Arjun Daughter Marriage: பிரபல நடிகரின் மகனுடன் காதல்?.. வைரலாகும் அர்ஜூன் மகளின் திருமண செய்தி..
Aishwarya Arjun Umapathy Marriage: தமிழில் வளர்ந்து வரும் நடிகர் ஒருவரை நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
![Arjun Daughter Marriage: பிரபல நடிகரின் மகனுடன் காதல்?.. வைரலாகும் அர்ஜூன் மகளின் திருமண செய்தி.. Action King Arjun Daughter Aishwarya and Thambi Ramaiah Son Umapathy to Get Married Soon Arjun Daughter Marriage: பிரபல நடிகரின் மகனுடன் காதல்?.. வைரலாகும் அர்ஜூன் மகளின் திருமண செய்தி..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/25/ee90a08de5d258988b280502a395ca921687682777147572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழில் வளர்ந்து வரும் நடிகர் ஒருவரை நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘ஆக்ஷன் கிங்’ அர்ஜூன்
தமிழ் சினிமா ரசிகர்களிடையே ‘ஆக்ஷன் கிங்’ என பெயரெடுத்தவர் நடிகர் அர்ஜூன். 1984 ஆம் ஆண்டு நன்றி என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர் ஏகப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். 90களின் காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த அர்ஜூன், தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளில் நடித்து உள்ளார். இவரது ஆக்ஷன் காட்சிகளை கண்டு தமிழ் சினிமாவின் புரூஸ்லி எனக்கூட ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு மிரட்டுவார்.
நடிப்பு மட்டுமல்லாது இயக்கம், தயாரிப்பு என பல துறைகளிலும் இவர் சாதனை படைத்துள்ளார். அதேசமயம் சில படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார். இப்படியான அர்ஜூன் தற்போது வில்லன் கேரக்டரில் அசத்தி வருகிறார்.
அவர் தற்போது நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். அர்ஜூன் மகளான ஐஸ்வர்யா விஷால் நடித்த பட்டத்து யானை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமனார். ஆனால் பெரிய அளவில் சோபிக்காத அவர், அதன்பின் சொல்லி விடவா என்னும் படத்தில் நடித்தார். இதன்பின்னர் இதுவரை சினிமாவில் நடிக்காமல் இருக்கும் ஐஸ்வர்யா வளர்ந்து வரும் நடிகர் ஒருவரை காதல் திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தம்பி ராமையாவின் மகன்
தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளவர் ‘தம்பி ராமையா’ . இவரது மகன் உமாபதி ராமையா, தமிழில் ஒரு கூடை முத்தம், மணியார் குடும்பம், திருமணம், தண்ணி வண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘சர்வைவர்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜூன் தான் தொகுத்து வழங்கினார். அப்போது தம்பி ராமையா, அர்ஜூன் குடும்பத்தினர் இடையே ஏற்பட்ட நட்பு, உமாபதி - ஐஸ்வர்யா இடையே காதல் உண்டாக்கியதாக கூறப்படுகிறது. விரைவில் இவர்களது திருமணம் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுபவதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)