Nivin Pauly: எடையை குறைத்த நிவின் பாலி.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள்.. வைரலாகும் புகைப்படம்!
நடிகர் அஜு வர்க்கீஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிவின் பாலியின் தற்போதைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்; இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.
பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி பிரேமம் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பரிட்சயமானவர். அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பிரேமம். இந்த திரைப்படத்தில் காலேஜ் படிக்கும் இளைஞனாக நடித்திருந்தார் நிவின். நடிகை சாய் பல்லவி பிரேமம் திரைப்படத்தில் தான் அறிமுகமானார்;
பிரேமம் திரைப்படம் நிவின் பாலியின் திரை வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படமாகும். இளம் பெண்களின் சாக்லேட் பாயாக வலம் வந்த இவர், சமீபத்தில் எடை அதிகரித்து மிகவும் பருமனான தோற்றத்துடன் காணப்பட்டார். அவரது எடை குறித்தும் தோற்றம் குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் கடுமையாக ட்ரோலும் செய்யப்பட்டார்.
இந்நிலையில் இன்று நடிகர் அஜு வர்க்கீஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிவின் பாலியின் தற்போதைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் பருமனாக இருந்த புகைப்படத்தையும், தற்போது உடல் எடை குறைத்து, ஸ்லிம் ஆன புகைப்படத்தையும் கொலாஜ் செய்து பகிர்ந்துள்ளார். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ஏற்கனவே நேரம் திரைப்படத்தில் நடித்திருந்தார் நிவின்;அந்த திரைப்படத்தில் நஸ்ரியா கதாநாயகியாக நடித்திருப்பார். நேரம் திரைப்படத்தில் பிரேமம் திரைப்படத்தை விட ஒல்லியாக இருப்பார் நிவின் பாலி. அதன்பின் ஃபிட்டான உடல் தோற்றத்தில் பிரேமம் திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு ஏற்ப அவரது நடிப்பும் தோற்றமும் கனகச்சிதமாக பொருந்தி இருக்கும்.
அதன் பின்வரும் ஒவ்வொரு திரைப்படங்களிலும் சற்று எடை அதிகரித்தே காணப்பட்டார். இதற்காக ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்தனர்; அது குறித்து நிவின் பாலி கவலை கொள்ளவில்லை. ஆனால் தற்போது அவருடைய இந்த மாற்றம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவரது புதிய லுக் குறித்து இணையத்தில் அதிகம் பகிரப்பட்டும் பேசப்பட்டும் வருகின்றது.
Delighted to reveal my character’s first look in #Yezhukadalyezhumalai!#DirectorRam @sureshkamatchi @VHouseProd_Offl @yoursanjali @sooriofficial @thisisysr #nivinpauly pic.twitter.com/ye5M6J7Kel
— Nivin Pauly (@NivinOfficial) November 11, 2022
இயக்குநர் ராம் இயக்கத்தில் 'ஏழு கடல் ஏழு மலை' திரைப்படத்தில் தற்போது நிவின் பாலி நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கிறார். வி ஹவுஸ் ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்த திரைப்படத்தை தயாரிக்கிறார்.இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
என் கே ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் தொடங்கியது. மேலும் சமீபத்தில் நிவின் பாலியின் கதாபாத்திரத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. அந்த போஸ்டரில் நீண்ட முடியுடன் பருமனான உடல் தோற்றத்துடன் கையில் ஒரு இரும்பு கம்பியை வைத்துக்கொண்டு இருந்தார் நிவின்.
இந்த போஸ்டர் இணையத்தில் வைரலானது; தற்போது நிவின் பாலியின் இந்த ஸ்லிம்மான லுக் எந்த திரைப்படத்திற்காக என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது; விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நிவின் பாலி வெளியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.