மேலும் அறிய

Aadvik Ajith: கால்பந்தில் ஆர்வம் காட்டும் ஆத்விக்..! வாழ்த்துகளை குவிக்கும் அஜித் ரசிகர்கள்..!

நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வருவதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் உச்சநட்சத்திரமாக இருப்பவர் அஜித். துணிவு படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போது அடுத்த படத்திற்கான பணியில் தீவிரமாக உள்ளார். நடிகர் அஜித்தின் மனைவி நடிகை ஷாலினி. திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிவிட்டார். இந்த தம்பதியினருக்கு அனோஷ்கா  என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். அஜித் – ஷாலினிக்கு கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு அனோஷ்கா என்ற மகள் பிறந்தார். பின்னர், 2015ம் ஆண்டு ஆத்விக் பிறந்தார்.

அஜித் ஒரு நடிகராக மட்டுமின்றி பைக் பந்தய வீரர், கார் பந்தய வீரர், ட்ரோன் தொழில்நுட்பம், துப்பாக்கிச்சுடும் வீரர் என்று பன்முகத்தன்மை கொண்ட நபராக உள்ளார். அவரது மகன் ஆத்விக் தற்போது சென்னையில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். 7 வயதே ஆன ஆத்விக் தற்போதே கால்பந்தில் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார் என்று கூறப்படுகிறது.


Aadvik Ajith: கால்பந்தில் ஆர்வம் காட்டும் ஆத்விக்..! வாழ்த்துகளை குவிக்கும் அஜித் ரசிகர்கள்..!

சமீபத்தில் தாய் ஷாலினியுடன் ஆத்விக் மற்றும் இதர மாணவர்கள் இணைந்து சென்னையின் எஃப்.சி. சீருடை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியது. இந்த புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி பல தரப்பு ரசிகர்களும் இணையத்தில் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.

நடிகர் அஜித்தின் குடும்ப படங்களும், அவரது குடும்ப உறுப்பினர்களின் படங்களும் மிகவும் அரிதாகவே வெளிவரும். அந்த வகையில் கால்பந்து சீருடையில் ஆத்விக்கின் படம் வெளியானதை குட்டி தல என்று பதிவிட்டு பல ரசிகர்களும் பதிவிட்டு வருகின்றனர். மேலும், கால்பந்து சீருடையில் உள்ள ஆத்விக்கிற்கு கப்பு முக்கியம் பிகிலு என்றும் ரசிகர்கள் சிலர் பதிவிட்டு வருகின்றனர். அஜித்தின் மகள் அனோஷ்கா தற்போது பள்ளியில் படித்து வருகிறார்.


Aadvik Ajith: கால்பந்தில் ஆர்வம் காட்டும் ஆத்விக்..! வாழ்த்துகளை குவிக்கும் அஜித் ரசிகர்கள்..!

சினிமா, அரசியலில் பெரும்பாலும் அதில் முன்னணியில் உள்ளவர்களின் வாரிசுகள் தங்களது தந்தை சார்ந்த துறையிலேதான் வருவது வழக்கமாக உள்ளது. வெகு அரிதாக சிலரின் வாரிசுகள் மட்டுமே வேறு துறைகளுக்கு செல்கின்றனர். நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் விளையாட்டு வீரராக வலம் வரப்போகிறாரா? அல்லது திரைத்துறையில் தந்தையை போல தடம்பதிப்பாரா? அல்லது தந்தை அஜித்தை போல பன்முக கலைஞராக உலா வருவாரா? என்றும் காலம்தான் பதில் சொல்லும். இந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான மாதவனின் மகன் சிறந்த விளையாட்டு வீரராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குவதில் இருந்து விக்னேஷ்சிவன் நீக்கப்பட்ட பிறகு, அவரது படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும், அதற்கான பூஜை நடைபெற்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் வெளியாகாத காரணத்தால் ரசிகர்கள் ஏகே 62 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: Nawazuddin Siddiqui : மைனர் குழந்தைகள் எங்கே? விவாகரத்தான மனைவி மீது நவாசுதீன் வழக்கு... தொடரும் பிரச்சனை

மேலும் படிக்க: MohanG To Ameer : கடன் வாங்கி படம் எடுத்தேன்...கருத்தை பின் வாங்குங்க... பகாசூரன் பட சர்ச்சை... இயக்குநர் அமீருக்கு மோகன்ஜி பதிலடி!

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Yamaha R2 Price Features: யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
யமஹா R15 வெறியர்களே.! அதவிட இன்னும் பவர்ஃபுல்லான R2 வந்துட்டே இருக்கு.! லாஞ்ச் எப்போது, விலை என்ன.?
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Embed widget