மேலும் அறிய

Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ

Kia Seltos CNG: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் க்ராண்ட் விட்டாரா மற்றும் ஹைரைடர் கார் மாடல்களுக்கு போட்டியாக, செல்டோஸ் எஸ்யுவியில் சிஎன்ஜி எடிஷனை களமிறக்க கியா நிறுவனம் தயாராகி வருகிறது.

Kia Seltos CNG: கியாவின் செல்டோஸ் சிஎன்ஜி எடிஷன் தொடர்பாக இதுவரை கிடைத்துள்ள தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

கியா செல்டோஸ் சிஎன்ஜி எடிஷன்

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கியா நிறுவனம் புதிய தலைமுறை செல்டோஸ் மாடலை அண்மையில் அறிமுகப்படுத்தியது. உள்ளூரில் கிடைக்கும் மிகச்சிறந்த மிட்-சைஸ் எஸ்யுவிக்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதேநேரம், மாருதி விக்டோரிஸ், க்ராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர் போன்ற கார் மாடல்களுடன் ஒப்பிடுகையில், மைலேஜை எதிர்பார்க்கும் பயனாளர்களிடையே செல்டோஸ் சற்றே பின்னடைவை சந்திக்கிறது.  ஆனால், அந்த சிக்கல் இனி இருக்காது என கூறப்படுகிறது. காரணம், கியா நிறுவனம் செல்டோஸின் சிஎன்ஜி எடிஷனை தயார்படுத்தி வருவதும், அது கிலோவிற்கு 28 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குவதுமாக வெளியாகியுள்ள தகவல் கார் பிரியர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த எடிஷன் தொடர்பாக இதுவரை வெளியாகியுள்ள தகவல்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

கியா செல்டோஸ் சிஎன்ஜி விவரங்கள்

தென்கொரிய நிறுவனமான கியா இதுவரை செல்டோஸின் சிஎன்ஜி எடிஷனை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தவில்லை. இருப்பினும், பல CNG பொருத்தும் நிலையங்கள் செல்டோஸில் CNG டேங்கைப் பொருத்தியுள்ளன. வதோதராவில் உள்ள சாய் ஃபியூயல் என்ற CNG பொருத்தும் நிலையம், புதிய செல்டோஸில் ஒரு CNG கிட்டைப் பொருத்தியுள்ளது. மேலும், இந்த SUV நெடுஞ்சாலையில் கிலோவிற்கு 25-28 கிலோ மீட்டர் மைலேஜையும், நகரப் பயணத்தில் சுமார் 22 முதல் 24 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்கும் என்று கூறியுள்ளது. இவை மிட்-சைஸ் எஸ்யுவி பிரிவில் மிகவும் சிறப்பான புள்ளிவிவரங்களாக தெரிகின்றன. அதுவும்வெறும் ரூ.79,000-க்கு குறிப்பிட்ட தனியார் நிலையத்தில் இந்த CNG கிட்டைப் பொருத்திக்கொண்டு, உங்கள் செல்டோஸிலிருந்து இதுபோன்ற ஈர்க்கக்கூடிய மைலேஜ் அம்சங்களை பெறலாம். 

சிஎன்ஜி கிட்டில் கிடைப்பது என்ன?

சிஎன்ஜி கிட்டின் ஒரு பகுதியாக, செல்டோஸில் CNG இன்ஜெக்டர்கள், ஒரு பிரத்யேக ECU, 10 கிலோ எரிபொருள் டேங்க் மற்றும் ஒரு யுனிவர்சல் வால்வு ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. வசதிக்காக, CNG நிரப்பும் முனை, எரிபொருள் நிரப்பும் மூடிக்கு அருகிலேயே வைக்கப்பட்டுள்ளது, எனவே நீங்கள் பேனட் வழியாக CNG நிரப்ப வேண்டியதில்லை. செல்டோஸின் பெரிய பூட் ஸ்பேஸ் காரணமாக, 10 கிலோ எரிபொருள் டேங்க் அதிக இடத்தை எடுத்துக்கொள்வதகாவும் தெரிவதில்லை.


Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ

குறைந்த வேக செயல்திறனில் எந்த இழப்பும் இல்லை என்று அந்த வதோதரா நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த பட்டறையில் இருப்பவர்கள் CNG-ஐ பதிவு செய்து தருவார்கள், அதனால் நீங்கள் எந்தப் பிரச்சினையும் இல்லாமல் சட்டப்பூர்வமாக வாகனத்தை ஓட்ட முடியும். உங்கள் செல்டோஸில் இருந்து ஒரு லிட்டருக்கு 28 கிலோ மீட்டர் வரை மைலேஜ் பெற முடியும் என்பதால், இது மிகப்பெரிய சேமிப்பாக கருதப்படுகிறது. எனவே, உங்களிடம் 1.5-லிட்டர் நேட்சுரல் ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் கொண்ட செல்டோஸ் இருந்தால், உங்கள் SUV-யிலிருந்து அதிக மைலேஜ் பெற சிஎன்ஜி எடிஷன் சரியான தேர்வாக இருக்கலாம்.

இதையும் படியுங்கள்: AI Powered E3 Trion E-Scooter: நாட்டின் முதல் AI டச் பெற்ற மின்சார ஸ்கூட்டர் - 165KM ரேஞ்ச், 52 லிட்டர் பூட் ஸ்பேஸ் - முழு விவரம்

கியா செல்டோஸின் விலை விவரங்கள்

கியா டீலர்கள் மூலம் தற்போது சந்தையில் கிடைக்கும் செல்டோஸின் விலை வரம்பானது 10 லட்சத்து 99 ஆயிரத்தில் தொடங்கி, 21 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் வரை நீள்கிறது. இதில் 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட்  பெட்ரோல், 1.5 லிட்டர்  டர்போசார்ஜ்ட் GDi பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் CRDi டீசல் என மூன்று இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. அதிகபட்சமாக டீசல் எடிஷனாது நகரங்களில் 11 முதல் 15 கிலோ மீட்டர் வரையிலும், நெடுஞ்சாலைகளில் 17 முதல் 21 கிலோ மீட்டர் வரையிலும் மைலேஜ் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கையும் செல்டோஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Wagon R CNG Real Milage: ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
ஒரு கிலோ எரிபொருளில் மாருதி வேகன் ஆர் CNG எவ்வளவு மைலேஜ் தரும்.? சோதனை முடிவுகள் இதோ
Scorpio N Facelift on EMI: ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
ரூ.1 லட்சம் முன்பணம் செலுத்தி மஹிந்திரா ஸ்கார்பியோ N ஃபேஸ்லிஃப்ட் வாங்கினால் மாத EMI எவ்வளவு.? முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
Rasi Palan Today (09-08-2026): மேஷத்துக்கு வெற்றி.. அப்ப இன்னைக்கு உங்க ராசிக்கு என்ன பலன்?
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
Embed widget