மேலும் அறிய

Watch Video : விஜய் மாமா இது தப்பு... அட்வைஸ் செய்த சிறுவன்... விமர்சனத்திற்கு உள்ளான லியோ போஸ்டர்  

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான லியோ படத்தின் போஸ்டர் பார்த்து சிறுவன் ஒருவன் விஜய் மாமா இனிமேல் சிகரெட் பிடிக்காதீர்கள் என அட்வைஸ் செய்த வீடியோ சோசியல் மீடியாவில் பேசுபொருளாக மாறியுள்ளது.   

தமிழ் சினிமாவின் மாஸ் நடிகராக உலகெங்கிலும் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்ற நடிகர் விஜய் நேற்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு திரைபிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்களை குவித்து வந்தனர்.

அந்த வகையில் ரசிகர்களை சந்தோஷப்படுத்துவதற்காக அவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் 'லியோ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலை வெளியிட்டது படக்குழு. பல நாட்களாக இதற்காக காத்திருந்த விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் பின்னல் ஒரு சிங்கம் , நெருப்பு கொழுந்து விட்டு எரிகிறது. விஜய் வாயில் சிகரெட் வைத்து கொண்டு இருப்பது போலவும் கையில் துப்பாக்கி ஃபயர் ஆனது போல புகை வருவது போல போஸ்டர் இடம் பெற்று  இருந்தது. 

Watch Video : விஜய் மாமா இது தப்பு... அட்வைஸ் செய்த சிறுவன்... விமர்சனத்திற்கு உள்ளான லியோ போஸ்டர்  
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ள விஜய் சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு நடிகை திரிஷாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.  இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் என மிகப்பெரிய திரை பட்டாளம் நடித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர் முன்னர் வெளியானதில் விஜய்க்கு பின்னால் ஒரு ஓநாய் இருந்தது. தற்போது வெளியாகியுள்ள போஸ்டரில் சிங்கம் இடம் பெற்று இருந்தது. லியோ படத்தில் நடிகர் விஜயுடன் ஒரு சிங்கம் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் கிராபிக்ஸ் பணிகளுக்காக பெரிய பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.  

நடிகர் விஜயின் 'லியோ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் பார்த்த சிறுவன் ஒருவன் விஜய்க்கு அட்வைஸ் செய்துள்ளான். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு விஜய் மாமா சிகரெட் எல்லாம் பிடிக்க கூடாது. அது தப்பு வாயில் ரத்தம் வரும், சாப்பிடக்கூட முடியாது என அட்வைஸ் பண்ண வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. 

வெளியான லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தாலும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. கடந்த வாரம் தான் மாணவர்களுக்காக ஒரு விழா ஏற்பாடு செய்து அதில் வெற்றி பெற்ற மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஊக்கத்தொகை, பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார். மாணவர்கள் மத்தியில் பேசிய விஜய் அவர்களுக்கு பல விஷயங்கள் குறித்து அட்வைஸ் செய்து இருந்தார். ஆனால் இன்று அவருக்கு ஒரு சிறுவன் அட்வைஸ் செய்தது பேசுபொருளாக மாறியுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Dhanush: தமிழ் தெரியவில்லை என்பது பெருமை அல்ல.. அவமானம்தான் - மாணவர்களுக்கு தனுஷ் அட்வைஸ்
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
Karthigai Deepam: கனடா போகப்போகும் ரேவதி.. சாமுண்டீஸ்வரி போடும் ப்ளான் - அடுத்து நடக்கப்போவது என்ன?
"ஒருவர் வேலை செய்தால், மற்றொருவர் குழந்தைகளுடன் இருப்போம்"... பெற்றோர்களாக சூர்யா–ஜோதிகா எடுத்த முடிவு
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!
'கருப்பு' படத்திற்காக கடைசி நேரத்தில் வாங்கிய கடன்... மனம் திறந்த சூர்யா!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget