Actor Natraj: "விஜய்யைப் பார்த்தால் கேட்டு விடுவேன்" நடிகர் நட்டி அப்படி என்ன கேட்பார்?
பிரபல நடிகர் நட்ராஜ் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்தால் அவரது நடிப்பு முழுக்கு பற்றி கேட்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவர் நட்ராஜ். ஒளிப்பதிவாளராக மட்டுமின்றி நடிகராகவும் இவர் பல படங்களில் கதாநாயகன், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். இவரை நட்டி என்றே அனைவரும் செல்லமாக அழைக்கின்றனர். பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கிய முதல் படம் சதுரங்க வேட்டையில் நாயகனாக நாளை நட்டியே நடித்திருப்பார்.
விஜய்யை பார்த்தால் கேட்டுவிடுவேன்:
இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில் நடிகர் விஜய் பற்றி பேசியுள்ளார். யூத் படம் பண்ணும்போது விஜய் சாருக்கு என்னைத் தெரியாது. அந்த படம் பண்ண ஆரம்பித்தபோதுதான் எங்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. எப்போ பார்த்தாலும் கேட்பார். என் நண்பர்களைப் பார்த்தால் கூட என்னைப் பற்றி நட்டி எப்படி இருக்கிறார்? என்று கேட்பார்.
எனக்கு என்னவென்றால், தனிப்பட்ட முறையில் என்னைக் கேட்டால் அவர் என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். அவர் நடிப்பதை விட்டுவிட்டு பண்ண வேண்டும் என்று அல்ல. நடித்துக் கொண்டே பண்ணலாம். நேரில் பார்த்தால் நான் கேட்டுவிடுவேன். அது அவரிடம் கேட்க வேண்டும்.”
இவ்வாறு அவர் பேசினார்.
தளபதி 69ல் நட்டி:
எச்.வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நட்டி நடிக்கிறார். நட்ராஜ் முதன்முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானது யூத் படம் மூலமாகவே ஆகும். அதன் பிறகு இந்தியில் பாஞ்ச் என்ற படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய நட்ராஜ் இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜாப் வி மெட், ஹல்லா போல், கோல்மால் ரிட்டர்ன்ஸ் போன்ற பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து பாலிவுட்டின் முன்னணி ஒளிப்பதிவாளராக உருவெடுத்தார்.
தமிழில் நாளை என்ற படத்தில் இரண்டாவது ஹீரோவாக நடித்ததன் மூலம் நாளை நட்டி என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார். இவர் ஒளிப்பதிவு செய்த முதல் படமே நடிகர் விஜய் நடித்த யூத் படமே ஆகும். முத்துக்கு முத்தாக, சதுரங்க வேட்டை, வால்டர், மகாராஜா, கர்ணன் போன்ற பல படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தமிழக வெற்றிக்கழகத்தை தொடங்கியுள்ள விஜய் நடிப்பதில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் அரசியலில் முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.