. அதேநேரம் இந்த காரில் சிஎன்ஜி கிட்டானது டீலர் தரப்பில் இருந்தே பொருத்தப்படுகிறது, உற்பத்தி ஆலையிலேயே நிறுவப்படுவதில்லை. விலை குறித்து கருத்தில் கொண்டால் , சென்னையில் இதன் ஆன் ரோட் விலை ரூ.7.46 லட்சத்தில் தொடங்கி ரூ.11.30 லட்சம் வரை நீள்கிறது. ஆட்டோமேடிக் எடிஷனின் தொடக்க விலை ரூ.8.15 லட்சமாக உள்ளது. தொழிற்சாலையிலேயே CNG கிட் பொருத்தப்பட்ட SUV வேண்டுமானால், டாடா பஞ்ச் மாடலை நாடலாம். ஆனால், மேக்னைட் CNG-ஐ விட சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை அதிகமாக செலவிட வேண்டி இருக்கும்.

நிசான் சிஎன்ஜி மேக்னைட் எஸ்யுவி - 24KM மைலேஜ்

நிசான் மேக்னைட் சிஎன்ஜி எடிஷன் 1.0-லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. ஒரு கிலோவிற்கு 24.09 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக, எரிபொருள் சிக்கனம் மற்றும் வசதியை விரும்புவோருக்கு இது ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.  நிஜ உலக பயன்பாட்டில் நகரங்களில் 17 முதல் 19 கிலோ மீட்டரும், நெடுஞ்சாலைகளில் 21 முதல் 23 கிலோ மீட்டரும் மைலேஜ் வழங்குவதாக பயனர்களால் கூறப்படுகிறது. 

இதையும் படியுங்கள்: Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ

நிசான் மேக்னைட் - அம்சங்கள்

நிசான் மேக்னைட்டில் உள்ள பிற சிறப்பம்சங்களைப் பற்றிப் பேசுகையில், இதில் 360-டிகிரி கேமரா, எலெக்ட்ரிக் சன்ரூஃப், க்ரூஸ் கன்ட்ரோல், 7-இன்ச் டிஜிட்டல் ட்ரைவர் டிஸ்ப்ளே, 9-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே, புஷ்-பட்டன் ஸ்டார்ட், குளிரூட்டப்பட்ட க்ளோவ்பாக்ஸ், லெதரெட் இருக்கைகள், டாஷ்கேம், ஆட்டோ-டிம்மிங் ஐஆர்விஎம், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட பல பாதுகாப்பு அம்சங்கள் அடங்கும். பாதுகாப்பு பரிசோதனையில் பெரியவர்களுக்கான பிரிவில் 5 ஸ்டார் ரேட்டிங்கும், குழந்தைகளுக்கான பிரிவில் 3 ஸ்டார் ரேட்டிங்கும் கொண்டுள்ளது. 

நிசான் மேக்னைட் யார் வாங்கலாம்?

மிகவும் மலிவு விலையில் CNG மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட ஒரு SUV-யை வாங்க விரும்பினால், மேக்னைட் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். அதேநேரம் CNG கிட் தொழிற்சாலையிலேயே பொருத்தப்படாமல், டீலர் நிலையில் பொருத்தப்படுவது முக்கிய குறையாக பார்க்கப்படுகிறது. அது தவிர, மேக்னைட்டில் விலைக்கு நிகரான பல நல்ல அம்சங்கள் உள்ளன. அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இது குறைவாகத் தோன்றினாலும், அதிக அம்சங்கள் நிறைந்த காரை விரும்பாத ஒருவருக்கு இது போதுமானதாக இருக்கும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
Cheapest CNG AT SUV: நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
நாட்டின் மலிவான ஆட்டோமேடிக் சிஎன்ஜி எஸ்யுவி - விலை, மைலேஜ், அம்சங்கள், வசதிகள்
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Embed widget