மேலும் அறிய

“4த் ஃப்ளோர்”  திரைப்பட இசை வெளியீட்டு விழா !! 

இயக்குநர் L R  சுந்தரபாண்டி இயக்கத்தில், நடிகர் ஆரி அர்ஜுனன் கதாநாயகனாக நடிக்க, வித்தியாசமான களத்தில் மர்மங்கள் நிறைந்த பரபரப்பான  திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம்  “4த் ஃப்ளோர்”.  

இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.  இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா படக்குழுவினருடன், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக, நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.  இந்நிகழ்வினில் 

தயாரிப்பாளர் A ராஜா பேசியதாவது

எல்லாருக்கும் வணக்கம். எங்களின்  4த் ஃப்ளோர் படம் நல்லபடியாக வந்துள்ளது.  நிறைய பேர் கஷ்டப்பட்டடு இப்படத்தை முடித்துள்ளோம்.   இப்போதைய சினிமாவில் பணம் போடுவது பெரிய பிரச்சனை இல்லை. ஆனால் இந்த காலத்தில் ஒரு சரியான படத்தை  கொண்டு வருதான் ரொம்ப பெரிய விஷயம். அந்த விஷயத்தில் இந்த படம் நல்லபடியாக வந்திருக்கிறது. ஒத்துழைத்த ஆதி, இயக்குநர் மற்றும் குழுவினருக்கு நன்றி.  அனைவரும் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி. 

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் லக்ஷ்மன் என் நீண்டகால நண்பர். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்திலிருந்து அவருடைய வேலை என்னை எப்போதும் பிரமிக்க வைத்திருக்கிறது. அமைதியாக, நேர்த்தியாக, மிகப் பெரிய அழுத்தத்தை ஹேண்டில் செய்து ஒரு படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வருவது சுலபமல்ல. அந்த வகையில் இந்த படக்குழு பாராட்டுக்குரியது. இது ஒரு டிஃப்ரெண்டான ஜானரில் வந்திருக்கும் படம்.  நிச்சயமாக பெரிய வெற்றி அடையும். தயாரிப்பாளருக்கும்,  என் ஊரான பழனியிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்துள்ள ஹீரோ ஆரிக்கும் என் மனப்பூர்வமான வாழ்த்துகள்.

இயக்குநர் விஜய் மில்டன் பேசியதாவது

நடிகர் ஆரியை ஆரம்ப கட்டத்திலிருந்து பார்த்து வருகிறேன். அவர் கடுமையாக உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார். ஆரி திரையில் தோன்றும் ஒவ்வொரு நிமிடமும்
அந்த ஃப்ரேமுக்கு, ஒரு தனி உயிர் கிடைக்கிறது. அந்த அழகு வெளிப்புற அலங்காரம் அல்ல; உள்ளுக்குள் இருக்கும் உண்மை, அமைதி, சென்சிபிலிட்டி.
எதையும் மிகைப்படுத்தாமல், இயல்பாகவே கவர்கிறவர் அவர். நடிகனாக மட்டுமல்ல, மனிதராகவும் மதிக்கத் தக்கவர். அவருடன் வேலை செய்வது ஒரு நிம்மதியான அனுபவம். ஒவ்வொரு காட்சியிலும் அவர்  தன்னை முழுமையாக ஒப்புக் கொடுக்கிறார். அதுதான் இந்த படத்தின் மிகப் பெரிய பலம். நடிகர்களும்  டெக்னிக்கல் டீமும் ஒரே மனதோடு இணைந்து பயணித்திருக்கிறார்கள்.  சினிமா என்பது தனி மனித சாதனை அல்ல என்று நிரூபிக்கும் ஒரு முயற்சி. இந்த படம் அனைவருக்கும் அடுத்த கட்டப் பயணமாக அமையட்டும் வாழ்த்துக்கள்.

