மேலும் அறிய

Ajith Kumar: அஜித் வளர்ச்சியைப் பார்த்து மகிழ்ச்சி.. அவரின் முதல் தெலுங்கு படத்தில் நான் செய்தது.. சிரஞ்சீவி நெகிழ்ச்சி!

நடிகர் அஜித் குமார் மற்றும் நடிகர் சிரஞ்சீவி சந்தித்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அஜித் குமார்

விடாமுயற்சி, குட் பேட் அக்லி என அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடித்து வருகிறார் அஜித் குமார். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு கடந்த மே 10ஆம் தேதி ஹைதராபாதில் தொடங்கியது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். ஹைதராபாத் படப்பிடிப்பு முடிந்ததும் அடுத்தகட்டமாக ரஷ்யா செல்ல இருக்கிறது படக்குழு. இப்படியான நிலையில் அஜித் மற்றும் தெலுங்கு ஸ்டார் சிரஞ்சீவி சந்தித்துக் கொண்ட புகைப்படம் இணையளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சிரஞ்சீவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினியைப் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அஜித் பற்றி சிரஞ்சீவி

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Chiranjeevi Konidela (@chiranjeevikonidela)

சிரஞ்சீவி தற்போது விஸ்வாம்பரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இதற்கு அருகில் தான் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. சிரஞ்சீவி படத்தின் படப்பிடிப்பு என்று தெரிந்ததும் அஜித் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சிரஞ்சீவியை பார்க்க சென்றுள்ளார். இருவரும் சேர்ந்து நிறைய நேரம் உரையாடி பின் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.

இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட சிரஞ்சீவி இப்படி கூறியுள்ளார். “நேற்று மாலை விஸ்வம்பாரா படப்பிடிப்பு தளத்திற்கு திடீர் விருந்தினராக அஜித் வந்தார்.  நாங்கள் இருவரும் அஜித்தின் முதல் படமான பிரேம புஸ்தகம் வெளியான சமயத்தைப் பற்றி நிறைய பேசிக் கொண்டிருந்தோம். அஜித்தின் முதல் படமான பிரேம புஸ்தகத்தின் இசையை நான் தான் வெளியிட்டேன். பிறகு அஜித்தின் மனைவி ஷாலினி நான் நடித்த ’ஜகடெகாவீருது அதிலோக சுந்தரி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். அஜித்தின் இவ்வளவு பெரிய வளர்ச்சியைப் நினைத்து நான் வியப்படைந்தேன். இவ்வளவு பெரிய உயரத்திற்கு வந்த பிறகு அவர் ஒரு நல்ல மனம் கொண்ட மனிதராகவே இருக்கிறார்” என்று சிரஞ்சீவி பதிவிட்டுள்ளார்.

அஜித் பற்றிய இந்தப் பதிவு அஜித் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில் இந்த பதிவு சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தலைப்பு செய்திகள்

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் முன்பதிவு மந்தம்..தமிழ்நாட்டில் மட்டும் இத்தனை கோடி வசூல் தேவையா!
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
செத்தால் செத்துப்போ.. சித்திக்கு பளார் பளார்..! ரேவதி ஆக்ஷனில் அதிரும் கார்த்திகை தீபம்
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!
அசோக் செல்வனின் அடுத்த காதல் பயணம்.. வெளியானது ‘அன்பில் அவன்’ ஃபர்ஸ்ட் லுக்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget