மேலும் அறிய

Malavika: யோகா செய்யுங்கள்! வலிமையாகுங்கள்! உற்சாகமாக உடற்பயிற்சி செய்து அசத்தும் அஜித் பட நாயகி...

Malavika : 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரட் நடிகை மாளவிகா தன்னுடைய இன்ஸ்டாகிராம் போஸ்ட் மூலம் யோகாவின் முக்கியத்துவம் குறித்து போட்டோவுடன் பகிர்ந்துள்ளார்.

திரையுலகம் எத்தனை எத்தனையோ நடிகைகளை கடந்து வந்திருந்தாலும் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே சினிமாவில் இருந்து விலகிய பிறகும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த கூடியவர்களாக நினைவில் இருப்பார்கள். அந்த வகையில் 90ஸ் காலகட்டத்தில் இளைஞர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை மாளவிகா. தமிழ் சினிமா மட்டுமின்றி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களிலும் நடித்திருந்தார். தன்னுடைய 19வது வயதில் சினிமாவில் அறிமுகமானார்.  

சுந்தர். சி இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியான 'உன்னை தேடி' படத்தில் நடிகர் அஜித் ஜோடியாக அறிமுகமானார் மாளவிகா. அப்படத்தில் அவரின் பெயரிலேயே இடம்பெற்ற மாளவிகா மாளவிகா மனம் கவர்ந்தாய் மாளவிகா... என்ற பாடல் இன்று வரை அனைவரிலும் முணுமுணுக்கப்படும் எவர்கிரீன் சாங். அழகான சிரிப்பு, வசீகரமான முகம், கவர்ந்து இழுக்கும் தோற்றம் என ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் கைப்பிடிக்குள் வைத்திருந்தவர். 

Malavika: யோகா செய்யுங்கள்! வலிமையாகுங்கள்! உற்சாகமாக உடற்பயிற்சி செய்து அசத்தும் அஜித் பட நாயகி...

உன்னை தேடி படத்தை தொடர்ந்து பூப்பறிக்க வருகிறோம், ஆனந்த பூங்காற்றே, ரோஜாவனம், திருட்டு பயலே, சீனு, வெற்றி கொடி கட்டு என ஏராளமான படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் பல படங்களில் செகண்ட் ஹீரோயினாகவும், துணை நடிகையாகவும் நடித்துள்ளார். 'சித்திரம் பேசுதடி' படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்...' என்ற பாடலில் அசத்தலாக நடனமாடி இருந்தார்.

2007ம் ஆண்டு சுரேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு நடிப்புக்கு முழுக்கு போட்டாலும் சோசியல் மீடியா மூலம் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்தார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ள நிலையில் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், ஒர்க் அவுட் புகைப்படங்களை அவ்வப்போது போஸ்ட் செய்து லைக்ஸ்களை குவிப்பார்.

யோகாவில் மிகுந்த ஆர்வம் கொண்ட மாளவிகா, அவர் வில்லாக வளைந்து யோகா செய்யும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் அதனுடன் நீண்ட குறிப்பு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

"பயணம் எப்போதும் எளிதானது அல்ல. ஆனால் யோகாவுக்கு நீங்கள் கொடுக்கும் அர்ப்பணிப்பு உங்களுக்கு எல்லா வகையிலும் வித்தியாசங்களை ஏற்படுத்தும். தினமும் தவறாமல் யோகா செய்வது உங்கள் செடிக்கு தண்ணீர் ஊற்றுவது போல. அது உங்களை நிச்சயம் வலிமையாகவும் உறுதியாகவும் மாற்றும்.

சிரமமான நாட்களில் கூட நீங்கள் செய்யும் ஆசனமும், மூச்சு பயிற்சியும் உங்களை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும். நம்பிக்கையுடன் முயற்சி செய்யுங்கள். முயற்சியை கைவிடாதீர்கள், காலப்போக்கில் அது நேர்மறையான மாற்றத்தை கொண்டு வருவதை உணர்வீர்கள். என்னை நம்புங்கள்! இது உங்களால் முடியும் !" எனக் கூறியுள்ளார்.