நடிகர் பரத் பேசியதாவது

ஆரியும் நானும்  பல வருடங்களாக இந்த இன்டஸ்ட்ரியில் பயணம் செய்து கொண்டிருக்கிறோம். ஒரு வருடம் முன்னாடி தான் நாங்கள் ஒருவரையொருவர் சந்தித்தோம்.
எனக்கு தனிப்பட்ட முறையில், க்ரைம் திரில்லர் என்ற ஜானர் எப்போதுமே பிடிக்கும். என்னுடைய  திரைப்பயணத்தில் தெரியாமலேயே,  கடைசி ஏழு படங்களும் திரில்லர் படங்களாகவே அமைந்திருக்கிறது. அந்த ஜானருக்கு ஒரு உத்தரவாதம்  எப்போதும் இருக்கும். அதாவது, சரியான திரைக்கதையும், நல்ல  விளம்பரமும் இருந்தால் அந்த படம் நிச்சயமாக ஓடும். அந்த எல்லா அம்சங்களும் இந்த படத்தில் இருக்கிறது. குறிப்பாக, டைட்டில் டிசைன் கூட ரொம்ப அழகாகவும் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அமைந்திருக்கிறது. இந்த படத்திற்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துகள்.

இயக்குநர் சேரன் பேசியதாவது

திருப்பூர் என்று சொன்னாலே எனக்கு நிறைய நினைவுகள் மனசுக்குள்ள வந்து போகும். “திருப்பூர் புரொடியூசர்ஸ்” உடன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு பல வருடங்களாக இருந்தது. அந்த வகையில், இந்த படத்தை தயாரித்து, அதை ரிலீஸ் வரை கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதே ஒரு பெரிய விஷயம். அதற்காக முதலில் நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.  இன்று பலர் சினிமாவை வேறு நோக்கங்களுக்காக அணுகுகிறார்கள். ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க சினிமாவை மட்டுமே நம்பி, அதையே நோக்கமாக கொண்டு வந்திருக்கிறீர்கள். அது எனக்கு சந்தோஷம்.

இந்த படத்தைப் பற்றி பேசும்போது, முதல் இம்ப்ரஷன் என்றால் அது நிச்சயமாக டைட்டில் டிசைன் தான். 4த் ஃப்ளோர் என்ற வார்த்தைக்கு இவ்வளவு கம்பீரமும், அழகும், அர்த்தமும் கொடுத்திருக்கிறார்கள். அந்த டைட்டிலே இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குகிறது. படத்தின் மற்ற எல்லா  அம்சங்கள் பார்த்தால், எல்லாமே ஒரு நம்பிக்கையை தருகிறது. இது இன்றைய தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் பிடிக்கும் வகையிலான ஒரு முயற்சி என்று எனக்கு தோன்றுகிறது.

இந்த படக்குழுவில் இருக்கும் பலரை நான் தனிப்பட்ட முறையிலும் அறிவேன். ஆரி  என் நண்பர், என் மாணவர், என் படத்தில் நடித்தவர். எந்த விதமான பின்புல ஆதரவுமில்லாமல், அவருடைய உழைப்பை மட்டுமே நம்பி இங்கு நிற்கும் மனிதர். அந்த வகையில், இந்த படம் அவருக்கு ஒரு அடையாளமாகவும், ஒரு நம்பிக்கையாகவும் அமைய வேண்டும். வாழ்த்துக்கள். 

இயக்குநர் சுப்பிரமணியம் சிவா பேசியதாவது

‘4த் ஃப்ளோர்’ என்ற டைட்டிலே மிக அட்டகாசமாக இருக்கிறது. ஒரு படத்திற்கு முதல் டிக்கெட் என்பது அதன் டைட்டிலும், அதன் விளம்பர முகமும் தான். ஒரு மனிதன் திரையரங்குக்குள் நுழைய வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவது அந்த முதல் பார்வையே. அதை இப்படம் உருவாக்கியுள்ளது. 
ஆரியை பல வருடங்களாக எனக்குத் தெரியும் பிக்பாஸில் ஜெயித்த போது அதன் புகழை இயற்கை விவசாயத்துக்கு பயன்படுத்தியவர். மிகச்சிறந்த மனிதர். அவரது இந்தத் திரைப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துகள். 

இயக்குநர் L R சுந்தரபாண்டி பேசியதாவது

இது எனக்கு மூன்றாவது படம். தயாரிப்பாளர் ராஜா சார். அவரை அண்ணன் என்று சொல்லவா, நண்பர் என்று சொல்லவா எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதி – இந்த படத்தின் மூலம் ஒரு ஆழமான நட்பு உருவாகியுள்ளது. இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், கதை ரீதியாக இது ஒரு ஜானர் மிஸ்டேக் உள்ள படம். ஒரே ஜானருக்குள் அடக்க முடியாத கதை இது. முதலில் கேட்கும்போது இது ஹாரர் படம் மாதிரி தோன்றலாம்; அடுத்த நிமிஷம் திரில்லராக மாறும். அதற்குள் காமெடியும் கலந்து வரும்.
“இது என்ன ஜானர்?” என்று கேட்டால், ஒரே வார்த்தையில் சொல்ல முடியாத படம். கதையை முதலில் கேட்டவுடனே ஆரி  சார் இந்த படத்தில் இணைந்தார். இந்த கதையின் மேல் நம்பிக்கை வைத்து உள்ளே வந்த முதல் நபர் அவர்தான். அதுமட்டுமல்ல, சின்னதாக ஆரம்பித்த இந்த படத்தை பெரிய அளவுக்கு கொண்டு போக வேண்டும் என்ற எண்ணத்தையும் அவர்தான் கொடுத்தார். இது தயாரிப்பாளர்–டெக்னீஷியன் உறவாக இல்லாமல், நண்பர்கள் சேர்ந்து செய்த ஒரு படமாக வந்துள்ளது. இந்த படம் முழுக்க முழுக்க திரில்லர், பாடல்கள், எமோஷன் எல்லாம் கலந்து வந்த ஒரு முயற்சி. அது உங்களுக்கெல்லாம் ஒரு திருப்தியான அனுபவத்தை தரும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது இப்போது உங்கள் கைகளில்தான் உள்ளது. மீடியா நண்பர்கள் அனைவரும் இந்த படத்திற்கு உங்கள் முழு ஆதரவை கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நடிகர் ஆரி பேசியதாவது

இன்றைக்கு நல்ல சினிமா எடுத்தவர்களுக்கு பின்னால் நிற்க வேண்டும் என்பதே மிக முக்கியமான விஷயம், அதுதான் இந்த விழாவின் உண்மையான அர்த்தம். எதற்கும்  நேரமும் உடல் உழைப்பும் தேவைப்படும் இந்த காலகட்டத்தில், தொலைபேசி அழைப்பை மதித்து வந்து நீண்ட நேரம் காத்திருந்து வாழ்த்திய அனைவருக்கும் மனப்பூர்வமான நன்றி. சினிமாவில் குவாலிட்டி, மரியாதை, ஒழுக்கம் போன்றவை வெளியே தெரியும் விஷயங்கள் அல்ல; அருகில் இருப்பவர்களுக்கே அது புரியும் தன்னால் முடியும் என்ற நம்பிக்கையோடு உழைக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த நேரத்தில் எனது நன்றி. பிக்பாஸுக்கு பிறகு என் படங்கள் பெரிதாக வரவில்லை ஆனால் கலைஞர் டிவியில் நான் செய்த ஷோ மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. 

ஆரி படம் செய்வதில்லை அவருக்கு என்ன பிஸினஸ் இருக்கிறது என பலர் சொன்ன போதும்,  அதை கண்டுகொள்ளாமல், படத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் ராஜா அவர்களுக்கு நன்றி.  இதில் எனது நண்பர்கள் பலரும் பணிபுரிந்துள்ளார்கள். அவர்கள் அனைவரும் இப்படத்திற்காக உண்மையாக  உழைத்திருக்கிறார்கள். இப்படத்தில் நாங்கள் எல்லோரும் சண்டை போட்டுள்ளோம், ஆனால் அது எல்லாம் படத்திற்காக தான். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. இங்கு வெற்றி தான் எல்லாரையும் முன்னிறுத்துகிறது. வெற்றி பெற்றால் எல்லோரும் ஸ்டார் தான். எனக்கு பிக்பாஸுக்குப் பிறகு பெரிய வரவேற்பு இருப்பதாக பலர் சொன்னார்கள். எனக்கு  என்ன வரவேற்பு இருக்கிறது என எனக்கு உண்மையிலேயே தெரியாது.  நான் அதை எதையும் கண்டுகொள்வதில்லை. உண்மையான உழைப்பை தருவோம் என உழைத்துள்ளேன். கண்டிப்பாக எல்லோருக்கும் படம் பிடிக்கும் நன்றி. 

 

தலைப்பு செய்திகள்

4 நாட்களில் ரூ.51 கோடியை கடந்த ‘மீசைய முறுக்கு 2’ வசூல்.. ஹிப்ஹாப் தமிழாவுக்கு கம்பேக்!
4 நாட்களில் ரூ.51 கோடியை கடந்த ‘மீசைய முறுக்கு 2’ வசூல்.. ஹிப்ஹாப் தமிழாவுக்கு கம்பேக்!
அண்ணாத்த, பீஸ்ட் வரிசையில் ஜெயிலர் 2? ஆடியோ லாஞ்ச் இல்லாதது ஏன்?
அண்ணாத்த, பீஸ்ட் வரிசையில் ஜெயிலர் 2? ஆடியோ லாஞ்ச் இல்லாதது ஏன்?
சம்பளமே இல்லாமல் டேர்டெவில் படப்பிடிப்பை தொடங்கும் அஜித் குமார்..என்ன காரணம்?
சம்பளமே இல்லாமல் டேர்டெவில் படப்பிடிப்பை தொடங்கும் அஜித் குமார்..என்ன காரணம்?
“சார், நாம குடும்பம்” - வெங்கட் பிரபுவுக்கு சிவகார்த்திகேயன் பதில்
“சார், நாம குடும்பம்” - வெங்கட் பிரபுவுக்கு சிவகார்த்திகேயன் பதில்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Sister Sentiment : ’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் உறவுக்கு முக்கியத்துவம் தந்த பின்னணி..!
’தங்கை வித்யா-வை இழந்த முதல்வர் விஜய்’ தாய் மாமன் மோதிரத்தின் பின்னணி..!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Joseph Vijay: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. குழந்தைகளை கொஞ்சிய விஜய்.. போட்டிப்போட்ட தாய்மார்கள்!
CM Vijay: தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
தாய்மாமன் சீர் தந்த விஜய்..! க்யூட்டாக சிரித்த குட்டீஸ், அண்ணா என கூறி கண்கலங்கிய பெண்கள் - வீடியோக்கள்
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
அடுத்த 3 நாட்கள்.! காற்றோடு கொட்டப்போகுது மழை- எந்த எந்த மாவட்டம்.? வானிலை மையம் லிஸ்ட் இதோ..
Mojtaba Slams Trump: “அவருக்கு அத செய்ய தைரியம் கிடையாது“; ட்ரம்ப்பை விளாசிய மொஜ்தபா கமேனி; என்ன கூறினார்.?
“அவருக்கு அத செய்ய தைரியம் கிடையாது“; ட்ரம்ப்பை விளாசிய மொஜ்தபா கமேனி; என்ன கூறினார்.?
Hyundai Verna EMI Plan: சொகுசு செடான் ஹூண்டாய் வெர்னா வாங்க ஆசைப்படுறீங்களா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
சொகுசு செடான் ஹூண்டாய் வெர்னா வாங்க ஆசைப்படுறீங்களா.? முன்பணம், EMI எவ்வளவு வரும்னு பாருங்க
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Shubman Gill: தலைவனாக உருவெடுக்கும் சுப்மன்கில்.. தளபதிகளாக தோள் கொடுக்கும் விராட் - ரோகித்!
Gold and Silver Rate Sep.28th: அடி சக்க, உடனே கிளம்புங்க.! இன்று மாலையிலும் குறைந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
அடி சக்க, உடனே கிளம்புங்க.! இன்று மாலையிலும் குறைந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
Embed widget