மேலும் அறிய

Puneeth Rajkumar | ’உங்களுக்கு ஹேட்டர்ஸே கிடையாதா?’ - புனித் ராஜ்குமார் சொன்ன பதில் என்ன தெரியுமா?

’A Man with no haters’ என்கிறது அவரை அறிந்த வட்டாரங்கள். சில மாதங்களுக்கு விமர்சகர் பரத்வாஜ் ரங்கனுடனான ஒரு நேர்காணலில் கலகலப்பாகத் தன்னைப்பற்றி பல தகவல்களைப் பதிவு செய்திருந்தார்.

கன்னடத் திரையுலகின் முதல் குடும்பம் நடிகர் ராஜ்குமாருடையது. கன்னடத்து நடிகர் திலகம் ராஜ்குமார் மற்றும் அவரது மனைவி பர்வதம்மாவுக்குப் பிறந்த குழந்தைகள் மற்றும் அவர்களது பேரப்பிள்ளைகள் என அனைவருமே திரைப்பட நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள் என ஏதோ ஒருவகையில் கன்னடத் திரையுலகுடன் தொடர்பில் இருப்பதும் அதற்கு ஒரு காரணம். இப்படியான குடும்பத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் நடிகர் புனீத் ராஜ்குமாரின் மரணம் என்பது கன்னடத் திரையுலகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த கர்நாடகத்தாலுமே ஏற்றுக்கொள்ள முடியாததாகத்தான் உள்ளது.

2002ம் ஆண்டு கன்னடத் திரையுலகில் அப்பு திரைப்படம் மூலம் அறிமுகமான புனித் ராஜ்குமார்.அதன்பிறகு அதே பெயராலேயே அனைவராலும் செல்லமாக அழைக்கப்பட்டார். நேற்று வரை நட்சத்திர மேடைகளில் கலகலப்பாகப் பேசி வலம்வந்த புனீத் இன்று காலை உடற்பயிற்சி செய்யச் சென்றவர் அதன்பிறகு உடலில் உயிரற்றவராகத்தான் வீடு திரும்பியுள்ளார். புனித் ராஜ்குமார் கன்னடத் திரையுலகத்தில் அனைவராலும் நேசிக்கப்பட்டவர். ’A Man with no haters’ என்கிறது அவரை அறிந்த வட்டாரங்கள். சில மாதங்களுக்கு விமர்சகர் பரத்வாஜ் ரங்கனுடனான ஒரு நேர்காணலில் கலகலப்பாகத் தன்னைப்பற்றி பல தகவல்களைப் பதிவு செய்திருந்தார்.


Puneeth Rajkumar | ’உங்களுக்கு ஹேட்டர்ஸே கிடையாதா?’ - புனித் ராஜ்குமார் சொன்ன பதில் என்ன தெரியுமா?

அந்தப் பேட்டியின் சுருக்கம், 

பரத்வாஜ் ரங்கன்: இது நீங்கள் திரையுலகத்துக்கு வந்ததன் இருபதாவது ஆண்டு. இத்தனை வருடத்தில் என்ன மாறியிருக்கிறது?

புனித்: இத்தனை வருடத்தில் எனக்கு 20 வயது அதிகரித்திருக்கிறது.நான் உடல்ரீதியாகவும் என்னை ஃபிட்டாக வைத்துக்கொள்ள நிறைய முயற்சி செய்திருக்கிறேன். அப்போது பார்த்ததற்கு உடல்ரீதியாக நான் நிறைய மாறியிருக்கிறேன் மற்றபடி திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் குறித்து நான் கருத்து கூறும் அளவுக்கு வளரவில்லை.

பரத்வாஜ் ரங்கன்: உங்களது ரசிகர்களா? அல்லது உங்கள் குடும்பமா? யாருடன் அதிக நேரத்தைச் செலவிடுகிறீர்கள்? 