View this post on Instagram
 
A post shared by Shweta Konnur Menon (@shwetakonnurmenon)

மாளவிகாவின் இந்த போஸ்டுக்கு அவரின் ரசிகர்கள் பலரும் லைக்ஸ் மற்றும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 RCB vs RR: ஜெய்ஸ்வால் சிறப்பு... ஜோரல் ஜோரான அடி! ஆர்சிபி! பவுலிங்கில் பலம்! 174 ரன்களை எட்டுமா பெங்களூர்?
IPL 2025 RCB vs RR: ஜெய்ஸ்வால் சிறப்பு... ஜோரல் ஜோரான அடி! ஆர்சிபி! பவுலிங்கில் பலம்! 174 ரன்களை எட்டுமா பெங்களூர்?
"டீ சூப்பர்" பற்றி எரியும் முர்ஷிதாபாத்.. உள்ளூர் எம்பி யூசுப் பதான் பதிவால் காண்டான மக்கள்
PMK Anbumani: அதிரும் தைலாபுரம்.. ”ராமதாஸுக்கு அதிகாரமே இல்லை, கூட்டணி எனது முடிவு”  அன்புமணி அதிரடி
PMK Anbumani: அதிரும் தைலாபுரம்.. ”ராமதாஸுக்கு அதிகாரமே இல்லை, கூட்டணி எனது முடிவு” அன்புமணி அதிரடி
இடைநிலை ஆசிரியர் தேர்வு; முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
இடைநிலை ஆசிரியர் தேர்வு; முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Panguni Uthiram Police Issue : ”பெரிய ம***டா நீ.. போடா” பக்தரை கெட்ட வார்த்தையில் திட்டிய போலீஸ்John Jebaraj Arrest : தப்பி ஓடிய ஜான் ஜெபராஜ் தட்டித்தூக்கிய போலீஸ் மூணாறில் அதிரடி கைது : TN Policeநடிகர் ஶ்ரீ-க்கு என்ன ஆச்சு?ஆடை இல்லாமால் வீடியோ பாலின மாற்று சிகிச்சையா? : Sri BluetickAmit shah on Annamalai: தேசிய அரசியலில் அண்ணாஅமலை! பாஜகவில் முக்கிய பதவி! பாராட்டி தள்ளிய அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 RCB vs RR: ஜெய்ஸ்வால் சிறப்பு... ஜோரல் ஜோரான அடி! ஆர்சிபி! பவுலிங்கில் பலம்! 174 ரன்களை எட்டுமா பெங்களூர்?
IPL 2025 RCB vs RR: ஜெய்ஸ்வால் சிறப்பு... ஜோரல் ஜோரான அடி! ஆர்சிபி! பவுலிங்கில் பலம்! 174 ரன்களை எட்டுமா பெங்களூர்?
"டீ சூப்பர்" பற்றி எரியும் முர்ஷிதாபாத்.. உள்ளூர் எம்பி யூசுப் பதான் பதிவால் காண்டான மக்கள்
PMK Anbumani: அதிரும் தைலாபுரம்.. ”ராமதாஸுக்கு அதிகாரமே இல்லை, கூட்டணி எனது முடிவு”  அன்புமணி அதிரடி
PMK Anbumani: அதிரும் தைலாபுரம்.. ”ராமதாஸுக்கு அதிகாரமே இல்லை, கூட்டணி எனது முடிவு” அன்புமணி அதிரடி
இடைநிலை ஆசிரியர் தேர்வு; முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
இடைநிலை ஆசிரியர் தேர்வு; முக்கிய அப்டேட்டை வெளியிட்ட டிஆர்பி!- என்ன தெரியுமா?
WTA 250: என்னப்பா ரெடியா..! சென்னையில் மீண்டும் ஒரு சர்வதேச போட்டி - என்ன விளையாட்டு? எங்கு? எப்போது?
WTA 250: என்னப்பா ரெடியா..! சென்னையில் மீண்டும் ஒரு சர்வதேச போட்டி - என்ன விளையாட்டு? எங்கு? எப்போது?
திருச்சி, சுற்றுவட்டார இளைஞர்களுக்கு தரமான வாய்ப்பு; பாதை விரித்த பிரபல ஐடி நிறுவனம்- இத்தனை பேருக்கு வேலைவாய்ப்பா?!
திருச்சி, சுற்றுவட்டார இளைஞர்களுக்கு தரமான வாய்ப்பு; பாதை விரித்த பிரபல ஐடி நிறுவனம்- இத்தனை பேருக்கு வேலைவாய்ப்பா?!
காமுகனா போதகரா? கேரளாவில் பதுங்கி இருந்த ஜான் ஜெபராஜை தட்டி தூக்கிய காவல்துறை!
காமுகனா போதகரா? கேரளாவில் பதுங்கி இருந்த ஜான் ஜெபராஜை தட்டி தூக்கிய காவல்துறை!
TN Medical College: இல்லாத மாவட்டமே இல்லை..! தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் - எங்கெங்கு தெரியுமா?
TN Medical College: இல்லாத மாவட்டமே இல்லை..! தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் - எங்கெங்கு தெரியுமா?
Embed widget