மேலும் அறிய

பத்மாவத் பாடலுக்கு நடனமாடும் அம்மா-மகள் : மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக இணைகிறாரா தீபிகா?

பத்மாவதி படத்தில் இடம்பெற்ற “கூமர் “ என்ற  பாடலில் தீபிகா படுகோன் ஆடியது போலவே அச்சு அசலாக தனது தாய் மற்றும் மகள்  ஆடிய வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. 

பாலிவுட் திரையுலகின் மகாராணியாக வலம் வருபவர் நடிகை தீபிகா படுகோன். கதாபாத்திர தேர்வு மற்றும் கதை தேர்வு ஆகியவற்றில் திறமையானவர் தீபிகா. இதன் காரணமாகவே இவரது படங்கள் அதிக கவனம் பெருகின்றன.  ராம் லீலா, சென்னை எக்ஸ்பிரஸ், ஓம் சாந்தி ஓம் உள்ளிட்ட  பல படங்களிலும்  xXx: The Return of Xander Cage என்ற ஹாலிவுட் படத்திலும் நடித்திருந்தாலும்  சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான ’பத்மாவதி’ மற்றும் 'பாஜிராவ் மஸ்தானி ‘ உள்ளிட்ட  படங்கள் தீபிகா படுகோனுக்கு மிகப்பெரிய அங்கீகரத்தை வாங்கிக்கொடுத்தன.தற்போது பாலிவுட்டின் பிரம்மாண்ட நடிகை என்ற பெயரை தீபிகா படுகோன் பெற்றுள்ளார். இந்நிலையில்  கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான  பத்மாவத் படத்தில் இடம்பெற்ற “கூமர் “ என்ற  பாடலில் தீபிகா படுகோன் ஆடியது போலவே அச்சு அசலாக தனது தாய் மற்றும் மகள்  ஆடிய வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது. 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tania & Sony (@tania_and_sony)


சோனி மற்றும் அவரது மகள் தான்யா இருவரும் ‘ கூமர் ‘ பாடலுக்கு ஆடிய பாடல் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. 32 வினாடிகளில் ஓடும் இந்த பாடலை இதுவரையில் 135k பேர் பார்த்துள்ளனர். இந்த பாடலில் தீபிகா படுகோன் அணிந்திருக்கும் நிற ஆடை மற்றும் அவரது நடன மூவ்மெண்ட்ஸ்களை அச்சு அசலாக தாயும் மகளும் ஆடியுள்ளனர். பின்னணியில் தொலைக்காட்சி ஒன்றில் ’கூமர்’ பாடல் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இவர்களின் அசத்தல் நடனத்தை பலரும் ரசித்து வருகின்றனர்

பத்மாவதி திரைப்படத்தில் இடம்பெற்ற கூமர் பாடலானது 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது. பாடலில் தீபிகா படுகோன்  அணிந்திருக்கும் ஆடையை மட்டுமே  லட்சக்கணக்கான ரூபாயில் உருவாக்கியுள்ளனர் வடிவமைப்பாளர்கள் . இந்த பாடல் யூடியூபில் தற்போது 29 கோடி பயனாளர்களை கடந்துள்ளது. ராஜஸ்தானின் பாரம்பரிய நடனமான இந்த பாடலை முறையாக கற்று பின்னர் பாடலுக்கு நடனமாடினாராம் தீபிகா படுகோன். இந்தப் பாடல் எடுக்கப்பட்ட விதம் குறித்து தீபிகா படுகோன் கூறுகையில், “என் சினிமா வாழ்க்கையில் மிகவும் கடினமான பாடல் இது. அந்த நாளை  மறக்கவே மாட்டேன். அந்தப் பாடலுக்கு ஆடும் பொழுது உண்மையாகவே என்னை பத்மாவதி போலவே உணர்ந்தேன்” என குறிப்பிட்டிருந்தார். அமெரிக்க கூடைப்பந்தாட்ட விளையாட்டு ஒன்றிலும் இந்த பாடல் ஒலித்து அந்த செய்தி வைரலானது.


பத்மாவத் பாடலுக்கு நடனமாடும் அம்மா-மகள் : மீண்டும் ரஜினிக்கு ஜோடியாக இணைகிறாரா தீபிகா?
தற்போது பாலிவுட் பக்கம் மட்டுமே கவனம் செலுத்தும் தீபிகா தமிழ் திரையுலகிலும் கால் பதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியின் அடுத்த படத்தில் தீபிகாவை கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த படத்தை அண்ணாத்த படத்தை தயாரித்த ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனமே தயாரிக்கவுள்ளது.  முன்னதாக 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரஜினி நடிக்க ஒப்பந்தமான ராணா திரைப்படத்தில் நடிகையாக ஒப்பந்தமானவர் தீபிகா. ஆனால் ரஜினியின் உடல்நிலை காரணமாக இந்த படம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அனிமேஷன் படமாக உருவான கோச்சடையான் படத்திலும் ரஜினிக்கு ஜோடியாக  தீபிகா நடித்திருந்தார்

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
Karthigai Deepam: விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. அவசரம் அவசரமாக தரையிறங்கிய ரேவதி - கைகொடுத்த கார்த்திக் மாஸ்டர் ப்ளான்
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
விஜய்யைத் தொடர்ந்து தனுஷும் அதிரடி! வெளியான மாஸ் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்!
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
தனுஷ் மீது மீண்டும் நடவடிக்கையா? தயாரிப்பாளர் சங்கத்தில் பரபரப்பு
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !
18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
Tamilisai: சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
சட்டப்பேரவையில் உமிழப்பட்ட வன்மம்..! ரூல்ஸ் படிச்சிங்களா இல்லையா? தீர்மானத்தால் கடுப்பான தமிழிசை
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
நெல் ஊக்கத்தொகை உயர்வு கண்துடைப்பு: இது போதுமானதே அல்ல- தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்!
Tamil Thai Vazhthu : ‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
‘தமிழ்த்தாய் வாழ்த்தை மாநில பாடலாக்கிய திமுக’ அரசாணை வெளியிட்டதும் திமுக..!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
புதுசா.. பெருசா.. ஃப்ரெஷ்ஷா.. அதிரடி மாற்றங்களுடன் ஹூண்டாய் க்ரெட்டா SUV: டிசைன், இன்ஜின், மைலேஜ்!
ADMK to TVK: எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
எந்த பதவியும் இன்னும் கொடுக்கலையே.!! ஏண்டா இங்க வந்தோம்.? தவெகவில் தவிக்கும் அதிமுக மாஜிக்கள்.?
Embed widget