கண்ணீரை மறைக்க கண்ணாடி போட்ட அஜித்...ரசிகர்களுக்காக சிறப்பு வீடியோ
துபாயில் நடைபெறும் கார் ரேஸில் கலந்துகொண்டிருக்கும் தனது ரசிகர்களுக்கு சில அட்வைஸ் கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார்

அஜித் குமார்
இந்த பொங்கலுக்கு விடாமுயற்சி படத்தை ஆவலாக எதிர்பார்த்து காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் விடாமுயற்சி படம் வெளியாவதைக் காட்டிலும் பெரிய கொண்டாட்டமாக அஜித் கலந்துகொண்டுள்ள கார் பந்தையம் அமைந்துள்ளது. துபாயில் நடைபெற்று வரும் 24H மிச்லின் கார் பந்தையத்தை அஜித் மற்றும் அவரது குழு கலந்துகொண்டுள்ளார்கள். இதனைக் காண நூற்றுக்கணக்கான அஜித் ரசிகர்கள் துபாய் கிளம்பி சென்றுள்ளார்கள். பல வருடங்களுக்கு பின் அஜித் பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளது அஜித் ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
ரசிகர்களை அளவுகடந்து நேசிக்கிறேன்
பேட்டியில் பேசிய அஜித், இவ்வளவு கூட்டம் இங்கு வரும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் தன்னுடைய ரசிகர்களை தான் அளவுகடந்து நேசிப்பதாகவும் என கூறினார். மேலும் களத்திற்கு தன்னைப் பார்க்க வந்திருக்கும் ரசிகர்களுக்கு கையசைத்தும் அவர்களுடன் செல்ஃபீ எடுத்தும் வருகிறார் அஜித்.
ரசிகர்களுக்கு அஜித் வைத்த கோரிக்கை
மேலும் தனது ரசிகர்களுக்கு சில அறிவுறைகளை கூறி வீடியோ ஒன்றும் வெளியிட்டுள்ளார் அஜித். இந்த வீடியோவில் அஜித் " மோட்டார் ஸ்போர்ஸ்ட்ஸ் என்னுடைய வாழ்க்கையின் மிகப்பெரிய கனவு. நிறைய ரசிகர்கள் இங்கு வந்திருப்பது ரொம்ப எமோஷனலாக இருக்கிறது. நான் சொல்ல வேண்டியது ஒன்றே ஒன்று தான் . நீங்க எல்லாரும் சந்தோஷமா மன நிம்மதியுடன் வாழனும்னு கடவுள வேண்டிக்கிறேன். உங்கள் குடும்பத்தை பாருங்கள். டைம் வேஸ்ட் பண்ணாதீங்க. நல்ல படியுங்கள். வேலைக்கு போகிறவர்கள் கடுமையாக உழைக்கனும். நமக்கு புடிச்ச விஷயங்களை செய்யும் போது அதில் வெற்றி அடைந்தால் சந்தோஷம் தான் ஆனால் தோல்வி அடைந்தால் சோர்ந்து போகாதீர்கள். விளையாட்டு தான் முக்கியம். விட்டுக் கொடுக்காமல் விடாப்பிடியாக முயற்சி செய்யுங்கள். லவ் யூ ஆல். " என அஜித் உணர்ச்சிவசமாக பேசியுள்ளார்.
Ak.
— Suresh Chandra (@SureshChandraa) January 11, 2025
My fans
Their commitments. pic.twitter.com/5fW17Gghgu
அஜித் நடித்துள்ள விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி 24 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது





