புனித்: எனது அப்பா என்னை சினிமா சூட்டிங்குக்கு முதன்முதலில் அழைத்துச் சென்றபோது எனக்கு வயது ஐந்து.நான் அப்போது தொடங்கி இந்த ரசிகர்கள் கூட்டத்தைப் பார்த்து வருகிறேன். என் அப்பா சொல்வது போல எனது ரசிகர்கள்தான் எனக்குக் கடவுள். மற்றபடி எனது முதல் படம் தொடங்கியே எனக்கு ரசிகர்கள் இருக்கவேண்டும் என்பதை விட நான் அவர்கள் ஏற்றுக்கொள்ளும்படி நன்றாக நடிக்க வேண்டும் என்கிற எண்ணம்தான் அதிகம் இருந்தது.20 வருடத்தில் 30 படங்கள் மட்டுமே நடித்திருக்கிறேன்.என் குடும்பத்துடன் எப்போதுமே நேரம் செலவிட நான் தவறியதில்லை. நான் அப்போது எப்படியிருந்தேனோ இப்போதும் அப்படியேதான் இருக்கிறேன். 

பரத்வாஜ்: உங்களுக்கு ஹேட்டர்ஸே கிடையாதா? 

புனித்: நான் எல்லோருடனுமே நல்ல நட்பை பாராட்ட விரும்புபவன். அவ்வப்போது விமர்சனம் செய்பவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் அது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். விமர்சகர்களே இல்லாத நபர்கள் இருக்கவே முடியாது. 


பரத்வாஜ்: உங்களுக்கு 20 வயது அதிகரித்திருப்பதாகச் சொல்கிறீர்கள், ஆனால் பார்ப்பவர்கள் 20 வயது குறைந்திருப்பதாகத்தான் நினைப்பார்கள்.இளமையாக இருப்பதற்குக் காரணம் என்ன?

புனித்: எனக்கு நிறைய சாப்பிடப் பிடிக்கும்.அதனால் நான் உடல் எடை குறைக்கவேண்டும் என்றால் எப்போதுமே குறைத்துக் கொண்டிருக்க வேண்டியிருக்கும். உடலை ஃபிட்டாக ஸ்ட்ரெஸ் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும் என ஏகப்பட்ட கெடுபிடிகள் உண்டு.ஆனால் அதையும் தாண்டி எனது குடும்பமும் நண்பர்களும்தான் நான் மகிழ்ச்சியாகவும் இளமையாகவும் காரணம். எனக்கு 18 வயதிலிருந்து 60 வயது வரையில் நண்பர்கள் இருக்கிறார்கள். 

பரத்வாஜ்: மற்ற மொழிகளில் நடிக்க ஆர்வம் உண்டா? 

புனித்: தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் இருக்கும் பல இயக்குநர்களிடம் பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் எனக்கு உண்டு. அந்த மொழிகளில் கதாநாயகனாக நடிக்கவேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டதில்லை. அந்த இயக்குநர்களின் படங்களில் நன்றாக நடிக்கும் ஒரு கதாப்பாத்திரம் கிடைக்க வேண்டும் என்கிற ஆசை எனக்கு உண்டு. 

பரத்வாஜ் : நீங்கள் நிறைய ஆங்கிலப் படங்கள் பார்ப்பவர், மேற்கத்திய இசை கேட்பவர் என்பது உண்மையா? 

புனித்: ஆம், நான் 80களின் மேற்கத்திய இசைகள் நிறைய கேட்பேன். ஆங்கிலம் மட்டுமல்ல நல்ல மொழிப்படங்கள் எதுவாக இருந்தாலும் பார்ப்பேன். தற்போது சப்டைட்டில்களுடன் வருவதால் புரிந்துகொள்வதும் எளிதாகத்தான் உள்ளது. அப்படி நிறைய மலையாளப் படங்கள் ரசித்துப் பார்த்திருக்கிறேன். 


பரத்வாஜ்: உங்கள் அப்பாவிடமிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது...?

புனித்: நீ நீயாக இரு என்பதுதான் அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்த பாடம். அவரைச் சுற்றி இருந்த ரசிகர்கள் கூட்டத்தை நான் வேறு யாருக்குமே பார்த்தது கிடையாது. ரசிகர்களின் கோஷங்களை சிறுவயதிலிருந்து கேட்டிருக்கிறேன். இதெல்லாம் என்னப்பா என்பேன்..அவர் ‘ரசிகர்களுடைய அன்பு’ என்பார்.

(மறைந்த நடிகர் புனித்தின் விரிவான பேட்டியைக் காண கீழே உள்ள வீடியோவை க்ளிக் செய்யவும்...)

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget