Ajith Motor Racing: ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப் - மீண்டும் மோட்டார் ரேசில் களமிறங்கும் அஜித்!
நடிகர் அஜித் குமார் மீண்டும் மோட்டார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
மீண்டும் மோட்டார் பந்தயத்தில் களமிறங்கும் அஜித்:
தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, குட்பேட் அக்லி படமும் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. முன்னதாக நடிகர் அஜித் குமார் மோட்டார் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உள்ளவர் என்பது ரசிகர்களுக்கு தெரியும். சூட்டிங் இல்லாத நேரத்தில் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு ஜாலியாக நண்பர்களுடன் மோட்டார் பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இச்சூழலில் தான் அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் படியனான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்:
இந்த நிலையில் தான் நடிகர் அஜித் குமார் மீண்டும் மோட்டார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பாக வெளியாகி உள்ள தகவலின் படி, நடிகர் அஜித் குமார் 2025 இல் ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அணிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதை ஒருங்கிணைப்பதற்கு விளம்பரதாரர்களும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடன் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. விரைவில் ஐரோப்பிய GT4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை நடிகர் அஜித் குமார் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.
Indian Film Actor, Ajith is keen on making a comeback to motor racing. He is planning on participating in the European GT4 championship in 2025. Negotiations are on with Teams based in the UK, Europe & Middle East.
— FMSCI (@fmsci) September 24, 2024
Sponsors too are excited and keen on him coming on board. pic.twitter.com/hGAF4ljhhc
அஜித் தேசிய மோட்டார் சைக்கிள் பந்தய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்று மோட்டார் சைக்கிள்களில் தனது பந்தய வாழ்க்கையை தொடங்கினார். ப்ரோ-கார்ட்ஸில் தீவிர பயிற்சித் திட்டங்களைப் பதிவுசெய்து, அவர் வெற்றிகரமான பங்கேற்பைத் தொடர்ந்துதேசிய பந்தய சாம்பியன்ஷிப், பின்னர் அவர் ஆசிய ஃபார்முலா BMW சாம்பியன்ஷிப் மற்றும் பிரிட்டிஷ் ஃபார்முலா 3 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்றதன் மூலம் சர்வதேச அரங்கிற்கு முன்னேறினார் - டொனிங்டன் பார்க் மற்றும் நாக்ஹில் சர்க்யூட்களில் போடியம் முடித்த பிறகு FIA ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவும் செய்தார்.
எஃப்எம்எஸ்சிஐ தலைவர் அக்பர் இப்ராஹிம் கூறுகையில், “அஜித் மீண்டும் விளையாட்டுக்கு வருவதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவர் மிகவும் திறமையானவர்.அவர் எதைச் செய்தாலும் ஆர்வத்துடன் செய்வார். அதற்கு உண்மையாகவும் இருப்பார்.அஜித்விளையாட்டுக்கான பிராண்ட் அம்பாசிடர். அவரது எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” என்றார்.